செவ்வாய், 10 நவம்பர், 2020

ஆண்ட பரம்பரை – ஓரு சிறப்பு பார்வை (சத்திரியர் உண்டா?)

சமீபகாலமாக, முகநூலில் மட்டுமல்ல, போதுவெளிகளிலும், நான் கவனித்த ஒரு போக்கு என்னவென்றால்.

ஆங்கிலேயன் வருவதற்கு முன் நாங்கள் எல்லோரும் சாதி என்றால் என்னவென்றே தெரியாமல் ஒற்றுமையாக வாழ்ந்தோம் அவன் வந்து தான் சட்டம் போட்டு, எங்களை இப்படி பிரித்துவிட்டான் தெரியுமா என்பது ஒரு சாராரின் வாதம்

இந்துமதத்தின் மூலமுமாக தமிழுக்கு பார்பனர் எவ்வளவு தொண்டு செய்திருக்கிறார்கள் என்பது ஒரு சாராரின் வாதம்

எல்லோருமே, யாரை பார்த்தாலும் நாங்கெல்லாம் அந்த காலத்துல ஆண்டபரம்பரை தெரியுமா என்ற ஒரு முரட்டு வாதம் வைக்கிறார்கள்.

சரி முன்னோர் பெருமை பேசுகிறார்கள் என்று நினைத்தால், எல்லோருமே சொல்வது நாங்க மட்டும் தான் ஆண்டபரம்பரை மற்றவர்கள் எல்லாம் எங்களுக்கு அடிமை பணி செய்த பரம்பரை என்று வேறு ஒரு வாதத்தை வைக்கிறார்கள்.

இவர்கள் எல்லோருமே, பார்பானை திட்டினால் கண்டிப்பாக பார்பானுக்கு முன்னால் ஒடிவந்து உனக்கு என்னடா தெரியும் என்று கேட்கிறார்கள்.

மொத்தத்தில் நான் புரிந்து கொண்டது என்னவென்றால், தமிழர்கள் என்று தன்னை, ஆண்டபரம்பரையாக அடையாளப்படுத்தி கொள்ள இந்துமதம் அடையாளமாக தேவைபடுகிறது, அந்த மதபுராணக் கதைகள் சொல்லிகொடுக்கும் பார்பனன், தன் பாரம்பரிய காவலனாக தமிழர்கள் கண்களுக்கு தெரிகிறான்.

பிராமணன் என்று தனக்கு மேலே ஒருவன் இருப்பதை ஒப்புக்கொண்டால் தான் தன்னை ஆண்டபரம்பரை சத்திரியன் என்று சொல்லிக்கொள்ள முடியும் என்றாலும் பரவாயில்லை, அதற்காக நான் பார்பானுக்கு ஆதரவு கொடுப்பேன் என்பதே இவர்களின் நிலைப்பாடாக இருக்கிறது. 

சரி பார்பானின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது என்று பார்ப்போம், வெறும் அனுமானங்கள் மூலம் அல்ல வரலாற்று பூர்வமாக பார்ப்போம்.

1600-களில் மாவீரன் சத்திரபதி சிவாஜியையே சத்திரியன் அல்ல, அவனுக்கு மன்னனாக பட்டம் சூட்ட மாட்டோம் என்று சொன்னவர்கள் தான் இந்த திருட்டு பார்பனர்,

மாவீரன் சிவாஜி, தவிர வேறு யாருமே அவுரங்கசீபை எதிர்த்து போராடவும் இல்லை வெற்றி பெறவும் இல்லை, அவனுக்கே பார்பனரால் அந்த கதி என்றால் மற்ற ஆண்ட பரம்பரைகளை என்ன செய்தார்கள் என்று பார்ப்போம்

(இது பற்றி விரிவாக படிக்க எனது சத்ரபதி சிவாஜியின் - தெரியாத பக்கங்கள் பகுதியை  பாருங்கள்)

குப்தர்கள் காலத்திலிருந்து மொகலாயர் காலம் வரை பார்பனருக்கு தங்கள் மனுதர்ம நாலு வருண விதிகளை மக்கள் மேல் செலுத்தி நோகாமல் வாழ எந்த தடையும் ஏற்படவில்லை.

ஆனால் ஆங்கிலேயர் காலத்தில் அது முடியவில்லை, அவர்கள் குழந்தை திருமணம் முதல் பெண்களை உயிருடன் எரிக்கும் உடன்கட்டை ஏரும் வழக்கம் வரை பலவற்றை தடுத்து சட்டம் போட்டார்கள்,

அவர்களிடம் பார்பனரின் பருப்பு வேகவில்லை.

1837-ல் கிழக்கிந்திய கம்பனி ஆட்சியில், கிருஸ்துவர்களுக்கு இங்கிலாந்து நாட்டின் சட்டம், இஸ்லாமியர்களுக்கு ஷரியத் சட்டம் உள்ளது

இந்துகளுக்கு ஏற்ற மாதிரி எப்படி சட்டம் இயற்றுவது என்று ஆங்கிலேயர் பார்பனரை கேட்டார்கள்.

இது நடந்ததது 1837 முதல் 1928 வரை
பார்பனர் சொன்னது இந்தியாவில் சத்திரியர்கள் என்று யாரும் இல்லை

இந்தியாவில் சத்திரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்பனர் தொடுத்த வழக்கு எண் – 1 

பார்பனர்களின் வாதம், இந்துகளில் பிராமணர், சத்திரியர்கள் இருவரை தவிர யாருக்கும் சொத்துகளை வாங்கவோ விற்கவோ உரிமையில்லை,

மனுதர்மபடி பிராமணர் மற்றும் சத்திரியர் மட்டுமே சொத்துகளை வைத்து கொள்ள உரிமை உண்டு.

புராண காலத்தில் பரசுராமர், தன் தந்தையை ஒரு சத்திரியன் கொன்ற கோபத்தில் இந்தியாவில் எல்லா சத்திரியர்களையும் கொன்றுவிட்டார், எனவே இந்தியாவில் இப்போது மீதம் இருப்பவர்கள் அனைவரும் பார்பனர், சூத்திரர், பஞ்சமர் என்ற பிரிவுகளில் மட்டுமே வருவார்கள், மனு தர்மப்படி இவர்களில் பார்பனரை தவிர வேறு யாருக்கும் சொத்து வைத்து கொள்ள உரிமையில்லை,

எனவே, பார்பனரை தவிர வேறு யாருக்கும் சொத்து வைத்து கொள்ள உரிமையில்லை என்று சட்டமியற்ற கோரி கிழக்கிந்திய கம்பெனி அரசுக்குக்கு 1837-ல் பார்பனர் மனு கொடுத்தனர்.

நல்லவேளை கிழக்கிந்திய கம்பெனியின் பிரைவி கவுன்சில் இப்படி ஒரேஅடியாக உங்கள் புராணக்கதைகளை ஏற்றுக்கொண்டு வேறு யாருக்குமே சொத்து வைத்து கொள்ள உரிமையில்லை என்றெல்லாம் ஒத்துகொள்ளமுடியாது, நிச்சயம் சத்திரியர்கள் இருப்பார்கள் ஏன்று சொல்லி அந்த முதல் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இந்தியாவில் சத்திரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்பனர் தொடுத்த வழக்கு எண் – 2 – ஆங்கிலேயரின் சட்ட ஆவண எண் (I.L.R.10 மற்றும் I.L.R.12) 1886

இந்த வழக்கு வரும் போது கம்பெனி ஆட்சி முடிந்து பிரிட்டிஷ் ஆட்சி வந்துவிட்டது.

பார்பானுக்கு சிப்பாய் கலக்கம் பற்றியெல்லாம் கவலை இல்லை, இந்தியாவில் சத்திரியர்கள் யாருமே இல்லை என்பதை நிருபணம் செய்ய மீண்டும் போராடுகிறான்

இந்த வழக்கு வழக்கம் போல பார்பனருக்கும், வங்காள கயஸ்தா மற்றும் பீகாரின் கயஸ்தா பிரிவினர் இவர்களில் யார் சத்திரியர் என்று பிரிட்டிஷ் கோர்ட்களில் நடைபெறுகிறது 

இந்த வழக்கில் வங்காளத்தில் உள்ள கயஸ்தா பிரிவினர் சத்திரியர் தான் என்று தீர்ப்பு பிரிட்டிஷ் கோர்ட்களில் வழங்குகிறார்கள்

இந்தியாவில் சத்திரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்பனர் தொடுத்த வழக்கு எண் – 3 – ஆங்கிலேயரின் சட்ட ஆவண எண் (1916) 20 Cal. W.N.901 1916-ல் மறுபடியும் பார்பனர் வழக்கு தொடர்ந்து வங்காளத்தில் உள்ள கயஸ்தா பிரிவினர் சத்திரியர் அல்ல என்று ஆங்கிலேய கோர்டில் தீர்ப்பை பெறுகிறார்கள். இந்த வழக்கு 1926-ல் தான் முடிகிறது.

இந்தியாவில் சத்திரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்பனர் தொடுத்த வழக்கு எண் – 4 – ஆங்கிலேயரின் சட்ட ஆவண எண் .L.R. (1928) 52 Bom.497 மறுபடியும் சிவாஜி பரம்பரையை விடாமல் வம்புக்கிழுத்த  பார்பனர், 1926-ல் வெங்கோஜி அல்லது எக்கோஜி என்று அழைக்கப்பட்ட சிவாஜியின் தம்பியின் வழி வந்தவர்கள் தஞ்சை மன்னர்களாக இருக்கிறார்கள் அவர்கள் சத்திரியர்கள் அல்ல சூத்திரர்கள் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார்கள். 

அந்த வழக்கின் 229 பக்க தீர்ப்பில், மகாராஷ்டிரத்தில் உள்ள சிவாஜி வம்சம் என்று சொல்பவர்களை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம் (long gap from 1600-1900)

முதல் ஐந்து குடும்பங்கள் 
இரண்டாவது 96 குடும்பங்கள் 
மற்றவர்கள் 

என்று பிரிக்கலாம், இவர்களில் முதல் இரண்டு பிரிவினரும் சத்திரியர்கள், அதனால் வெங்கோஜி அல்லது எக்கோஜி என்று அழைக்கப்பட்ட சிவாஜியின் தம்பியின் வழி வந்தவர்கள் சத்திரியர்களே என்று பிரிட்டிஷ் கோர்ட்டு தீர்ப்பு வழங்குகிறது

இந்தியாவில் சத்திரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்பனர் தொடுத்த வழக்கு எண் – 5 

மதுரையை சேர்ந்த யாதவர்கள் 1927-ல் நாங்களும் யாதவ குலத்தில் பிறந்த கிருஷ்ணனின் வம்சம் நாங்களும் சத்திரியர்கள் தான் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க, எதிர்த்து வாதாடிய பார்பனர் அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வைக்கிறார்கள்.

இப்படியாக ஆங்கிலேயர் காலத்திலும் பார்பனர் நிறுவ முயன்றது என்னவென்றால், இந்தியாவில் சத்திரியன் என்று யாரும் இல்லை.

இந்து மனு தர்மப்படி பிராமணன் மட்டுமே சொத்து வைத்து கொள்ளலாம் படிக்கலாம், இன்னும் பிற பிற லாம் லாம் லாம்

ஆகவே, தன்னை ஆண்ட பரம்பரை என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படும் எல்லோரும் ஒன்று புரிந்து கொள்ளுங்கள்,

 பார்பான்  உங்களை நேரில் பார்க்கும் போது ஆமா அய்யா நீங்கள் எல்லாம் எவ்வளவு பெரிய ஆண்டபரம்பரை என்றுதான் சொல்லுவான்

ஆனால் உங்களை சூத்திரன் ஆக்க சட்டப்படி எல்லா வேலையும் செய்வான்.

எல்லா சாதியிலும் உங்கள் சொந்தகாரன் (என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்) உங்களை ஆண்டபரம்பரையில் சேர்க்க பல டகால்டி வேலை செய்வான் அதையெல்லாம் காதில் போட்டுகொள்ளாதீர்கள்

உண்மையில் உங்களுக்கு உங்கள் சாதி உங்கள் சமுகத்தின் மீது அன்பு இருந்தால், ஆண்ட பரம்பரை, புராண கதை சொல்லி பெருமை பேசுவதை விட்டு விட்டு, உங்கள் சமுகத்தில், கல்வியில், அறிவில் நாம் இப்போது என்ன செய்கிறோம் என்று சிந்தியுங்கள்

குறைந்த பட்சம் உங்கள் சொந்த சமுகத்தில், உள்ள ஏழை மாணவர்கள் படித்து முன்னற உதவுங்கள், பணமாக முடியவில்லை என்றாலும் உங்கள் நேரத்தை கொடுங்கள், படிப்புக்காக வங்கியில் கடன் வாங்க உதவுங்கள்  

ஆண்ட பரம்பரை கதை பேசினால், பார்பான் உண்டியல் மட்டுமே நிரம்பும், அப்போதும் நீங்கள் ஆண்ட பரம்பரை இல்லை என்று அவன் எங்காவது கோர்டில் கேஸ் போட்டு கொண்டுதான் இருப்பான்.

இது போன்று இந்தியாவின் வரலாற்றில் தெரியாத பல்வேறு பக்கங்களை படிக்க இன்றே "தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்" நூலை கீழ்கண்ட லிங்கில் வாங்கவும்

விலை - Rs.200/- மட்டுமே, COD வசதியும் உண்டு 

http://tamilnool.club/index.php?route=product/product&product_id=137

- கிருஷ்ணாவேல் TS, முகநூல் பதிவு,

மனுதர்மத்தை விமர்சித்து தொல்.திருமாவளவன் பேச்சு - எம்.பி., பதவியிலிருந்து விலக்கக் கோரிய வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி!


பெண்களையும், பார்ப்பனரல்லாதாரையும் இழிவுபடுத்தும் மனுதர்மம் - மக்களின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானதே!
-------------------------------------------------------------
மனுஸ்மிருதி - ஜாதியை, பெண்ணடிமையை வற்புறுத்திப் பாதுகாக்கும் அறத்திற்கும், சமத்துவத்திற்கும், அறிவுச் சுதந்திரத்திற்கும் எதிரான ஒரு நூல் என்பதை, அய்ரோப்பிய யூனியன் நாடுகள் சார்பில் கடந்த செப்டம்பரில் (25, 26), அங்கே நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கருத்தரங்கில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மானமிகு தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்களது உரையைத் திரித்து வெளியிட்டதோடு, அதன் காரணமாக அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றெல்லாம் பா.ஜ.க.வினர் - வேறு அரசியல் மூலதன சரக்கு தி.மு.க. கூட்டணிக்கு எதிராக ஒன்றும் கிடைக்காததால், இதனை வைத்துப் பிரச்சாரம், சிற்சில இடங்களில் போராட்டம் என்ற கூத்தும் நடைபெற்றன!

வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள்!

ஒரு வழக்குரைஞர் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில், திருமாவளவனை நாடாளுமன்றப் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என உத்தரவிடவேண்டும் என்று வழக்கு ஒன்றையும் தொடுத்தார்; அது விசாரணைக்கு வந்தபோது, அதனை விசாரித்து, தள்ளுபடி செய்த நீதிபதிகள் அமர்வு (ஜஸ்டீஸ் சத்திய நாராயணன், ஜஸ்டீஸ் ஹேமலதா) முக்கியமான சில கருத்துகளைத் தெரிவித்து, சில கேள்விகளையும் எழுப்பியது. அதற்கு உரிய முறையில் வழக்குப் போட்டவர்கள் பதிலளிக்க முடியாத நிலையில், அவகாசம் கேட்ட நிலையில், அதற்கு மறுத்த நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளனர்.

நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள்!

1. திருமாவளவனின் கருத்துரிமை, பேச்சுரிமைக்கு நாங்கள் தடை விதிக்க முடியாது; ஆட்சேபகரமாக இருந்தால், அதுபற்றி யோசித்து நடவடிக்கை எடுப்பது அரசின் பொறுப்பாகும்.

2. இதுபோன்ற வழக்குகள் போடுவதன்மூலம் நீதிமன்றத்தை அரசியல் பிரச்சாரமாக, பிரச்சினைக்குத் தீர்வு காண நீதிமன்றத்தை களமாக்குவதை ஒருபோதும் ஏற்க முடியாது.

3. அரசமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின்கீழ் திருமாவளவனை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று கோருகிறீர்கள்? 
என்று எழுப்பிய கேள்விகளுக்கு எவ்வித தெளிவான பதிலும் அளிக்க முடியாமல் வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது!

அண்மைக் காலத்தில் தமிழ்நாட்டில் ‘மிஸ்டு கால்’மூலம் தங்கள் கட்சியை வளர்க்க முயன்ற பா.ஜ.க.வினர் அதில் வெற்றி பெற முடியாத நிலையில், இப்படி திட்டமிட்டே, திரிபுவாதம், அழிவழக்குகள் போடுவதை ஒரு அச்சுறுத்தல் உத்தியாகவும், அரசியல் பிரச்சாரம், கட்சி மேலிடத்தின் செல்வாக்கை உண்டாக்கி,  அதன் பார்வை விழுந்தால் தாங்கள் ஏதாவது பதவி பெறலாமே என்பதற்காக (மத்திய ஆட்சி பா.ஜ.க. வசம் இருப்பதால், பல மத்திய அரசு நிறுவனங்களில் இவர்கள் இடந்தேடிகளாகவும் ஆகும் வாய்ப்புகள் உள்ளன) இப்படி ஒரு முயற்சியில்  ஈடுபடுவதும், தமிழ்நாட்டில் உள்ள தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், திருவள்ளுவர், எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு இரவோடு இரவாக காவி பூசுதல், சிலரைக் காட்டி (லெட்டர் பேட் அமைப்புகள்மூலம்)  விளம்பரம் தேடிடும் வித்தைகளையும் கையாளும் மலிவான ‘புஸ்’வாண வேடிக்கை விட்டுப் பார்க்கிறார்கள்.

வல்லடி வழக்கு - வம்பு வளர்ப்புகள் 
அசைத்துவிட முடியாது!

கடற்பாறைகளான கொள்கை லட்சிய மாவீரர்களை, பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர், கழக வழி நிற்கும் மற்றும் முற்போக்குச் சிந்தனையாளர்களானவர்களையும் இத்தகைய வல்லடி வழக்கு, வம்பு வளர்ப்புகளும் ஒன்றும் அசைத்துவிட முடியாது!

மாறாக, இது காவிகளுக்கு எதிராகவே இளைஞர்கள் மத்தியில் திரும்பும்; திரும்பிக் கொண்டிருப்பது உறுதி!
வழக்குப் போட்டவர்களால் எவ்வளவு பலவீனமான வாதம் - அந்த உயர்நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பதை படித்தால், எப்படி சிரிப்பது என்றே தெரியவில்லை.

‘‘2 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்டுள்ள மனுஸ்மிருதிக்கு (இதுவே கடைந்தெடுத்த புளுகு) விளக்கமளிக்க திருமாவளவன் சமஸ்கிருதப் புலமை பெற்றவர் அல்ல; அவர் கருத்துத் தவறானது. அவர்தாம் கூறியதை நியாயப்படுத்தி பேசி வருகிறார்; எனவே, நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டுள்ள திருமாவளவனை தகுதி நீக்கம் செய்யவேண்டும்‘’ என்று கோரிக்கை வைத்தது எவ்வகையிலாவது பொருத்தமான வாதம் ஆகுமா?

ஒருமைப்பாட்டுக்கு நேர் எதிரானது இல்லையா?

(1) சமஸ்கிருத நூல்களைப்பற்றி சமஸ்கிருதம் தெரிந்தவர் மட்டும்தான் பேசவேண்டும் என்றால், அசல் மனுதர்ம மொழி பெயர்ப்புகள் சமஸ்கிருத சுலோகத்தோடு இணைத்து போடப்பட்டு, அச்சிடப்பட்டு, நூறாண்டுகளுக்கு முன் வந்த பதிப்பு - ஆதாரமில்லையா?

(2) டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சமஸ்கிருதம் படித்த அறிஞர், சமஸ்கிருதப் பண்டிதர்கள் கருத்தையெல்லாம் கரைத்துக் குடித்து மனுதர்ம நூலைப் படித்து 1927 இல் பகிரங்கமாகக் கொளுத்தினார் - அவர்தான் அரசமைப்புச் சட்டம் உருவாகவே மூலகர்த்தா என்பதை மறந்துவிட்டு, இப்படி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அதனை அரசியல் மேடையாக்கிட முயலலாமா?

(3) நாட்டு மக்களின் ஒருமைப்பாட்டுக்கு விரோதம் மனு என்பதால்தானே, மனித தர்மத்தில் நம்பிக்கையுள்ள அனைவரும் மனுதர்மத்தை எதிர்க்கின்றனர்!

(4) நாட்டில் உள்ள மக்களின் எண்ணிக்கையில் சரி பகுதியாக உள்ள பெண்களை, சம உரிமைக்கும், சுதந்திரத்திற்கும் லாயக்கானவர்கள் அல்ல என்றும், இழிவுபடுத்தியும் எழுதியிருப்பது ஒருமைப்பாட்டுக்கு நேர் எதிரானது இல்லையா?

‘‘வள்ளுவர்செய் திருக்குறளை மறுவற நன்கு உணர்ந்தோர் உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி’’ என்ற மனோன்மணியம் சுந்தரனார் கூற்றை மறுக்க முடியுமா?

காவிகளே, உருப்படியான அரசியலை 
நடத்திட முன்வாருங்கள்!!

எனவே, ஆழந்தெரியாமல் காலை விட்டு, அவதிப்பட்டு, அவமானத்தைச் சுமக்கின்ற காவிகளே, உருப்படியான அரசியலை நடத்திட முன்வாருங்கள்!!

கி.வீரமணி,
தலைவர், 
திராவிடர் கழகம்

10.11.2020 
சென்னை.

திங்கள், 9 நவம்பர், 2020

சமஸ்கிருதம் என்பது ஒரு மொழியே அல்ல

Jameel Hasan

செத்த பாம்புக்கு மகுடி  ஏன் ஊதனும் ...???

சமஸ்கிருதம் என்பது ஒரு மொழியே அல்ல. அது சாதாரணக் 'கோடு வேர்ட்'தான் என பரபரப்பு ஆய்வுத் தகவல் ஒன்று வாட்ஸ் அப்பில் உலா வருகிறது. மொழி ஆர்வலர்கள் மத்தியில் ஏராளமான கேள்விக் கணைகளைத் தொடுக்கும் அந்த முழு நீளத் தகவல் இதுதான்.
இந்தோ யூரோப்பியன் மொழியியலாளர்கள் பலர் கூட்டாகச் சேர்ந்து ‘சம்ஸ்கிருதம்’ என்ற மொழி எக்காலத்திலும் இருந்ததில்லை என ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.அதில் கூறியிருப்பதாவது:எந்த ஒரு மொழியும் தோன்ற,ஒரு இனம் தேவை.இனமில்லாமல் எந்த மொழியும் தோன்ற முடியாது .எடுத்துக்காட்டாக ,ஜப்பானியர்கள்,ஜப்பானிய மொழியைத் தோற்றுவித்தார்கள்.அதுபோல் ,தமிழர் தமிழையும் ,ஜெர்மானியர் ஜெர்மன் மொழியையும் தோற்றுவித்தார்கள்.

சமஸ்கிருதத்தை எந்த இனம் தோற்றுவித்தது?இரண்டாவதாக, எந்த ஒரு மொழியும், பேசப்பட்டால்தான் மொழியாகும் பேசப்படவில்லையென்றால் அது ‘குறியீடு' எனப்படும் .எந்த இயல்பான மொழியும் ,பேச்சில் முதலில் தொடங்கி,பின்னர் பெரு வளர்ச்சி அடைந்த பின்தான் எழுத்து வடிவம் பெறமுடியும்.சமஸ்கிருதம் என்ற மொழி எந்தக் கால கட்டத்திலும் பேசப்பட்டதாக எந்த விதமான சான்றுகளும் இல்லை. இந்தியாவின் தற்போதைய பிராமணர் ஜனத்தொகை சுமார் 5%என்று சொல்லப்படுகிறது.இது சுமார் 6 கோடி மக்கள் எனலாம். இந்த 6 கோடி மக்களும் முதலில் சம்ஸ்கிருதம் பேசியிருந்தால்,அதில் குறைந்தது 1 கோடி மக்கள் இப்போதும் பேசிக் கொண்டிருக்கவேண்டும்.அப்படியென்றால் ,ஏன் தற்போது ஒரு 10 லட்சம் மக்கள் கூட சமஸ்கிருதம் பேசுவதில்லை ?
ஒருக்கால்,பேசிக்கொண்டிருந்த மொழி அழிந்து விட்டது என்று சொன்னால்,பேசிக் கொண்டிருக்கும் எந்த மொழியும் நேராக அழிவதில்லை என்ற உண்மையைத் தெரிந்து கொள்வோம் . முதலில் அதைப் பேசும் மக்கள் அழிய வேண்டும் . அப்போதுதான் அவர்கள் பேசும் மொழி அழியத் தொடங்கும்.எடுத்துக்காட்டாக பிரேசிலில் ‘வாரிக்கென’ என்ற மொழி இப்போது 20 பேர் தான் பேசுகிறார்கள் . இந்த 20 பேரின் காலத்திற்குப் பிறகு ,அது அழிந்து போகும் .

சமஸ்கிருதம் இவ்வாறாக அழிவின் விளிம்பு மொழியாக எந்தக் கால கட்டத்திலும் அறிவிக்கப்பட்டு இருந்ததே இல்லை என்பதை இந்த விளிம்பு நிலை மொழிப் பட்டியல் உறுதி செய்கிறது . ஏனென்றால் சமஸ்கிருதம் எப்போதுமே பேசப்பட்டதே இல்லை என்பதால் தான் .சமஸ்கிருதம் மிக உயர்ந்த மொழி என்று சொல்லப்படுவதால் ,அது எப்போதாவது பேசப்பட்டிருந்தால்,அதைப் பேசியவர்கள் ஒரு போதும் அதை நிறுத்தியிருக்க வாய்ப்பில்லை . வீட்டிலாவது பேசிக்கொண்டிருப்பார்கள் .எந்த மொழியும் , ஆண் ,பெண் இருவரும் பேச உரிமை உள்ளதாகத்தான் இருக்கும் .ஆனால் , சமஸ்கிருதம் பேச பெண்களுக்கு தடையுள்ளது பற்றி நாம் எல்லோரும் அறிந்ததே .ஆக , பெண்களிடம் பேச முடியாத ,பெண்கள் பேச முடியாத ஒன்று ,பேச்சு மொழியாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்பது ஆராய்ச்சியாளர் கருத்து .
இவையெல்லாம் கணக்கில் கொண்டால் ,சமஸ்கிருதம் என்பது பேசப்படாத மொழி என்பது தெளிவாகிறது.பேசப்படாதது எக்காலத்திலும் மொழி ஆகாது . ஆனால் எழுதப்படாதது மொழி ஆகலாம். பல மொழிகள் பேச்சு வழக்கில் இருந்தும் ,எழுத்துகள் இன்றி உள்ளன.மூன்றாவதாக , மொழி என்றால் அது ‘தாய்’ பேசும் மொழியாகக் கட்டாயம் இருக்கவேண்டும்.அதனால்தான் ‘தாய் மொழி’ என அழைக்கப்படுகிறது .இந்து மத விதிகளின் படி ‘பெண்கள்’, அதாவது தாய்மார்கள் சமஸ்கிருதம் சொல்ல அனுமதி இல்லை .

 
ஆக ,சமஸ்கிருதம் ‘தாய் மொழி’யாக வாய்ப்பே இல்லை என்கிறார்கள் இவர்கள்
ஆக சமஸ்கிருதம் என்பது ஒரு இயல்பு மொழி அல்ல .அப்படியென்றால் அது தான் என்ன ? சமஸ்கிருதம் என்பது உண்மையில் ஒரு இரகசியக் குறியீடு மொழி தான்.குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கு மட்டும் புரியும் இரகசிய குறியீட்டு மொழி அது . அடுத்தது பேசப்படாத மொழி ,பேசப்படும் மொழிகளுக்குத் தாயாக முடியுமா என்ற கேள்வி எழுகிறது .பேசப்படாத மொழி எதுவும் பேசப்படும் மொழிகளுக்குத் தாயாக ஆக முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை .ஏனென்றால் ,பேசப்படாத மொழி பரவ ஒருபோதும் வாய்ப்பில்லை என்பதால் தான் .பேசப்படாத ஒரு மொழி, சொற்களைப் பிறப்பிக்க முடியுமா என்பது அடுத்த கேள்வி .முடியாது என்பது தெளிவு .பேச்சு வழியாகத்தான் சொற்கள் தோன்ற முடியும் என்பது தெளிவு .பேச்சு வழியாகத் தோன்றிய சொற்கள் தான் , பின்னர் எழுத்து வடிவில் வரும் என்பதும் உண்மை .

சமஸ்கிருதம் பேசும் மக்கள் இல்லாமல் ,சமஸ்கிருத சொற்களை யார் உண்டாக்குவார் என்ற கேள்வி அடுத்து எழுகிறது .சமஸ்கிருதம் பேசும் மக்கள் இல்லாமல் சமஸ்கிருதச் சொற்களை மற்ற மொழி பேசுபவர்கள்தான் உருவாக்கியிருக்க முடியும் என்பது தெளிவு . ஆக , தமிழைத் தாய்மொழியாக பாவிக்கும் தமிழ் பிராமணர்களே சமஸ்கிருத சொற்களைத் தமிழிலிருந்து உருவாக்கியிருக்கக் கூடும் .
மேற்கூறிய காரணங்களால் சமஸ்கிருதம் என்று ஒரு மொழி இருந்ததாகச் சொல்லப்படுவது உண்மையல்ல என்பது தெளிவாகிறது .
மொழியியலாளர்கள் இந்தக் கருத்துகளை ஆர்வர்ட் பல்கலைக்கழக மொழியிருக்கைக்குச் சமர்ப்பிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது . இதை மறுத்து இது வரை எந்த சமஸ்கிருத வல்லுனரும் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
-ஆறுமுகம் பச்சையப்பன், முகநூல் பதிவு, 9.11.20

பார்ப்பனர்களின் சட்டத்திற்கு எதிரான சட்டங்கள்!

பிரிட்டிஷார் Vs பிராமணர்கள்

பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உள்ளவன் எனவும், ஷத்திரியன் மட்டுமே நிலம் வைத்துக் கொள்ள மற்றும் அரசனாக இருக்க முடியும் எனவும், 
வைசியன் மட்டுமே வியாபாரம் செய்ய உரிமை உள்ளவன் எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் 
எனவும் இருந்த, இந்து மனுதர்மச் சட்டத்தை பிரிட்டிஷார்கள் ஏற்றுக் கொள்ளாமல், 
சட்டம் என்றால் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் 
1773 ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் அரசு பல புதிய சட்டங்களை இயற்றத் தொடங்கியது.

ஷத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்துக் கொள்ள உரிமை என்று இருந்ததை, 
1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்து வாங்கிக் கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டது.

1804-ல் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டது.

1813 ஆம் ஆண்டு கொத்தடிமைகள் ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

பிராமணப் பெண்னை கெடுத்த சூத்திரன் கொல்லப்பட வேண்டும் 
(இந்து மனு சட்டம் VII 374, 375), 

ஒரு பிராமணன் காம இச்சை தீர சூத்திரப் பெண்ணோடு உறவு கொள்ளலாம். ஆனால், அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்துவிட்டால் அது பிணம் போன்றதேயாகும். 
(இந்து மனு சட்டம் IX 178)

பிராமணன் தப்பு செய்தால் தண்டனையில்லாமல் இருந்த நிலையில் பிராமணர்கள் குற்றம் புரிந்தவராக இருப்பின், அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை 1817 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரல் கொண்டுவரப்பட்டது

சூத்தரப் பெண் திருமணம் முடிந்த அன்றே, பிராமணருக்கு பணிவிடைகள் செய்ய 7 நாள்கள் கோவிலில் இருக்க வேண்டும் என்ற வழக்கம் பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் 1819 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது.

பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த 
இந்து சட்டத்தை 1835 ஆம் ஆண்டு Lord
மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக, சூத்தரனும் கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.

சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற 
ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளி விட்டுக் கொல்ல வேண்டும் என்ற கங்காதானம் 1835-ல் பிரிட்டிஷ் அரசாணையின் மூலம் முடிவிற்கு வந்தது.

1835 ஆம் ஆண்டு சூத்திரர்களும் நாற்காலியில் உட்காருவதற்கான அரசாணை கொண்டுவரப்பட்டது.
1868 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் இந்து மனு தர்மச் சட்டத்தை முழுமையாக தடை செய்ய உத்தரவு பிறப்பித்தது.

இந்தியாவை மட்டும் பிரிட்டிஷார்கள் ஆளவில்லை என்றால், சூத்திரர்களுக்கு கல்வி இல்லாமல் போயிருந்தால் "ஜோதிராவ் புலே"வுக்கு கல்வி கிடைத்திருக்காது.
இந்தியாவில் கல்வி இயக்கம் நடந்திருக்காது.
அண்ணலின் தந்தை இராம்ஜி அவர்களுக்கு கல்வியும் இராணுவப் பணியும் கிடைத்திருக்காது,
இவையெல்லாம் இல்லாமல் போயிருந்தால் அம்பேத்கர் இல்லை. அம்பேத்கர் இல்லை என்றால் நாம் இல்லை.

சூத்திர பஞ்சமனின் அடிமைச் சங்கிலியை உடைத்த பிரிட்டிஷாரின் நவீன முன்னேற்ற நற்பணிகள் பாராட்டுதலுக்குரியதே!!!

(ஆதாரம்:தினமணி 25-2-2007)

ஞாயிறு, 8 நவம்பர், 2020

அட பொய்மலத்தில் புழுத்த புழுக்களே!

கருஞ்சட்டை

 

'விஜயபாரதம்‘ என்னும் ஆர்.எஸ்.எஸ். வார இதழ் - எவ்வளவு மொத்துப் பட்டாலும் புத்தி கொள்முதல் பெறுவதாகத் தெரியவில்லை.

அடால்ப் ஹிட்லரின் சீடர்கள் அல்லவா - அதனால் அவர் அமைச்சரவையிலிருந்த அந்தக் கோயல்பல்சின் அசல் நகலாக பொய் மூட்டைகளை நாள்தோறும் அவிழ்த்துக் கொட்டிக் கொண்டே திரிகிறார்கள். இது அவர்களின் கடைந்தெடுத்த பிழைப்பாகவே ஆகி விட்டது.

சமூக வலை தளங்களில் பொய்களை உலவ விடுவதற்காகவே தனிக் குழு அமைத்து செயல்படும் கும்பல் அல்லவா!

திராவிடர் கழகத் தலைவர் வீட்டுத் திருமணத்தில் தாலி கட்டப்பட்டது - சடங்குகள் செய்யப்பட்டன என்று இதே விஜய பாரதம் எழுதி மூக்குடைப்பட்டு, (விரைவில் நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட உள்ளனர்) அதன் ரத்தம் இன்னும் வழிந்தோடும் நிலையில் அடுத்த கட்ட பொய்க்குத் தாவி இருக்கிறது இந்த மங்கி 'பிராண்டு!'

இந்த வார விஜயபாரதத்தில் 'ஈ.வே.ரா. மணியம்மை திருமணம்' என்னும் தலைப்பில் (10.8.2018, பக். 27) கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.

ஈ.வே.ரா. தனக்கு அடுத்த வாரிசாக யாரை நிய மிக்கலாம் என்பது பற்றி ராஜாஜியிடம் கலந்து ஆலோ சித்தார். திராவிடர் கழகத்தில் இருந்த அண்ணாதுரை, நெடுஞ்செழியன், என்.வி.நடராஜன், அன்பழகன், கருணாநிதி போன்றவர்களில் ஒருவரை தனக்கு அடுத்த வாரிசாக நியமிக்க விரும்பவில்லை. இவர்கள் மீது ஈவேராவிற்கு நம்பிக்கையில்லை. அதனால்தான் ராஜாஜியிடம் தனக்கு அடுத்த வாரிசாக மணியம் மையை நியமிக்கப் போவதாகவும், அவரையே திரு மணம் செய்து கொள்ள போவதாகவும் ஆலோசித் துள்ளார். ராஜாஜியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

என்கிறது ஆர்.எஸ்.எஸ். இதழ்.

இது உண்மையா? ராஜாஜி சம்மதம் தெரிவித்தாரா? மாறுபட்ட கருத்தைச் சொன்னாரா?

இதுபற்றி உண்மை நிலையை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஆதாரபூர்வமாக ஆவணங்களின் அடிப்படையில் வெளிப்படுத்தினார்.

“பெரியார் மணியம்மை திருமணம்“ என்னும் தலைப்பில் உண்மை நிலவரங்கள் வெளிப்பாடு என்னும் நூலாகவே  (பக்கம் 225, 226) வெளிவந்துள்ளது. (2007ஆம் ஆண்டு)அந்த விவரம் இதோ:

ராஜாஜி பெரியாருக்கு எழுதிய கடிதம்

அந்தரங்கம்

அன்புக்குரிய ஆப்த நண்பருக்கு,

தங்களுடைய கடிதம் இன்றுதான் வெளியூரிலிருந்து திரும்பியதும் பார்த்தேன்.

என்பால் தாங்கள் காட்டும் அன்பைக் கண்டு நான் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அன்பு நாட்டுக்கு எந்தவிதத்திலாவது உதவும்.

தங்களுடைய கடிதத்தில் கண்டிருக்கும் விஷயத்தில் ஒரு கஷ்டம் இருக்கிறது. அதாவது என்னுடைய பதவி, இந்தப் பதவியை வகிப்பவன் அந்தப் பதவியை வகித்து வரும் காலத்தில் சாட்சி கையொப்பமிடுவது அல்லது அதிகாரிகள் முன்னிலையில் அத்தாட்சியாக நிற்பது இதற்கெல்லாம் பெரும் பதவியை ஒட்டிய வழக்கத்திற்கும், பதவியின் கவுரவத்துக்கும் ஒவ்வாத காரியம் என்று இவ்விடத்திய உத்தியோகக் கூட்டம் அபிப்பிராயப்படுவார்கள். என் அன்புக்கு அடை யாளமாக வேறு ஏதேனும் செய்ய வேண்டுமேயொழிய சாட்சி கையொப்பத்துக்காகப் போவது அசாத்தியம். இது ஒரு விஷயம்.

இரண்டாவதாக, உலக அனுபவத்தில் என்னைவிட தங்களுக்கு அனுபவம் அதிகம். 30 வயது பெண் தங்களுக்குப் பின் தங்களிடம் எவ்வளவு பக்தியும் அன்பும் இருந்த போதிலும் சொத்தைத் தாங்கள் எண்ணுகிறபடி பரிபாலனம் செய்வாள் என்று நம்பு வதில் பயனில்லை. அதற்காக நிபந்தனைகள் வைத்துச் சாசனம் எழுதினால், அது தகராறுகளுக்கும், மனோ வேதனைக்கும் நீடித்த வியாச்சியங்களுக்கும் தான் காரணமாகும். இதையெல்லாம் யோசித்து எப்படிச் செய்ய வேண்டுமோ அப்படிச் செய்வீர்கள். தங்களு டைய வயதையும், நான் தங்கள்பால் வைத்திருக்கும் அன்பையும் கருதி, ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்த வயசில் விவாக எண்ணம் வேண்டாம் என்பது என் அபிப்பிராயம். ஆகையால், ஒரு வருடமாவது ஒத்தி வைத்து பிறகு மனதில் எண்ணங்கள் ஊர்ஜிதப் பட்ட பின் செய்வது நலம்.

எழுதத் தோன்றியதெல்லாம் எழுதினேன். மன் னிக்க வேண்டும்.

இவை அன்புடன்

இராசகோபாலாச்சாரி

இந்த நூல் வெளிவந்து 11 ஆண்டுகளுக்குப் பிறகு உண்மைக்கு முற்றிலுமே மாறாக இப்படியொரு அண்டப்புளுகு, ஆகாசப் புளுகு பொய் மலத்தில் புழுத்த புழுவாக, தன் பூணூல் புத்தியைக் காட்டிக் கொள்வது என்பதை மக்கள் உணர்வார்களா? இது எந்தத் தரத்தைச் சார்ந்தது?

அப்பாவித்தனமாக அந்த அமைப்புகளில் சிக்கிக் கொண்ட அனுமார்த் தமிழர்களும் உணர்ந்து திருந்து வார்களாக?

-'கருஞ்சட்டை'
- விடுதலை நாளேடு, 7.8.18

சனி, 7 நவம்பர், 2020

மனிதநேயம் துளியுமில்லாத இரக்கமற்ற மனுநீதிக்கொள்கை

ஆத்திரம் ஆவேசம் அடையாதீர்கள் ; படித்த பின்..... பிராமணன் எழுதிவைத்துள்ள மனிதநேயம் துளியுமில்லாத இரக்கமற்ற  மனுநீதிக்கொள்கை
(தயவுசெய்து ஆழ்ந்து கருத்தூண்றி கவனமாகப் படியுங்கள்... குறிப்பாக பெண்கள் கண்டிப்பாக படித்துணர்ந்து சிந்திக்க வேண்டும்)
1. *"பிராமண குலத்தில் பிறந்தவன் ஆச்சாரமில்லாதவனாயினும், அவன் நீதி செலுத்தலாம். சூத்திரன் ஒரு போதும் நீதி செலுத்தலாகாது"*
 (அத்தியாயம் 8. சுலோகம் 20.)

2. *"சூத்திரர் நிறைந்த தேசம் எப்பொழுதும் வறுமை உடையதாயிருக்கும்"*
 (அத்தியாயம்8. சுலோகம்.22.)

3. *"சூத்திரனாகவும், மிலேச்சனாகவும் (இழிவானவன்) பன்றியாகவும் பிறப்பது தமோ குணத்தின் கதி"*
 (அத்.8. சுலோ. 22.)

4. *"ஸ்திரிகள்(பெண்கள்) புணர்ச்சி விஷயத்திலும், பிராமணரைக் காப்பாற்றும் விஷயத்திலும் பொய் சொன்னால் குற்றமில்லை"* 
(அத்.8. சுலோ.112.)

5. *"நீதி ஸ்தலங்களில் பிரமாணம் செய்ய வேண்டிய பிராமணனை 'சத்தியமாகச் சொல்லுகிறேன்' என்று சொல்ல செய்ய வேண்டும். பிரமாணம் செய்ய வேண்டிய சூத்திரனை பழுக்கக் காய்ச்சின மழுவை எடுக்கச் சொல்ல வேண்டும்; அல்லது தண்ணீரில் அமிழ்த்த வேண்டும். சூத்திரனுக்கு கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தியதால் உயிர் போகாமலும் இருந்தால் அவன் சொன்னது 'சத்தியம்'என உணர வேண்டும்"*
 (அத். 8. சுலோ. 113 115.)

6. *"சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கை அறுக்க வேண்டும்"* 
(அத்.8. சுலோ. 270.)

7. *"சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளை சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும்"* 
(அத்.8. சுலோ.271.)

8. *"பிராமணனைப் பார்த்து, "நீ இதைச் செய்ய வேண்டும்" என்று சொல்லுகிற சூத்திரன் வாயிலும் காதிலும் எண்ணெயைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்* 
(அத்.8. சுலோ.272.)

9. *"சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்தில் உட்கார்ந்தால் அவனது இடுப்பில் சூடு போட்டாவது அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரை விட்டுத் துரத்த வேண்டும்"* 
(அத்.8. சுலோ.281.)

10. *"பிராமணனைக் காப்பாற்றும் பொருட்டு பிராமணரல்லாதாரைக் கொன்றவனுக்கு பாவமில்லை"* 
(அத்.8. சுலோ.349.)

11. *"சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால் அவனது உயிர்ப் போகும் வரையும் தண்டிக்க வேண்டும்."*
*"பிராமணன் கொலைக் குற்றம் செய்தாலும் அவனைக் கொல்லாமலும், எத்தகைய தண்டனைக்கும் ஆளாக்காமலும் பொருளைக் கொடுத்து அனுப்பிவிட வேண்டும்."* 
(அத்.8. சுலோ.380.)

12. *"அரசன் ; பிராமணர் முதலிய உயர்ந்த சாதிக்கு சூத்திரனை பணி விடை செய்யும்படி கட்டளையிட வேண்டும். சூத்திரன் மறுத்தால் அவனைத் தண்டிக்க வேண்டும்."* 
(அத். 8. சுலோ.410.)

13. *"பிராமணன் கூலி கொடுக்காமல் சூத்திரனிடம் வேலை வாங்கலாம்; ஏனென்றால் பிராமணனுக்குத் தொண்டு செய்யவதற்குத்தான் கடவுளால் சூத்திரன் படைக்கப் பட்டிருக்கிறான்"* 
(அத். 8. சுலோ.413.)

14. *"பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்றலாம். ஏனென்றால் அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் உடையவனாக மாட்டான்"* 
(அத். 8. சுலோ.417.)

15. *"சூத்திரன் பொருள் சம்பாதித்தால், அது அவனுடைய எஜமானனாகிய பிராமணனுக்குச் சேர வேண்டுமேயன்றி சம்பாதித்தவனுக்குச் சேராது"* 
(அத். 9. சுலோ.416.)

16. *"பிராமணனால் சூத்திர ஸ்திரீக்கு பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்கு தந்தை சொத்தில் பங்கில்லை"*
 (அத். 8. சுலோ.155.)

17. *"பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனை சித்தரவதை செய்து கொல்ல வேண்டும். ஆனால் சூத்திரனுடைய பொருளை பிராமணன் தம் இஷ்டப்படி கொள்ளையிடலாம்."* 
(அத்.9. சுலோ.248.)

18. *"பிராமணன் மூடனானாலும்(முட்டாள்) அவனே மேலானதெய்வம்"* 
(அத். 9. சுலோ. 317.)

19. *"பிராமணர்கள் இழி தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் பூஜிக்கத் தக்கவர்கள் (வணங்கத் தக்கவர்கள்) ஆவார்கள்."* 
(அத். 9. சுலோ.319.)

20. *"பிராமணனிடமிருந்து சத்திரியன் உண்டானவனாதலால் அவன் பிராமணனுக்கு துன்பஞ் செய்தால் அவனை சூன்னியம் செய்து ஒழிக்க வேண்டும்."* 
(அத்.9 சுலோ. 320.)

21. *"சூத்திரன் ;  பிராமணுக்குபணி விடை செய்வது  ஒன்றே பயன் தருவதாகும். அவன் பிராமணனில்லாதவிடத்தில் க்ஷத்திரியனுக்கும் க்ஷத்திரியனில்லா விடத்தில் வைசியனுக்கும் தொண்டு செய்ய வேண்டும். அதிகமான செல்வமும், பசுக்களும் வைத்திருக்கிறவன், பிராமணன் கேட்டுக் கொடுக்காவிட்டால்களவு செய்தாவது, அல்லது பலாத்காரம் செய்தாவது அவற்றை பிராமணன் எடுத்துக் கொள்ள உரிமையுண்டு."* 
(அத்.11. சுலோ.12.)

22. *"சூத்திரன் வீட்டிலிருந்து கேட்காமலும் யோசிக்காமலும் தேவையான பொருளைப் பிராமணன் பலாத்காரத்தினால் கொள்ளையிடலாம்." 
(அத்.11. சுலோ.13.)

23. *"யோக்கியமான அரசன் இவ்விதம் திருடிய பிராமணனைக் தண்டிக்கக் கூடாது."* 
(அத்.11. சுலோ.20.)

24. *"பெண்களையும் சூத்திரரையும் கொல்லுவது மிகவும் குறைந்த பாவமாகும்."* 
(அத்.11. சுலோ.66.)

25. *"ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் என்னவோ ; அதைத்தான் சூத்திரனைக் கொன்றாலும் செய்ய வேண்டும்."* 
(அத்.11. சுலோ.131.)

25(அ). *"அதுவும் முடியாவிடில் வருண மந்திரத்தை 3 நாள் ஜெபித்தால் போதுமானது."* 
(அத்.11. சுலோ.132.)

26. *"க்ஷத்திரியன் இந் நூலில் (மநுதர்ம சாஸ்திரத்தில்) சொல்லப்பட்டபடி ராஜ்யபாரம் (அரசாட்சி) பண்ணுவதே தவமாகும். சூத்திரன் பிராமணுக்கு பணி விடை செய்வதே தவமாகும்."* 
(அத்.11 சுலோ.285.)

27. *"சூத்திரன் பிராமணனுடைய தொழிலைச் செய்தாலும் சூத்திரனே யாவன். பிராமணன் சூத்திரனுடைய தொழிலைச் செய்யின் பிராமணனேயாவன். ஏனெனில் கடவுள் அப்படியே நிச்சயம் செய்துவிட்டார்."*
 (அத்.10. சுலோ.75.)

28. *"பிராமணரல்லாதவன் உயர்குலத்தோருடைய தொழிலைச் செய்தால் ; அரசன் அவனது பொருள் முழுவதையும் பிடுங்கிக் கொண்டு அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும்."* 
(அத்.10. சுலோ.96.)

29. *"சூத்திரன் இம்மைக்கும், மோட்சத்திற்கும் பிராமணனையே தொழ வேண்டும்."* 
(அத்.10. சுலோ.96.)

30. *"பிராமணன் உண்டு மிகுந்த(மீதி) எச்சில் ஆகாரமும், உடுத்திக் கிழிந்த ஆடையும், கெட்டுப் போன தானியமும், சூத்திரனுடைய ஜீவனத்துக்கு கொடுக்கப்படும்."* 
(அத்.10. சுலோ.125.)

31. *"சூத்திரன் எவ்வளவு திறமையுடையவனாக இருந்தாலும் கண்டிப்பாக பொருள் சேர்க்கக் கூடாது. சூத்திரனைப் பொருள் சேர்க்கவிட்டால் அது பிராமணனுக்கு துன்பமாய் முடியும்."* (அத்.10. சுலோ.129.)
(கோபம் கொப்பளிக்க ; மனக்குமுறலுடன் படித்து முடித்திருப்பீர்கள்.....சிந்தித்துப் பாருங்கள்...)
பெண்களுக்கு எதிராக மட்டுமல்ல மனித குலத்திற்கே எதிரான மனுஸ்மிருதி...என்பதை புரிந்து கொள்ளுங்கள்; தமிழ் மக்களே...
-கட்செவி வழியாக...

வெள்ளி, 6 நவம்பர், 2020

தீபாவளி.. இதுதான்உண்மை.!!!?

#தீபாவளி.. இதுதான்உண்மை.!!!?

#தீபாவளி சமணரிட மிருந்து  பெற்றுக் கொண்ட பண்டிகை.

 கடைசி #தீர்த்தங்கரரான #வர்த்தமான_மகாவீரர் பாவாபுரி நகரிலே அவ்வூர் அரசனுடைய அரண்மனையிலே தங்கி இருந்தபோது அங்குக் குழுமி இருந்த மக்களுக்கு அறிவுரை செய்தருளினார்.

 இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது.

 வைகறைப் பொழுது ஆனபடியினாலே சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர்.

வர்த்தமான #மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே #இயற்கைஎய்தினார். 

பொழுது விடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்தபோது #மகாவீரர்_இயற்கைஎய்தி இருப்பதைக் கண்டு அரசனுக்கு அறிவித்தனர். 

அவ்வரசன் மற்ற அரசர்களை வரவழைத்து ..அவர்களோடு யோசனை செய்து ..உலகத்திற்கு அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு..

 அவர் இயற்கை எய்திய நாளில் வீடு தோறும் #விளக்குகளை_ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். 

அது முதல் இந்த விழா (தீபம் = விளக்கு, ஆவலி = வரிசை; #தீபாவலி) 

மகாவீரர் விடியற்காலையில் இயற்கை எய்தியபடியால் தீபாவளி என்ற பெயரில் விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது.

 விடியற்காலையில் நீராடிய பின்னர் திருவிளக்கு ஏற்றித் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறதன்றோ!

#சமணசமயம்_வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் வழக்கமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வந்தனர்.

 இந்த வழக்கத்தை நீக்க முடியாத #ஆரியர்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. 

ஆனால் பொருத்தமற்ற #புராணக்கதைகளைக்_கற்பித்துக் கொண்டார்கள்.

 #திருமால்_நரகாசுரனைக்_கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவதுதான் #தீபாவளி என்றும் கூறப்படும் புராணக்கதை பொருத்தமானது அன்று. 

அன்றியும் இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர் வீரர்களின் முறையும் அன்று. சூரியன் புறப்பட்ட பிறகுதான் போரைத் தொடங்குவது பண்டைக் காலத்துப் போர் வீரர்கள் நடைமுறையில் கொண்டிருந்த பழக்கம். 

#சமணர்_கொண்டாடி வந்த #மகாவீரர் இயற்கை எய்திய நினைவு நாள் #தீபாவளி என்பதில் அய்யமில்லை.

 ஆனால் இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ளும் மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்ட கதைதான் #நரகாசுரன்_கதை.

அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி
நூல்: சமணமும் தமிழும்  பக்கம்: 79-80
#மீள்வாசிப்பு
- ஆனந்தகுமார், முகநூல் பதிவு, 7.11.19