வெள்ளி, 6 நவம்பர், 2020

தீபாவளி.. இதுதான்உண்மை.!!!?

#தீபாவளி.. இதுதான்உண்மை.!!!?

#தீபாவளி சமணரிட மிருந்து  பெற்றுக் கொண்ட பண்டிகை.

 கடைசி #தீர்த்தங்கரரான #வர்த்தமான_மகாவீரர் பாவாபுரி நகரிலே அவ்வூர் அரசனுடைய அரண்மனையிலே தங்கி இருந்தபோது அங்குக் குழுமி இருந்த மக்களுக்கு அறிவுரை செய்தருளினார்.

 இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது.

 வைகறைப் பொழுது ஆனபடியினாலே சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர்.

வர்த்தமான #மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே #இயற்கைஎய்தினார். 

பொழுது விடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்தபோது #மகாவீரர்_இயற்கைஎய்தி இருப்பதைக் கண்டு அரசனுக்கு அறிவித்தனர். 

அவ்வரசன் மற்ற அரசர்களை வரவழைத்து ..அவர்களோடு யோசனை செய்து ..உலகத்திற்கு அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு..

 அவர் இயற்கை எய்திய நாளில் வீடு தோறும் #விளக்குகளை_ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். 

அது முதல் இந்த விழா (தீபம் = விளக்கு, ஆவலி = வரிசை; #தீபாவலி) 

மகாவீரர் விடியற்காலையில் இயற்கை எய்தியபடியால் தீபாவளி என்ற பெயரில் விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது.

 விடியற்காலையில் நீராடிய பின்னர் திருவிளக்கு ஏற்றித் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறதன்றோ!

#சமணசமயம்_வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் வழக்கமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வந்தனர்.

 இந்த வழக்கத்தை நீக்க முடியாத #ஆரியர்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. 

ஆனால் பொருத்தமற்ற #புராணக்கதைகளைக்_கற்பித்துக் கொண்டார்கள்.

 #திருமால்_நரகாசுரனைக்_கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவதுதான் #தீபாவளி என்றும் கூறப்படும் புராணக்கதை பொருத்தமானது அன்று. 

அன்றியும் இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர் வீரர்களின் முறையும் அன்று. சூரியன் புறப்பட்ட பிறகுதான் போரைத் தொடங்குவது பண்டைக் காலத்துப் போர் வீரர்கள் நடைமுறையில் கொண்டிருந்த பழக்கம். 

#சமணர்_கொண்டாடி வந்த #மகாவீரர் இயற்கை எய்திய நினைவு நாள் #தீபாவளி என்பதில் அய்யமில்லை.

 ஆனால் இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ளும் மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்ட கதைதான் #நரகாசுரன்_கதை.

அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி
நூல்: சமணமும் தமிழும்  பக்கம்: 79-80
#மீள்வாசிப்பு
- ஆனந்தகுமார், முகநூல் பதிவு, 7.11.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக