ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி: அரசாணை வெளியீடு


சென்னை, ஜூலை 28- தமிழ்நாட்டி லுள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளி களில் காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட் டுள்ளது.

திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் ஓராண்டு நிறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், அரசுப் பள்ளி மாணவர் களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், இதில் முதல்கட்டமாக மாநக ராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையுள்ள மாண வர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதன்படி 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர் களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப் படவுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிற்றுண்டி திட்டத்தில் வழங்கப் படும் உணவின் விவரம்: திங்கள் - அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்.

செவ்வாய் - ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி.

புதன் - வெண் பொங்கல், ரவா பொங்கல் + காய்கறி சாம்பார்.

வியாழன் - அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்

வெள்ளி - ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி + ரவா கேசரி, சேமியா கேசரி.

வாரத்தில் குறைந்தது 2 நாட்கள் உள்ளூர் சிறு தானியங்களைக் கொண்டு காலை சிற்றுண்டி வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக