ஒரு லட்ச ரூபாய் சந்தாவுடன் வாழ்த்து!
‘விடுதலை' ஆசிரியராக மானமிகு கி.வீரமணி அவர்கள் பொறுப்பேற்று 60 ஆண்டுகள்!
இன்றுதான் (10.8.1962) ‘‘வரவேற்கிறேன்!'' என்ற தலைப்பில் தந்தை பெரியார் அவர்கள் நமது ஆசிரியரை வரவேற்று அறிக்கை வெளியிட்டார்.
இந்த வரலாற்றுச் சிறப்பைப் பசுமையாக நினைவு கூர்ந்து ‘விடுதலை' - பெரியார் திடல் பணியாளர்கள் அனைவரும் ஆசிரியர் அவர்களை வரவேற்றனர்.
‘விடுதலை'க் குழுமத்தின் சார்பில் ‘விடுதலை' சந்தா தொகையாக ரூபாய் ஒரு லட்சத்தை அளித்து, ஆசிரியர் அவர்களுக்கு சால்வை அணிவித்தார் ‘விடுதலை' பொறுப்பாசிரியர் கலி.பூங்குன்றன்.
தந்தை பெரியார் வாழ்க, அன்னை மணியம்மையார் வாழ்க, தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்க! வென்றெடுப் போம், வென்றெடுப்போம் ‘விடுதலை'யை வென்றெடுப் போம் என்று ‘விடுதலை'ப் பணிமனையினர் முழக்கமிட்டனர்.
‘விடுதலை' ஆசிரியர் உரையாற்றுகையில்,
‘‘உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு ‘விடுதலை' யைச் சிறப்பாக நடத்தி வருகிறோம். நான் ஆசிரியராக வந்தபோது மொத்த பணியாளர்களே நால்வர்தான். இன்று கிட்டத்தட்ட 200 பேர் பணிபுரிகிறோம்.
‘விடுதலை'யில் அறிக்கை, தலையங்கங்கள் எழுது பவர் எவ்வளவு முக்கியமோ, அதுபோலவே, சந்தா அனுப்பி வைக்க பசை ஒட்டும் தோழர் வரை அனைவரும் மிக முக்கியமானவர்கள். 60 ஆயிரம் ‘விடுதலை' சந்தா அளிப்ப தில், ‘விடுதலை' பணிமனைத் தோழர்களின் பங்கும் இருப்பது கண்டு மகிழ்கிறேன், நன்றி'' என்று கூறினார் ஆசிரியர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக