குற்றவாளிகளாக சிறையில் இருந்தவர்கள் 'பிராமணர்'கள்- 'பிராமணர்'கள் குற்றம் செய்யமாட்டார்களாம்
பி.ஜே.பி. எம்.எல்.ஏ., கூறுகிறார்
பாட்னா, ஆக.21 குஜராத் மாநில கோத்ரா கலவரத்தின்போது பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடுமை செய்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரைக் கொலை செய்த குற்றவாளிகள் விடுதலை தொடர் பாக பேட்டியளித்த - விடுதலை செய்ய பரிந்துரைத்த குழுவில் உள்ள பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் ரவுல்ஜி கூறும் போது, ''குற்றவாளிகள் அனைவருமே பாரம்பரிய 'பிராமண'க் கலாச்சாரத்தைப் பின்பற்றும் சுத்த பார்ப்பனர்கள், அவர்கள் இந்த தவறைச் செய்திருக்க வாய்ப்பே இல்லை. அவர்கள் தவறுதலாக இத்தனை ஆண்டுகாலம் தண்டனை அனுபவித் துள்ளனர்'' என்று கூறியிருந்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் ரவுல் ஜியின் கூற்றுக்கு மாறாக பீகார் மாநிலத் தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
கடந்த மாதம் பீகார் மாநிலத்தில் கடந்த 6 ஆண்டுகளாக மகளை பாலியல் வன்கொடுமை செய்த பார்ப்பன ஆசிரியர் கைதுசெய்யப்பட்டார்
பீகார் மாநிலம் சமஸ்திபூர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலைபார்த்துவரும் வேத்குமார் பாண்டே என்பவர் தனது மகளை 6 ஆண்டுகளாக பாலியல் வன்கொடு மைக்கு ஆளாக்கி உள்ளார்.
இது தொடர்பாக அந்தச் சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார்; ஆனால், அவரது தாயாரோ தந்தையின் தேவையை நிறை வேற்றுவது கடவுளுக்குச் செய்யும் சேவை என்றும் கூறியுள்ளார். அதே நேரத்தில் இதை வெளியே கூறினால் பெரும் கேடு வந்துவிடும் என்றும் சிறுமியின் தாயார் மிரட்டியுள்ளார்.
இதனை அடுத்து சிறுமி தனது உறவினரிடமும் புகார் கூறியபோது, அவரும் ''பிராமணக் கலாச்சாரம் - இதைத் தவறாக நினைக்கக் கூடாது. இதில் தவறு ஒன்றும் இல்லை. நீ உனது தந்தையால் படைக்கப்பட்டாய்; அவ ருக்கு சேவை செய்வது உனது கடமை'' என்று கூறிவிட்டார். சுமார் 5 ஆண்டு களாக கொடுமைகளைச் சந்தித்து வந்த சிறுமி, தனது தோழியிடம் இதுபற்றிக் கூற, தோழி தன்னிடம் இருந்த அலைபேசியை அவரிடம் தந்து ''இதில் பதிவு செய்து காவல்துறையினரிடம் கொண்டு செல்'' என்று கூறினார்.
இதனை அடுத்து அந்தச் சிறுமி தனது தந்தையின் அசிங்கமான நடவடிக்கையை காணொலியில் பதிவு செய்து காவல் துறையினரிடம் கொடுத்துள்ளார். ஆனால், காவல்துறையினரும் ''இதை எல்லாம் வெளியே சொல்லக் கூடாது, உனது எதிர்காலம் என்ன ஆகும் தெரி யுமா?'' என்று கூறி சிறுமியை விரட்டி விட்டனர். மேலும் அவர்கள் வீட்டிற்குச் சென்றும் இது குறித்து கூறியுள்ளனர்.
இதனால் கோபமடைந்த தாய் - தந்தை இருவருமே சிறுமியை அடித்துத் தாக்கியுள்ளனர். இந்த நிலையில் சிறுமி எடுத்த காட்சிப் பதிவை அவரது தோழி சமஸ்திபூர் மாவட்ட ஆட்சியரிடமும், காவல் கண்காணிப்பாளரிடமும் கொண்டு சேர்க்கச் சொல்லி சமூக வலைதளத்தில் பதிவு செய்தார்.
இந்த விவகாரம் மாவட்ட காவல்துறை ஆணையர் சஹியார் அக்தார் பார் வைக்குச் சென்ற உடன், உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளியான பார்ப்பன தந்தையை கைது செய்தார், மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியை அரசு பெண்கள் நல விடுதியில் சேர்க்க உத்தர விட்டார். இது தொடர்பாக சிறுமியின் தாயார் மற்றும் உறவினர்களிடம் விசா ரணை நடத்திவருவதாக காவல்துறை ஆணையர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக