தமிழ் மலர்

மனிதப்பற்று, தன்மானம், பகுத்தறிவு, சரிநிகர், இனவுணர்வு, மொழி உணர்வு இவற்றிற்காகவும் நலவாழ்வு,வரலாறு மற்றும் சிந்தனைத் தூண்டலுக்காகவும் பயன்பட

பக்கங்கள்

  • முகப்பு
  • பெரியார் உலகம்
  • சுயமரியாதை உலகு
  • பகுத்தறிவு உலகு
  • சமூக நீதி
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • திராவிடர் இனம்
  • தமிழ் உலகு
  • சிந்தனை செய்வோம்
  • மகளிர் மாண்பு
  • தென் சென்னை திராவிடர் கழகம்

வியாழன், 18 ஆகஸ்ட், 2022

திருப்பத்தூரில் ஒரு திருவிழா... (விடுதலை சந்தா)



  August 18, 2022 • Viduthalai

தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை விடுதலை சந்தா தொகை வழங்கி அசத்திய திருப்பத்தூர் மாவட்டம்.

'பயணங்கள் முடிவதில்லை' வெற்றிகரமாக ஓடிய ஒரு திரைப்படத்தின் பெயர்.அதே நேரத்தில்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு சொற்றொடர்.

9 வயதில் தொடங்கிய  அவருடைய பொதுவாழ்க்கை சுற்றுப்பயணம் 89 முடிந்து 90 ஆம் ஆண்டு தொடங்கு கின்ற இந்த காலகட்டத்திலும், முடிவுறாத நெடும் பயணமாக இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

தொடர்ந்து வரும் அந்த நெடும் பயணத்தில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் அய்யா மேற்கொண்டிருக்கும் பயணம் 'விடுதலை'  சந்தா சேர்ப்புக்கான சுற்றுப்பயணம்.

1962இல் தொடங்கி கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக, தான் ஆசிரியராக பணியாற்றிய விடுதலை இதழுக்கான சந்தா சேர்ப்பு சுற்றுப்பயணத்தில் ஆசிரியரே ஈடு பட்டுள்ள சிறப்புமிக்க சுற்றுப்பயணம்.

ஓய்வு ஒழிச்சலின்றி உழைக்கும் ஆசிரியர்

இன்னும் சில மாதங்களில் 90 வயதை நெருங்குகின்ற இந்த நிலையிலும் ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்துக் கொண்டிருக்கிறாரே என்று எங்களைப் போன்ற இயக்கத் தொண்டர்கள், ஆசிரியர் மீது மாறாத அன்பும் பாசமும் வைத்துக்கொண்டிருக்கும் சான்றோர் பெரு மக்கள் எல்லாம் கவலையோடு நினைத்துக் கொண்டே தான் இருக்கிறோம்.. கரோனா கூட  வந்து ஆசிரியரை ஒருமுறை  நலம் விசாரித்துவிட்டு சென்றிருக்கிறது.

ஒருமுறை மருத்துவர்களாக இருக்கின்ற எங்கள் பிள்ளைகள் ,மற்றும் அவர்களுடைய மருத்துவ நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தபொழுது,நான் இந்த கவலையைஅவர்களிடம் வெளிப்படுத்தினேன்.

அப்பொழுது என் மகன் சொன்னார், "அம்மா நீங்கள் கவலைப்படுவது இயற்கைதான். ஆனால் அதனால் பயன் ஒன்றும் கிடையாது. அவர் இயக்க ஓட்டத்தை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. 

ஏனென்றால் உலகில் பொதுவாழ்க்கைக்கு வந்த தலைவர்களில் யாருக்குமே இல்லாத ஒரு வாழ்க்கை வரலாறு ஆசிரியர் அய்யாவுக்கு மட்டுமே இருக்கிறது. ஒன்பது வயதில் பொது வாழ்க்கைக்கு வருகிறார்  .தந்தை பெரியாரை சந்திக்கிறார்.

தன்னுடைய தந்தைக்கு அடுத்ததாக மிகப் பெரிய ஆளுமையாக தந்தை பெரியாரை ஆராதிக்க தொடங்கி விடுகிறார்.

ஏற்கெனவே தாயை இழந்த நிலையில் நெருக்கமான தாயாகவும் தந்தை பெரியாரையே நினைக்கிறார். 

பள்ளி நேரங்கள் தவிர்த்து அதிகமான நேரங்களில் நெருக்கமான தோழராக தந்தை பெரியார் உடனேயே இருக்கிறார்.

தந்தை பெரியாரின் ஒவ்வொரு அசைவுகளும் நடவடிக்கைகளும் சிறுவனாக இருக்கின்ற பொழுதிலிருந்தே அவருடைய மனதில் அழுத்தமாக பசுமரத்தாணி போல் பதிந்து போய் இருக்கின்றன.

அய்யாவின் அடிச்சுவட்டில்தான்...

ஆசிரியர் அய்யா 9 வயது சிறுவராகவும், தந்தை பெரியார் 64 வயது முதியவராகவும் இருக்கின்ற கால கட்டத்தில் தொடங்குகின்ற இந்த பந்தம் அய்யா அவர் கள் 1973 ஆம் ஆண்டு இறக்கும் வரை தொடர்ந்திருக் கிறது,

அய்யா அவர்கள் மறைந்த பிறகும் தமிழர் தலைவர் அவர்கள் வைத்த ஒவ்வொரு அடியும் அய்யாவின் அடிச்சுவட்டில் தான்.

அந்த அடிப்படையில் பார்த்தால் தன்னுடைய 80களில் தந்தை பெரியார் எப்படி உழைத்துக் கொண்டி ருந்தாரோ அதே போலதான் ஆசிரியர் அய்யா அவர்களும் தன்னுடைய எண்பதாவது வயதிலும் உழைத்து இருந்திருப்பார்,

அதே நிலைதான் இன்றும் 89ஆவது வயதில் தந்தை பெரியார் அவர்கள் எப்படி இருந்தாரோ அப்படியேதான் ஆசிரியர் அய்யா அவர்கள் இப்பொழுது இருக்கிறார். நாளையும் இப்படித்தான் இருப்பார். 

Because Thanthai Periyar is not only his philosophical father but also his permanent Role Model, admiring hero since his childhood days.

அவருடைய இந்த இயக்க ஓட்டத்தை  உங்கள் யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்று என் மகன் சொன்னார்.

நான் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். தமிழர் தலைவர் அவர்களின் பயணத் திட்டங்களை நேர ஒதுக்கீடுகளை ஒழுங்குபடுத்தும் தோழர் வீ.அன்புராஜ் அவர்களின் பணி என்பது எவ்வளவு ஒரு கடுமையான அதேநேரத்தில் சவாலான பணி என்று. கரோனா காலகட்டத்தில் மட்டும் தான், வேறு வழியின்றி காணொலி வழியாக மட்டும் தோழர்களை சந்தித்து இயக்கப் பணிகளை தொடர்ந்துகொண்டு இருந்தார்.

தமிழர் தலைவர் அடைந்த மகிழ்ச்சி!

கரோனா தடைக்காலம் முடிந்த உடனேயே ஆரம் பித்த இயக்கப் பணி, மாநாடுகளாய் ஆர்ப்பாட்டங்களாய் போராட்டங்களாய், நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து தொடர் சுற்றுப்பயணமாக தொடர்ந்த நிலையில்,  விடு தலை சந்தா சேர்ப்பு சுற்றுப் பயணத்தை அவசரமாக மேற்கொண்டு வந்த நேரத்திலே 14/8/2022 அன்று திருப்பத்தூரில்  நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டம் ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியை தமிழர் தலைவருக்கு தந்திருக்கின்றது..

பொதுக்குழு முடிந்த ஓரிரு நாட்களில் 29/7/2022 அன்று ஓசூரில் திராவிடர் கழக மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு குணசேகரன் அவர்களும் ,அமைப்புச் செயலாளர் ஜெயராமன் அவர்களும் ஓசூர் திராவிடர் கழகத் தோழர்களும் இணைந்து 'விடுதலை' சந்தா சேர்ப்புப் பணியை துவக்கி நடத்தினார்கள்.

தொடர்ந்து தருமபுரி கிருஷ்ணகிரி கழக மாவட் டங்கள் சிறப்பான முறையில் முதல்கட்ட சந்தா சேர்ப்பை  முடித்தார்கள்.

2/8/2022 அன்று நடைபெற்ற 'விடுதலை' சந்தா சேர்ப்பு அவசர கலந்துரையாடல் கூட்ட முடிவின் படி தமிழர் தலைவரின் சுற்றுப்பயணம், மாநில மண்டல பொறுப்பாளர்கள் உள்ளடக்கிய  சுற்றுப்பயண குழுக் கள் அறிவிக்கப்பட்டன.

11/8/2022 அன்று ஈரோட்டில் முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழர் தலைவர் அவர்கள் 14/8/2022 அன்று திருப்பத்தூரில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

அதுவரையிலும் எந்த கழக மாவட்டத்திலும் சேர்க்காத அளவிற்கான விடுதலை சந்தா தொகையை, மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன்,  மாநில மகளிர் அணி பொருளாளர் சகோதரி அகிலா எழிலரசன் அவர்கள் தலைமையிலான திருப்பத்தூர் மாவட்ட தோழர்கள் அய்யா அவர்களுக்கு  வழங்கி மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கிறார்கள்.

தமிழர் தலைவர் எடைக்கு ரூ.20,15,000 அளித்து அசத்தினர்

தமிழ்நாட்டில்  உள்ள பல மாவட்டங்கள் அதிக அளவில் விடுதலை சந்தாக்களை அளித்து இருந்தாலும் அவை எல்லாம் ஒரு மணிமகுடத்தில்  தங்கக் கற்களாக, மாணிக்க கற்களாக  ஜொலித்தாலும், அவைகளுக்கும் மேலாக கிரீடத்தின் மேல் முகப்பில் வைக்கப்பட்டு கண்கள் கூசும் அளவில் பிரகாசமான ஒளி வீசும் ஒற்றை வைரக்கல்லாக திருப்பத்தூர் மாவட்டம் ஜொலிக்கிறது.

உலகில் வேறு எந்த தலைவருக்கும் வழங்கப்பட்டி ருக்காத பொது வாழ்க்கைப் பரிசாக, தமிழர் தலைவரின் எடைக்கு எடை, அவர் ஆசிரியராக இருந்த விடுதலை இதழுக்கு சந்தா தொகையை நீதிக் கட்சியின் சின்னமாக விளங்கிய தராசில் அவரை அமர வைத்து அசத்தி இருக்கின்றனர்  திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழ கத் தோழர்கள்.

தமிழர் தலைவர் மேற்கொண்ட சுற்றுப் பயணங் களின் அத்தனை களைப்பையும் அயர்ச்சியையும் போக்குகின்ற அருமருந்தாக ரூபாய் 20 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் சந்தா தொகை அளித்து இருக்கின்ற திருப்பத்தூர் கழக மாவட்ட தோழர்களுக்கு மிகுந்த நன்றி! நன்றி! நன்றி என்று எத்தனை நன்றி சொன்னாலும் தகும் என்று நம்முடைய நன்றிகளை தெரிவிக்கின்றோம்.

கூட்டம் முடிந்து ஆசிரியர் அவர்கள் கிளம்புகிற நேரத்தில், ஒரு தந்தையைக் கவனித்துக் கொள்ளும் மகளைப் போல எப்பொழுதும் அவருக்கு சரியான முறையில் அக்கறையோடு உணவு தயாரித்து வழங்கும் அகிலா, ஆசிரியர் கேட்டுக்கொண்டபடி, ஆசிரியருக் கான உணவையும் அவருடைய வண்டியிலேயே வைத்து அனுப்பினார்கள்.

உணவகமாக பெட்ரோல் நிலையம்

ஆசிரியர் அவர்களின் வாகனத்தோடு வந்த வேறு ஒரு வண்டியில் நாங்கள் சென்னை  வந்து கொண்டிருந்த பொழுது ஆசிரியர் அவர்கள் எந்த இடத்தில் உணவு எடுத்துக் கொள்வாரோ என்று நினைத்துக் கொண்டே வந்தேன் .

இரவு 10 மணிக்கு மேல் சாலையோரம் இருந்த ஒரு பெட்ரோல் பங்க் அருகே ஆசிரியர் அவர்களின் வாகனம்   நின்றது.

நான் சிறுமியாக இருந்த பொழுது ஒரு சினிமாப் பாடலை  என் அம்மா பாடுவார்கள்.

ஆனாக்க அந்த மடம்!

ஆகாட்டி சந்த மடம்!

அதுவும்கூட இல்லாட்டினா 

பாட்டு பாட இந்த இடம்!

என்று தான் நிற்கின்ற இடத்தையே தன் சொந்த இடமாக நினைத்து  நடனம் ஆடுகின்ற கூத்தாடி பெண் பாடுவதாக அந்த பாடல் இருக்கும்.

அதைப்போல பெட்ரோல் நிலையத்தையே ஒரு உணவகமாக எடுத்துக் கொண்டு ஆசிரியர் அவர்கள் வாகனத்திற்கு உள்ளேயே  உடை மாற்றிக்கொண்டு சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.

நாங்கள் எல்லாம் வெளியே நின்று சாப்பிட்டோம். எனக்கு மட்டும் இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது.

பிராட்லா மற்றும் ஓட்டுநர் தோழர்கள் எல்லாம் பலமுறை அனுபவம் பெற்றவர்கள் போல அவர்கள் பாட்டுக்கு இயல்பாக எல்லா வேலையும் செய்து கொண்டிருந்தார்கள் .

எனக்கு வியப்பாக இருந்தது.

எனக்கு ஏற்கெனவே இது போன்ற ஒரு அனுபவம் உண்டு.

ஒருமுறை பெங்களூருவில் காலையில் ஆசிரியர் அவர்கள் நிகழ்ச்சி.

அதே நாள் மாலையில் தஞ்சாவூரில் நிகழ்ச்சி.

பெங்களூரு நிகழ்ச்சி முடிந்து  உடனடியாக ஆசிரியர் அவர்கள் கிளம்பிவிட்டார்கள். பெங்களூரு வில் இருந்து  தஞ்சாவூர் செல்லும் வழியில் தருமபுரி வரை தமிழர் தலைவர் அவர்களின் வாகனத்தில் பயணித்தோம்.

நேரப் பற்றாக்குறை காரணமாக மதிய உணவை பெங்களூருவிலேயே சாப்பிட முடியாத நிலைமை. 

ஆசிரியருக்கு என்று தனியாக வீட்டு சமையல் செய்ய முடியாத அளவிற்கான ஒரு சூழல்.

பெங்களூரு தோழர்களிடம் விடை பெறுகின்ற பொழுது ஆசிரியர் அவர்கள் சொன்னார்கள், "தோழர்களுக்கு கொடுத்து அனுப்புகின்ற உணவு பொட்டலங்களோடு சேர்த்து எனக்கு ஒரு தயிர்ச்சோறு பொட்டலத்தையும்   அனுப்புங்கள். நான் வழியில் எங்கோ ஒரு இடத்தில் சாப்பிட்டுக் கொள்கிறேன்" என்று சொன்னார்கள்.

காவேரிப்பட்டினம் தாண்டியதும் ஓரிடம்.

அந்த இடத்திலேயே அவர்கள் வண்டியை நிறுத்தி வண்டிக்குள்ளேயே அமர்ந்து கொண்டு அவருக்கான அந்த தயிர்ச் சோறு பொட்டலத்தை பிரித்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.

நாங்களும் பொட்டலங்களை பிரித்து மர நிழல்களில் அமர்ந்து கொண்டு சாப்பிட ஆரம்பித்தோம்.

ஆசிரியர் அவர்கள் அந்த தயிர்ச்சோறு பொட்ட லத்தைக் கையில் வைத்துக்கொண்டு சாப்பிடுவதைப் பார்க்க பார்க்க எனக்கு அழுகையே வந்துவிட்டது.

அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

அன்று இரவு முழுக்க இதை நினைத்து நினைத்து நீண்ட நேரம் தூக்கம் வரவில்லை.

அருகில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த தோழர் ஜெயராமன் அவர்களை எழுப்பி இதனை பகிர்ந்து கொண்ட பொழுது அவர் சொன்னார் ,"செல்வி ஏதோ ஒரு நாள் வந்து பார்த்து அதற்கு எவ்வளவு வருத்தப்படு கிறாய். எங்களுக்கெல்லாம் கூட முதலில் பார்க்கும் போது அப்படித்தான் இருந்தது .. பிறகு பார்த்து பார்த்து பழகி விட்டது" என்று  சொல்லிவிட்டு உறங்க ஆரம் பித்து விட்டார். உறங்குவதில் அவர்  மன்னர். அதே நேரத்தில் தமிழர் தலைவர் அவர்களை ரயில் நிலையங் களில் இரவு நேரங்களில் அழைக்க செல்லும் போதும் சரி. மாநாடுகள்  நடத்துகின்ற நேரங்களிலும் சரி. இரவு முழுக்க முழுக்க விழித்து இருக்கின்ற பழக்கமும் அவரிடம் உண்டு  .

ஆசிரியர் அவர்களைப் போன்ற ஒரு எளிமையான தலைவரை, கடுமையாக உழைக்க கூடிய ஒரு தலை வரை நாம் பெற்றிருக்கிறோம் என்பதை நினைத்து நினைத்து எனக்கு பெருமையாக இருந்தது.

ஆசிரியரின் கடும் உழைப்பு

ஆசிரியர் அய்யா அவர்களின் இந்த கடுமையான உழைப்பு யாருக்காக ?

யாருக்காக? இது யாருக்காக?

இந்த மாளிகை வசந்த மாளிகை!

யாருக்காக?

நம் தமிழர் தலைவரின் உழைப்பு என்பது, இந்த நாட்டில், மதத்தின் பெயரால் ஜாதியின் பெயரால் குடிசைகளிலும் குப்பைக் கூளங்களிலும், வீதிகளிலும்,  மட்டுமே வசிக்கும் படி வைக்கப்படிருக்கும் லட்சக் கணக்கான வறிய மக்களை, கல்வியறிவாலும், வேலை வாய்ப்புகளாலும்  மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்று அவர்களையும் வசந்த மாளிகைகளில் வாழ வைப்பதற்காகத்தான்.

இன்னொருபுறம் நம்முடைய துணைத் தலைவர் கவிஞர் அவர்கள் இந்த விடுதலை இதழுக்காக இரவு பகல் பாராது உழைத்துக் கொண்டிருக்கிறார்.

நாங்கள் கூட கவிஞர் அவர்களிடம் சொல்லுவோம், "அய்யா உங்களுக்கு இரண்டு வாழ்விணையர்கள். முதலாமவர் அக்கா வெற்றிச்செல்வி. இரண்டாவது விடுதலை இதழ். இரண்டாவது இணையரோடு தான் அய்யா நீங்கள் நீண்ட நேரம் செலவிடுகிறீர்கள்" என்று.

கவிஞர் உடல் நலம் சரியில்லாத நிலையிலும் கூட தன்னுடைய மகள் வீட்டிலிருந்தபடியே விடுதலை இதழுக்காக உழைத்துக் கொண்டே இருந்தார். 

தமிழர் தலைவர் அவர்களும் துணைத் தலைவர் கவிஞர் அவர்களும் 'விடுதலை' இதழில்  எழுதுகின்ற கருத்துகள், அறிக்கைகள், எல்லாம் யாருக்காக எழுதப்படுகின்றன என்றால் அடித்தட்டு மக்களுக்கும், ஆர்.எஸ்.எஸ்.  என்னும் பேரபாயத்தால் எளிதாக, அவர்களுக்கு இரையாகும் ஆபத்தில் உள்ள கிராமப்புற ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்காகவும் எழுதப்படுகின்றன.

காலம் நமக்கு அளித்துள்ள பணி!

'விடுதலை' இதழின் அத்தனை விளைச்சலும், எங்கு சென்றடைய வேண்டுமோ அங்கு சென்றடைய, விடுதலை இதழைப் பரப்ப வேண்டியது ஒரு முக்கிய வரலாற்றுக் கடமை.

எனவே 'விடுதலை' இதழ் சந்தா சேர்ப்புப் பணியில் ஒவ்வொருவரும் தங்களை சர்வபரித் தியாகம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு முழுமையாக ஒப்படைத் துக் கொண்டு பணியாற்ற வேண்டியது ,ஆர்எஸ்எஸ் என்னும் பேரபாயம் நாட்டை சூழ்ந்து கொண்டுள்ள இந்தக் காலம் நமக்கு அளித்துள்ள பணி.

அதனை மிகச் சரியாக உணர்ந்து விடுதலை சந்தா சேர்ப்பில் முதலிடம் வகிக்கின்ற திருப்பத்தூர் கழக மாவட்ட தோழர்களுக்கும் அவர்களை மிகச் சிறப்பாக வழி நடத்தும் மாவட்ட தலைவர் கே.சி எழிலரசனுக்கும் தோழியர் அகிலாவுக்கும் நன்றி! நன்றி! நன்றி!

திருப்பத்தூர் காட்டிய திசைவழியில் செல்வோம். 

வீடுதோறும் ‘விடுதலை'

ஆசிரியர் அய்யா அவர்களுக்கு விடுதலை சந்தா தொகையை அவருடைய எடைக்கு எடைக்கு வழங்கியதை பார்த்து பொறுக்கமாட்டாத சங்கிகள் வயிறு எரிந்து கொண்டிருக்கிறார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி சொல்வது போல நம்முடைய எதிரிகளும் இந்த விடுதலை சந்தா சேர்ப்பதற்கான விளம்பரத்தை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

'வீடு தோறும் விடுதலை 

மக்கள் உள்ளம் தோறும் பெரியார்' 

என்ற தமிழர் தலைவரின் 

விடுதலைப் பதாகையை 

வெற்றிப் பதாகை ஆக்குவோம்.

ஆயிரமாயிரமாய் ,இறுதியில் அறுபதாயிரமாய் வந்து குவியட்டும் விடுதலை சந்தாக்கள்...

வாழ்க பெரியார்

வளர்க அவர்தம் பகுத்தறிவு..

இடுகையிட்டது parthasarathy r நேரம் 8:48 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: எடைக்கு எடை, சந்தா, திருப்பத்தூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

செங்காந்த மலர்

செங்காந்த மலர்
தமிழ் நாட்டு மலர்
Powered By Blogger

இலங்கை பயணம்

இலங்கை பயணம்
யாழ்ப்பாணத்தில் வரவேற்பு

தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு அளிக்கவேண்டிய நிதியை அளிக்க மறுப்பது தி.மு.க. ஆட்சிக்கு நிதி நெருக்கடியை உண்டாக்கும் நோக்கம்தானே! ஒன்றிய அரசின் போக்கைக் கண்டித்து வரும் 3 ஆம் தேதி கழக மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

எனக்கு பிடித்தவை

  • 2.வாழ்வியல் சிந்தனைகள்
  • 1.தமிழர் தலைவர்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

பின்பற்றுபவர்கள்

Translate மொழிபெயர்

Wikipedia

தேடல் முடிவுகள்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • உமா மகேஸ்வரனார் பெயரன் த.கு. திவாகரனாரின் பவழ விழா கவியரங்கம் (கன்னிமேரா நூலகம்)
    சென்னை எழும்பூர் கன்னிமேரா நூலக அரங்கில் 21.12.2024 முற்பகல் 9.30 மணி அளவில் "கலசலிங்கம்- ஆனந்த சேவா சங்கம்" ஏற்பாட்டி...
  • போராட்டம் தீவிரமாகிறது! பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்து – தார் பூசி அழித்த தி.மு.க.வினர்
    விடுதலை நாளேடு Published February 25, 2025 பொள்ளாச்சி, பிப். 25- –ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கி...
  • ‘‘அம்பேத்கர்! அம்பேத்கர்! அம்பேத்கர்! அம்பேத்கர்!” சிறப்புக் கூட்டத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுச்சியுரை!
    புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்ததில் அன்றைக்கு அருண்சோரி, இன்றைக்கு அமித்ஷா – ‘‘அம்பேத்கர்! அம்பேத்கர்! அம்பேத்கர்! அம்பேத்கர்!” Published D...
  • காமராஜரைப் பட்டப் பகலில் கொலை செய்ய முயன்ற கூட்டம் எது?
      கருஞ்சட்டை கவிஞர் கலி.பூங்குன்றன் விடுதலை நாளேடு Published November 19, 2024 கருஞ்சட்டை புதுவையின் துணை நிலை ஆளுநராக இருந்து விட்டு, பிறகு...
  • ‘‘தீபாவளி’’யைக் கொண்டாடுபவர்களின் சிந்தனைக்குச் சில செய்திகள்!
    விடுதலை நாளேடு Published October 29, 2024   ‘‘தீபாவளி’’ வந்தது திருமலை நாயக்கன் காலத்தில்தான் – சோழர் காலத்தில் கிடையாது! ஒரே பண்டிகைக்குப்...
  • துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனியுடன் ஒரு நேர்காணல்
    இயக்க மகளிர் சந்திப்பு (28) மனுதர்மத்தை எரித்ததால் ஒன்றரை ஆண்டுகள் வழக்கு! Published August 24, 2024, விடுதலை ஞாயிறு மலர் வி.சி.வில்வம் ஒரு ...
  • ஹிந்தி பேசும் மாநிலங்களில் 90 சதவீதம் பேருக்கு வேறு மொழி தெரியாது ஆய்வில் அதிர்ச்சி தகவல்
    விடுதலை நாளேடு Published March 7, 2025 புதுடில்லி, மார்ச் 7  தாய்மொழியுடன் ஆங்கில கல்வி பெற்றவர்களின் வாழக்கைத் தரம் மேம்பட்டுள்ளதாக நெதர்லா...
  • இந்நாள் – அந்நாள் (30.1.1948) காந்தியார் படுகொலை தப்பி ஓட முயன்ற நாதுராம் கோட்சே!
    Published January 30, 2025 இந்திய வரலாற்றில் பெரும் மதக்கலவரம் மூழ்வதை தடுத்து நிறுத்த முக்கிய காரணமாக இருந்தவர்கள் ரகுநாத் நாயக் மற்றும் ஹெ...
  • புதுடில்லியில் தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்!! ராகுல்காந்தி, அகிலேஷ் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரை! திராவிட மாணவர் கழகம் பங்கேற்பு!
      புதுடில்லியில் தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்!! ராகுல்காந்தி, அகிலேஷ் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரை! திராவிட மாண...
  • பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மருத்துவர் இரா. கவுதமன் பவள விழா – புத்தக வெளியீடு
    விடுதலை நாளேடு Published October 6, 2024   பெரியார் மருத்துவக் குழும இயக்குனர் மருத்துவர் இரா. கவுதமன் அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் (ப...

லேபிள்கள்

  • 10% ஒதுக்கீடு
  • 100 நாள் வேலை
  • 100நாள்வேலை
  • 2020
  • 2021
  • 2024
  • 27%
  • 60 ஆண்டு
  • 7 திட்டங்கள்
  • 91
  • அக்னிபாதை
  • அகவிலைப்படி
  • அஞ்சலகம்
  • அண்ணா
  • அண்ணா பல்கலை
  • அண்ணா பல்கலைக்கழகம்
  • அண்ணாமலை
  • அணி
  • அதிபர்
  • அதிரடி அன்பழகன்
  • அநீதி
  • அபராதம்
  • அபாயம்
  • அம்பத்தூர்
  • அம்பேத்கர்
  • அமிர்தலிங்கம்
  • அமிர்ஷா
  • அமெரிக்கா
  • அமைச்சர்
  • அய்.அய்.டி
  • அய்.அய்.டி.
  • அய்.ஏ.எஸ்.
  • அய்.நா.
  • அய்.பி.எஸ்
  • அய்தராபாத்
  • அயோத்திதாசர்
  • அயோத்திதாசர் மணி மண்டபம்
  • அர்ச்சகர்
  • அர்ச்சகர் உரிமை
  • அரக்கோணம்
  • அரசமைப்பு சட்டம்
  • அரசாணை
  • அரசு
  • அரசு அலுவலகங்கள்
  • அரசு அறிவிப்பு
  • அரசுப் பணி
  • அரபு மொழி
  • அவதூறு
  • அவமதிப்பு
  • அளிப்பு
  • அறநிலையத் துறை
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிவிப்பு
  • அறைஞாண்
  • அன்பழகனார்
  • அனுமதி மறுப்பு
  • அனுமான்
  • அனைத்து கட்சி கூட்டம்
  • அனைத்து சாதியினர்
  • அனைத்து ஜாதி
  • அனைத்து ஜாதியினர்
  • அனைத்துக் கட்சிக் கூட்டம்
  • அனைத்துக்கட்சி
  • அனைத்துக்கட்சி கூட்டம்
  • அஷ்டமி நவமி
  • ஆ.ராசா
  • ஆகமம்
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் பேட்டி
  • ஆசிரியர்அறிக்கை
  • ஆட்சி
  • ஆணை
  • ஆந்திரா
  • ஆபத்து
  • ஆய்வரங்கம்
  • ஆய்வுக்குழு
  • ஆயுத பூஜை
  • ஆயுர்வேதம்
  • ஆர்.எஸ்.எஸ்
  • ஆர்ப்பாட்ட அறிவிப்பு
  • ஆர்ப்பாட்டம்
  • ஆர்பாட்டம்
  • ஆரப்பா
  • ஆரியம்
  • ஆரியர்
  • ஆவணம்
  • ஆளுநர்
  • ஆளுநர் விருந்து
  • ஆன்மிக சொற்பொழிவு
  • ஆன்மீகம்
  • ஆனந்த விகடன்
  • ஆனைமுத்து
  • இ.டபில்யூ.எசு
  • இச்சை
  • இசை
  • இட ஒதிக்கீடு
  • இட ஒதுக்கீடு
  • இடிப்பு
  • இணையதளம்
  • இந்தி
  • இந்தி அழிப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்திய இராணுவம்
  • இந்து சட்டம்
  • இந்து தமிழ் திசை
  • இந்து தமிழ்திசை நாளேடு
  • இந்து திருமணம்
  • இந்து நாளேடு
  • இந்து மாநாடு
  • இந்துத்துவா
  • இந்துமதப் பண்டிகைகள்
  • இந்துமதம்
  • இமாம் பசந்த்
  • இரங்கல்
  • இரங்கல் அறிக்கை
  • இரயில் எரிப்பு
  • இரயில்வே
  • இராசு
  • இராமராஜ்யம்
  • இராமன்
  • இராமன் பாலம்
  • இராமாயணம்
  • இராஜஸ்தான்
  • இல்லத்திறப்பு
  • இலங்கை
  • இலவசம்
  • இளங்கோவன்
  • இளைஞர் அணி
  • இன்பக்கனி
  • உ.வே.ச
  • உச்ச நீதிமன்ற தீர்ப்பு
  • உச்சநீதிமன்றம்
  • உடல்
  • உடைப்பு
  • உத்திரமேரூர்
  • உதயநிதி
  • உயர் நீதிமன்ற தீர்ப்பு
  • உயிரிழப்பு
  • உரம்
  • உரிமை
  • உரிமைத்தொகை
  • உரை
  • உலகத் தமிழ் மாநாடு
  • உள்ஒதுக்கீடு
  • உறுதிமொழி
  • ஊத்துக்கோட்டை
  • ஊதியம்
  • ஊரக வளர்ச்சி
  • எச்சரிக்கை
  • எடைக்கு எடை
  • எதிர்ப்பு
  • எழுத்தியல்
  • எழும்பூர்
  • எழும்பூர் ரயில் நிலையம்
  • என்எல்சி
  • ஒப்பீடு
  • ஒப்புதல்
  • ஒரே மொழி
  • ஒற்றை பத்தி
  • ஒற்றைப் பத்தி
  • ஒற்றைப்பத்தி
  • ஒன்றிய அரசு
  • ஓசூர்
  • ஓதுவார்
  • ஓபிசி
  • ஓய்வூதியம்
  • க்யூஆர் கோட்
  • கச்சத்தீவு
  • கட்டுமானத் தொழிலாளர்
  • கடவுள்
  • கடவுள் மறுப்பு
  • கடன்
  • கடிதம்
  • கண்டணம்
  • கண்டன ஆர்ப்பாட்டம்
  • கண்டனம்
  • கம்யூனிஸ்ட்
  • கர்நாடகம்
  • கர்நாடகா
  • கர்ப்பூரி தாகூர்
  • கருணை வேலை
  • கருத்தரங்கம்
  • கருத்தியல் பயிற்சி
  • கருத்து
  • கருத்துப்படம்
  • கருத்துரை
  • கருநாடக மாநிலம்
  • கரோனா
  • கல்
  • கல்வி
  • கல்வி அமைச்சர்
  • கல்வி நிலையம்
  • கல்வி வளாகம்
  • கல்வெட்டு
  • கலந்துரையாடல்
  • கலாச்சாரம்
  • கலி பூங்குன்றன்
  • கலிபூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைஞர் சிலை
  • கலைஞர் நூற்றாண்டு நூலகம்
  • கவிஞர்
  • கவிஞர் கலி
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கவிஞர் கலிபூங்குன்றன்
  • கவிதை
  • கவியரங்கம்
  • கவுதமன்
  • கழக நூல்கள்
  • கழகம்
  • கழுதை
  • கன்னிமேரா
  • கனடா
  • கனிம நிலங்கள்
  • கனிமொழி
  • காணொலி
  • காந்தி
  • காப்பீடு
  • காமராஜர்
  • காரணம்
  • காலை உணவு
  • காலை சிற்றுண்டி
  • கி.வீரமணி
  • கியூட்
  • கிரிமிலேயர்
  • கிருஷ்ணகிரி
  • கீழ்ப்பாக்கம்
  • கீழடி
  • குடந்தை
  • குடியரசுத் தலைவர்
  • குடியிருப்பு
  • குடியுரிமை
  • குடியுரிமை சட்டம்
  • குடியுரிமை திருத்தச் சட்டம்
  • குடியுரிமைச் சட்டம்
  • குமரி முதல்
  • குமுதம்
  • குலக்கல்வி
  • குவைத்
  • குழந்தை
  • குழந்தை திருமணம்
  • குழந்தை தொழிலாளர்
  • குழந்தையின்மை
  • குற்றச்சாட்டு
  • குற்றம்
  • குறள்
  • குன்றக்குடி அடிகளார்
  • குஜராத்
  • கூட்டம்
  • கூட்டமைப்பு
  • கூடுவாஞ்சேரி
  • கேதார்நாத்
  • கேந்திர வித்யாலயா
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளா
  • கேள்வி
  • கைது
  • கைபேசி
  • கொடும்பாவி எரிப்பு
  • கொடுமை
  • கொரோணா
  • கொலை
  • கொலை முயற்சி
  • கொலைக்கருவி
  • கொள்கை பரவல்
  • கோ.தங்கராசு
  • கோகுல்ராஜ்
  • கோத்ரா
  • கோத்ரேஜ்
  • கோயில்
  • கோரிக்கை
  • கோவிட்- 19
  • கோவில்
  • கோவை
  • ச்டாலின்
  • சகுனம்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சாரி
  • சங்கரையா
  • சங்கொலி
  • சட்ட எரிப்பு
  • சட்ட மன்றம்
  • சட்டசபை
  • சட்டத்திருத்தம்
  • சட்டம்
  • சட்டமன்ற தீர்மானம்
  • சத்திரியர்
  • சதி
  • சந்தா
  • சந்திப்பு
  • சந்துரு பரிந்துரை
  • சபரிமலை
  • சம்புகன்
  • சமசுக்கிருதம்
  • சமசுகிருதம்
  • சமஸ்கிருதம்
  • சமூக நீதி
  • சமூக நீதி நாள்
  • சமூகநீதி
  • சமூகநீதி நாள்
  • சரஸ்வதி
  • சனாதனம்
  • சாக்கோட்டை
  • சாகித்ய அகாடமி
  • சாதனை
  • சாதி
  • சாதி சான்றிதழ்
  • சாமி
  • சாமியார்
  • சாய்பாபா
  • சாலை
  • சான்றிதழ்
  • சிஏஏ
  • சிங்கப்பூர்
  • சிங்கப்பெருமாள் கோவில்
  • சிங்காரவேலர்
  • சித்தராமய்யா
  • சித்தராமையா
  • சித்திரபுத்திரன்
  • சிந்துவெளி
  • சிபிஎஸ்இ
  • சிபிஎஸ்சி
  • சிலம்பம்
  • சிலை
  • சிறப்பு
  • சிறப்பு கூட்டம்
  • சிறை
  • சீட்
  • சீனா
  • சுகாதாரத்துறை
  • சுடுகாடு இடுகாடு
  • சுதந்திரப் போராட்ட வீரர்
  • சுந்தரம்
  • சுற்றறிக்கை
  • சூத்திரன்
  • சூரிய கிரகணம்
  • சூளுரை
  • செக்கடி குப்பம்
  • செங்கல்பட்டு
  • செம்மொழி
  • செம்மொழி நூலகம்
  • செய்தி
  • செய்யாறு
  • செயலி
  • செயற்குழு
  • செல் எண்கள்
  • சென்னை
  • சேது
  • சேது கால்வாய்
  • சேது பாலம்
  • சேலம்
  • சேலம் மாநாடு
  • சொர்க்கவாசல்
  • சோசலிசம்
  • சோனியா
  • டாக்டர்
  • டி ஆர் பாலு
  • டி.ஆர்.பாலு
  • டில்லி
  • டெல்லி
  • டைம்ஸ்
  • தகவல் தொழில் நுட்பக்குழு
  • தகைசால் தமிழர்
  • தகைசால் தமிழர் விருது
  • தஞ்சை
  • தடுப்பு
  • தடுப்பூசி
  • தடை மறுப்பு
  • தண்டனை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியாரின் பெயர்
  • தமிழ்
  • தமிழ் அர்ச்சனை
  • தமிழ் இணையம்
  • தமிழ் கட்டாயம்
  • தமிழ் சங்கம்
  • தமிழ் தாய் வாழ்த்து
  • தமிழ் பண்பாட்டு மாதம்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் மாநாடு
  • தமிழ் மொழி
  • தமிழ் வீரர்கள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு முதல்வர்
  • தமிழர்
  • தமிழர் தலைவர்
  • தமிழில் குடமுழுக்கு
  • தர்மபுர ஆதீனம்
  • தர்மபுரி
  • தர்மம்
  • தலைப்பு உரை
  • தலைமை
  • தலைமை நீதி
  • தலையங்கம்
  • தலைவர்கள்
  • தள்ளுபடி
  • தனியார் நிறுவனங்கள்
  • தனியார்மயம்
  • தாய்லாந்து
  • தாழ்த்தப்பட்டோர்
  • தி.மு.க. அரசு
  • தி.மு.க. மாணவரணி
  • திடல்
  • திமுக
  • தியாகராயர் நகர்
  • திராவிட இயல்
  • திராவிட தேசியம்
  • திராவிட மாடல்
  • திராவிடப் பாரம்பரியம்
  • திராவிடம்
  • திராவிடம் வென்றது!
  • திராவிடர்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் திருநாள்
  • திரிபு வேலை
  • திருக்குறள்
  • திருச்சி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருமணம்
  • திருமா
  • திருமாவளவன்
  • திருமாவேலன்
  • திருமுருகன் காந்தி
  • திருவள்ளுவர்
  • திருவள்ளூர்
  • திருவாடுதுறை
  • தில்லி
  • திவாகரன்
  • திறப்பு
  • தினகரன்
  • தினசெய்தி
  • தினத்தந்தி
  • தினமணி
  • தினமணி கதிர்
  • தினமலர்
  • தீக்கதிர்
  • தீண்டாமை
  • தீபாவளி
  • தீர்ப்பு
  • தீர்மானம்
  • துக்லக்
  • துக்ளக்
  • துக்ளக் பதிலடி
  • துணை முதலமைச்சர்
  • துயர் துடைப்பு
  • துயர்துடைப்பு
  • துரை.சந்திரசேகரன்
  • துரைமுருகன்
  • துளக்
  • தெலுங்கானா
  • தென் சென்னை
  • தேசிய கல்வி
  • தேசிய சட்டக் கல்லூரி
  • தேர்தல்
  • தேர்தல் அறிக்கை
  • தேர்தல் பத்திரம்
  • தேர்வாணையம்
  • தேர்வு
  • தேவதாசி
  • தேவாரம்
  • தொடக்கம்
  • தொண்டு
  • தொப
  • தொல்.திருமாவளவன்
  • தொழில்படிப்பு
  • தொழிலாளர்
  • தொழிலாளர் போராட்டம்
  • தொழிற்சாலை
  • தோள்சீலை
  • நகை
  • நடராசன்
  • நடுவன் அரசு துறை
  • நடைபாதைக் கோயில்கள்
  • நம்பிக்கை
  • நரபலி
  • நரிக்குறவர்
  • நரேந்திரர்
  • நல வாரியம்
  • நவராத்திரி
  • நன்கொடை
  • நன்றி
  • நாகநாதன்
  • நாகை
  • நாங்குநேரி
  • நாத்திகம்
  • நால்வர்
  • நிகழ்வுகள்
  • நிதி
  • நியமனம்
  • நிறைவு
  • நினைவு
  • நினைவு நாள்
  • நினைவுநாள்
  • நீக்கம்
  • நீட்
  • நீட் எதிர்ப்பு
  • நீதிக்கட்சி
  • நீதித்துறை
  • நீதிபதி
  • நீதிபதி நியமனம்
  • நீதிபதி மோகன்
  • நீதிபதிகள்
  • நீதிமன்றம்
  • நீரிழிவு
  • நீலச் சட்டை பேரணி
  • நுங்கம்பாக்கம்
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூலகம்
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு விழா
  • நெய்வேலி
  • நெல்லை
  • நேர்காணல்
  • பக்தி
  • பகவத்கீதை
  • பகுத்தறிவாளர் கழக மாநாடு
  • பசு
  • பஞ்சாப்
  • படத்திறப்பு
  • படம் திறப்பு
  • பண்பாட்டுப் படையெடுப்பு
  • பணி
  • பணிஓய்வு
  • பணிநிறைவு
  • பணிபுரியும் பெண்கள்
  • பணியாளர்
  • பணியிடை நீக்கம்
  • பதக்கம்
  • பதவி உயர்வு
  • பதவி ஏற்பு
  • பதவியேற்பு
  • பதில்
  • பதிலடி
  • பதிவு
  • பயணம்
  • பரதம்
  • பரப்புரை
  • பரப்புரை திட்டம்
  • பல்கலைக்கழகம்
  • பல்லக்கு
  • பல்லாவரம்
  • பலகை
  • பவழ விழா
  • பழங்குடியினர்
  • பள்ளி
  • பள்ளிக்கல்வித்துறை
  • பஜனை
  • பா.இயேசுராஜா
  • பா.ஜ.க
  • பா.ஜ.க.
  • பாட திட்டம்
  • பாடம்
  • பாண்டே
  • பார்ப்பன ஆதிக்கம்
  • பார்ப்பன வெறி
  • பார்ப்பனத் திமிர்
  • பார்ப்பனர்
  • பாரத ரத்னா
  • பாரதிதாசன் விருது
  • பாரம்பரிய சின்னம்
  • பாராட்டு
  • பாராட்டு விழா
  • பாலபிரஜாபதி
  • பாலம்
  • பாலியல் லீலை
  • பாலியல் வன்கொடுமை
  • பாவாணர்
  • பாஜக
  • பி.எப்.
  • பிச்சை
  • பிணை
  • பிபிசி
  • பிரதமர்
  • பிராமண – சூத்திரப் போராட்டம்
  • பில்கிஸ் பானு
  • பிள்ளையார் ஊர்வலம்
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பு
  • பிற்படுத்தப்பட்டோர்
  • பிற இதழ்
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பிறந்தநாள் அறிக்கை
  • பிறமொழி கற்றோர்
  • பின்னணி
  • பிஜேபி அரசு
  • பீகார்
  • புகழாரம்
  • புகார்
  • புத்தக வெளியீடு
  • புத்தகக் காட்சி
  • புத்தாண்டு
  • புதிய கல்வி
  • புதிய கல்வி கொள்கை
  • புதிய சட்டம்
  • புதிரை வண்ணார்
  • புதுச்சேரி
  • புதுடில்லி
  • புரட்சிக்கவி
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்டு இமாலயப்புரட்டு
  • புலம்பெயர் தமிழர்
  • புலவர்
  • புலவர் வீரமணி
  • புலால் உணவு
  • புழல்
  • புறக்கணிப்பு
  • பூணூல்
  • பூமி பூஜை
  • பெங்களூரு
  • பெட்ரண்ட் ரஸல்
  • பெண்
  • பெண் ஏன் அடிமையானாள்?
  • பெண்கள்
  • பெண்கள் ஆணையம்
  • பெண்களுக்கான இடஒதுக்கீடு
  • பெண்களுக்கு இட ஒதுக்கீடு
  • பெண்ணுரிமை
  • பெரம்பூர் பி.சபாபதி
  • பெரியார்
  • பெரியார் 1000
  • பெரியார் உலகம்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் நினைவிடம்
  • பெரியார் நூல்கள்
  • பெரியார் பணி
  • பெரியார் பல்கலைக்கழகம்
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் மண்
  • பெரியார் லைஃப்
  • பெரியார் விருது
  • பெருமை
  • பெல்
  • பேட்டி
  • பேரடை
  • பேரணி
  • பேராசிரியர்
  • பேரிடர்
  • பேருந்து
  • பொங்கல்
  • பொதுக்குழு
  • பொதுத்தேர்வு
  • பொருளாதாரம்
  • பொறுப்பாளர்
  • பொறுப்பு
  • போட்டித் தேர்வு
  • போதைப் பொருள்
  • போராட்டம்
  • மக்களவை உறுப்பினர்
  • மக்களவைத் தேர்தல்
  • மகப்பேறு விடுப்பு
  • மகளிர்
  • மகளிர் உரிமைத் தொகை
  • மகளிர் நாள்
  • மகாராணி
  • மகாவீரர்
  • மஞ்சை வசந்தன்
  • மடையர்
  • மணல் திட்டு
  • மணவழகர் மன்றம்
  • மணவிழா
  • மணிப்பூர்
  • மணிமண்டபம்
  • மணியம்மையார்
  • மணியரசன்
  • மத்திய அரசு
  • மதச்சார்பின்மை
  • மதசார்பின்மை
  • மதம்
  • மதவாதம்
  • மராட்டியம்
  • மருத்துவ படிப்பு
  • மருத்துவக் கல்லூரி
  • மருத்துவக் கல்வி
  • மருத்துவம்
  • மருத்துவமனை
  • மருத்துவர்
  • மலம்
  • மலர்
  • மலன்
  • மலேசியா
  • மலையாளம்
  • மழை
  • மழை வெள்ளம்
  • மறியல்
  • மறுப்பு
  • மறைவு
  • மனித உரிமை
  • மனித சங்கிலி
  • மனுதர்ம யோஜனா
  • மனுதர்மம்
  • மனுஷ்யபுத்திரன்
  • மனைவி சம்பளம்
  • மாணவர்
  • மாணவர் கழகம்
  • மாணவர்கள்
  • மாநாடு
  • மாநில அரசு
  • மாநில அரசுப் பணி
  • மாநிலங்களவை
  • மாம்பழம்
  • மார்கழி
  • மாலனுக்கு பதிலடி
  • மாற்றம்
  • மாற்றுத்திறனாளி
  • மாற்றுவோம்
  • மிரட்டல்
  • மின்சாரம்
  • மீட்பு
  • மீனவர்
  • மு க ஸ்டாலின்
  • மு.க. ஸ்டாலின்
  • மு.க.ஸ்டாலின்
  • முத்துக்கூத்தன் நூற்றாண்டு
  • முத்தையன்
  • முதல்வர்
  • முதலமைச்சர்
  • முரசொலி
  • முருகன்
  • முற்பட்டோர்
  • முஸ்லிம்
  • முஸ்லிம்கள்
  • மூட நம்பிக்கை
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை ஒழிப்பு
  • மூடநம்பிக்கைப் பிரச்சாரம்
  • மூடப் பண்டிகை
  • மூதறிஞர் குழு
  • மே நாள்
  • மொழி
  • மொழிகள்
  • மொழிப்போர்
  • மோசடி
  • யாகம்
  • யாழ்ப்பாணம்
  • யுனெசுகொ
  • ரங்கராஜ்
  • ரசல்
  • ரமணர்
  • ரயில்வே
  • ரஜினி
  • ராகுல் காந்தி
  • ராணுவம்
  • ராமதாஸ்
  • ராமர் கோயில்
  • ராஜஸ்தான்
  • ரிசர்வ் வங்கி
  • வ.உ.சி.
  • வங்கதேசம்
  • வங்கி
  • வட்டாட்சியர்
  • வட இந்தியா
  • வட மாநிலம்
  • வடநாடு
  • வடமாநிலங்கள்
  • வரவு செலவு
  • வரவேற்பு
  • வரி
  • வருகை
  • வழக்கு
  • வழக்கு விசாரணை
  • வழிபாடு
  • வள்ளலார்
  • வன் கொடுமை
  • வன்கொடுமை
  • வன்புணர்வு
  • வன்முறை
  • வன உயிரியல் பூங்கா
  • வா உ சி
  • வாரியம்
  • வாரியார்
  • வாழ்த்து
  • வி.பி.சிங்
  • விசாரணை
  • விடுதலை
  • விடுதலை சந்தா
  • விடுதலை90
  • விடுதலைப் போர்
  • விடுமுறை
  • விபத்து காப்பீட்டுத் திட்டம்
  • விமானநிலையம்
  • வியப்பு
  • விருது
  • விருதுநகர்
  • விலக்கு
  • விவசாயி
  • விவேகானந்தர்
  • விழா
  • விளக்கம்
  • விளையாட்டு
  • விஜயபாரதம்
  • விஸ்வகர்மா திட்டம்
  • வீட்டுமனை
  • வெள்ளம்
  • வெள்ளை அறிக்கை
  • வெளியேற்றம்
  • வெற்றி
  • வேங்கை வயல்
  • வேதம்
  • வேர்ல்ட் ரெக்கார்ட்
  • வேலை நேரம்
  • வேலைவாய்ப்பு
  • வைக்கம்
  • வைக்கம் நூற்றாண்டு
  • வைகோ
  • வைரசு
  • ஜப்பான்
  • ஜாதி
  • ஜாதி உணர்வு
  • ஜாதி கொடுமை
  • ஜாதி நீக்கம்
  • ஜாதி பெயர்
  • ஜாதி பேதம்
  • ஜாதி முறை
  • ஜாதி வெறி
  • ஜாதிவாரி கணக்கெடுப்பு
  • ஜூனியர் விகடன்
  • ஜெர்மன்
  • ஸ்டாலின்
  • ஹிந்தி
  • ஹிந்தி எதிர்ப்பு
  • ஹிந்தி எழுத்து அழிப்பு
  • ஹிந்துத்துவா
  • CAB&NRC

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (11)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (3)
  • ►  2024 (69)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (10)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (5)
  • ►  2023 (104)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (10)
  • ▼  2022 (106)
    • ►  டிசம்பர் (19)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (8)
    • ▼  ஆகஸ்ட் (13)
      • தமிழ்நாட்டுக் கோயில்களில் அனைத்து ஜாதியினர் அர்ச்ச...
      • பிள்ளையார் ஊர்வலமா? அரசியல் ஆயுதமா? மத சம்பந்தப்பட...
      • மாணவர்களிடம் ஜாதியைக் கேட்ட பேராசிரியை - விசாரணை
      • பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தின் சகா சிலம்பப் ப...
      • குற்றவாளிகளாக சிறையில் இருந்தவர்கள் 'பிராமணர்'கள்-...
      • காமாலைக் கண்ணு 'தினமலரே!'
      • திருப்பத்தூரில் ஒரு திருவிழா... (விடுதலை சந்தா)
      • திருப்பத்தூரில் நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழர் தல...
      • குறுக்கு வழிகளில் ஆட்சிகளைப் பிடித்த பி.ஜே.பி.,க்க...
      • 60 ஆம் ஆண்டில் 'விடுதலை' ஆசிரியராக நமது தலைவர் மான...
      • திராவிட மாடல்" என்றால் குருதிக் கொதிப்பானேன்?
      • வரவேற்கிறேன் (ஆசிரியரின் முழு நேர தொண்டுக்கு)
      • அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி: அரசாணை வெளியீடு
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (15)
  • ►  2021 (266)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (31)
    • ►  ஆகஸ்ட் (46)
    • ►  ஜூலை (26)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (17)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (24)
  • ►  2020 (155)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (33)
    • ►  பிப்ரவரி (31)
    • ►  ஜனவரி (42)
  • ►  2019 (149)
    • ►  டிசம்பர் (35)
    • ►  நவம்பர் (37)
    • ►  அக்டோபர் (58)
    • ►  செப்டம்பர் (19)

சிறப்புடைய இடுகை

அமெரிக்கா - வாஷிங்டன் நகரில் பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாடு கோலாகலமாகத் தொடங்கியது

வரவேற்புரை என்னும் தலைப்பில் உரையாற்றிய அமெரிக்க மேரிலாண்ட் மாகாணத்தின் 8-ஆம் மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி ஜாமி ரஸ்கின் அவர்களுக்கு தமி...

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (11)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (3)
  • ►  2024 (69)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (10)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (5)
  • ►  2023 (104)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (10)
  • ▼  2022 (106)
    • ►  டிசம்பர் (19)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (8)
    • ▼  ஆகஸ்ட் (13)
      • தமிழ்நாட்டுக் கோயில்களில் அனைத்து ஜாதியினர் அர்ச்ச...
      • பிள்ளையார் ஊர்வலமா? அரசியல் ஆயுதமா? மத சம்பந்தப்பட...
      • மாணவர்களிடம் ஜாதியைக் கேட்ட பேராசிரியை - விசாரணை
      • பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தின் சகா சிலம்பப் ப...
      • குற்றவாளிகளாக சிறையில் இருந்தவர்கள் 'பிராமணர்'கள்-...
      • காமாலைக் கண்ணு 'தினமலரே!'
      • திருப்பத்தூரில் ஒரு திருவிழா... (விடுதலை சந்தா)
      • திருப்பத்தூரில் நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழர் தல...
      • குறுக்கு வழிகளில் ஆட்சிகளைப் பிடித்த பி.ஜே.பி.,க்க...
      • 60 ஆம் ஆண்டில் 'விடுதலை' ஆசிரியராக நமது தலைவர் மான...
      • திராவிட மாடல்" என்றால் குருதிக் கொதிப்பானேன்?
      • வரவேற்கிறேன் (ஆசிரியரின் முழு நேர தொண்டுக்கு)
      • அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி: அரசாணை வெளியீடு
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (15)
  • ►  2021 (266)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (31)
    • ►  ஆகஸ்ட் (46)
    • ►  ஜூலை (26)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (17)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (24)
  • ►  2020 (155)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (33)
    • ►  பிப்ரவரி (31)
    • ►  ஜனவரி (42)
  • ►  2019 (149)
    • ►  டிசம்பர் (35)
    • ►  நவம்பர் (37)
    • ►  அக்டோபர் (58)
    • ►  செப்டம்பர் (19)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.