நகரும் ஆண்டில் நலிவுகள் ஏராளம்!
வரும் புத்தாண்டை வலியில்லா வளமை தரும் புத்தாண்டாக ஆக்க பகுத்தறிவால் பயணிப்போம்!
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
31.12.2021
மனிதப்பற்று, தன்மானம், பகுத்தறிவு, சரிநிகர், இனவுணர்வு, மொழி உணர்வு இவற்றிற்காகவும் நலவாழ்வு,வரலாறு மற்றும் சிந்தனைத் தூண்டலுக்காகவும் பயன்பட
நகரும் ஆண்டில் நலிவுகள் ஏராளம்!
வரும் புத்தாண்டை வலியில்லா வளமை தரும் புத்தாண்டாக ஆக்க பகுத்தறிவால் பயணிப்போம்!
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
31.12.2021
மத்திய கல்வி நிறுவனம் சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் இடம் பெற்ற பாலினப் பாகுபாட்டை ஊக்குவிப்பது தொடர்பான கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "பெண்கள் ஆண்களுக்கு அடிமையாக இருக்கவேண்டும். அப்படி இல்லாத காரணத்தால் இன்று பெரும் சிக்கலை சமூகம் சந்தித்துவருகிறது என்ற பார்வையில் எழுதப்பட்டதற்கு சி.பி.எஸ்.இ. நாட்டுமக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்" என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மக்களவையின் கேள்வி நேரத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.
சி.பி.எஸ்.இ. பாடப்பிரிவில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வில் குடும்ப ஒழுக்கம் குறித்த கேள்வி இடம் பெற்றுள்ளது. அந்த கேள்வித்தாளில் பிரிவு 'ஏ'வில் கீழ்க்கண்ட சிறுகுறிப்பை படித்துவிட்டு, அது குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலை எழுத வேண்டும் எனக் குறிப்போடு ஒரு பெரிய பத்தி கொடுக்கப் பட்டது, 21ஆம் நூற்றாண்டிலும் இத்தகு சீழ்பிடித்த சிந்தனையா என்ற வினாவை எழுப்புகிறது.
1) இல்வாழ்கையில் மனைவிமார்கள் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு வலுப்பெறுவதினால் பெற்றோர் என்ற கட்டமைப்பு வலுவிழந்து போகிறது.
2) முன்பெல்லாம் கணவனுக்கு மனைவி கீழ்ப்படிந்து நடந்த நிலையில் தற்போது அவ்வாறு இல்லை. இதனால் அதை பார்க்கும் குழந்தைகள் மற்றும் வீட்டுப் பணியாளர்களிடம் ஒழுங்கீனம் ஏற்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த சிறுகுறிப்பிற்கு ஒரு தலைப்பை இடுமாறும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
3) குழந்தைகளின் ஒழுங்கீனத்திற்கு யார் காரணம்?
4) வீட்டில் ஒழுக்கம் சீர்கெட என்ன காரணம்?
5) வீட்டில் குழந்தைகள் பணியாளர்களுக்கான இடம்.
6) குழந்தைகள் உளவியல், எனக் கேள்விகள் இடம் பெற்றன. இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு நாம் எதை சொல்லித் தருகிறோம் என கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேசப் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், "இதை நம்ப முடியவில்லை. இதைத்தான் நாம் குழந்தைகளுக்கு சொல்லித் தருகிறோமா? இதன் மூலம் பெண்கள் மீதான பிற்போக்குத்தனமான கருத்துகளை பா.ஜ.க. அரசு ஆமோதிக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது.
இதை ஏன் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் வைத்துள் ளார்கள்?" என கேள்வி எழுப்பியதுடன் அந்த வினாத்தாளை பிரதமர் நரேந்திர மோடியின் டிவிட்டருக்கும் டேக் செய்துள்ளார். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர் பாளர் லட்சுமி ராமச்சந்திரன் கூறுகையில், "முட்டாள் தனமான ஒரு சிறுகுறிப்பை சி.பி.எஸ்.இ. தேர்வில் வைத்தது யார்?
'இதற்கு சி.பி.எஸ்.இ. வாரியம் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஒட்டுமொத்த சிறு குறிப்புகளுமே முட்டாள் தனமாக உள்ளது. எந்த முட்டாள்கள் இது போன்ற கேள்வித்தாளை தயார் செய்தது? இது பாலின பாகுபாட்டையும் ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. அது போல் குடும்பங்கள் மீதான பிற்போக்குத்தனமான கருத்தை ஆதரிப்பதாகவே உள்ளது" என்றார்.
அது போல் இந்த சம்பவம் குறித்து கரூர் எம்.பி. ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் "பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகளுக்கு எதிரான பொறுப்பற்ற வெறுப்பை உமிழும் இத்தகைய கேள்விகளை சி.பி.எஸ்.இ. வாரியம் திரும்ப பெற வேண்டும். இது பாலின பாகுபாட்டை ஊக்குவிப்பதோடு இந்திய அரசமைப்பு சட்டம் முன்னி றுத்திய பாலினக் கொள்கைக்கு எதிரானதாகும்" என கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மக்களவையில் கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பேசியுள்ளார். “மிகவும் பிற்போக்குத்தனமான இந்த கேள்விகளை தயாரித்து, அதை அனுமதித்து பிள்ளைகள் கைகளில் கொண்டு சேர்த்த சி.பி.எஸ்.இ. நிர்வாகம் நாட்டு மக்களி டையே மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.
இன்றைக்கு அதிகாரப் பீடத்தில் அமர்ந்துள்ள பி.ஜே.பி.யின் கொள்கை என்பது இந்து மதக் கோட்பாட்டைக் கொண்ட மனுதர்ம ஆட்சி. இந்திய அரசமைப்புச் சட்டமாக மனுதர்மம் கொண்டு வரப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸின் குருநாதர் கோல்வால்கர் 'ஞான கங்கையில்' (Bunch of Thoughts) கூறியுள்ளார். இவர்கள் கூறும் புதிய கல்வித் திட்டமும் பிற்போக்கானதே! இந்த அளவில் ஆட்சியின் பாதை அமைந்துள்ளது. மக்கள் தொகையில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் வாக்குச் சீட்டு ஆயுதத்தின் மூலம் பாடம் கற்பிக்க முன் வரட்டும்.
பிரச்சினை கடுமையான நிலையில், வினாத்தாளில் சம்பந்தப்பட்ட பகுதி நீக்கப்பட்டாலும் "குற்றம் குற்றமே!" என்பதில் அய்யமில்லை.
புதுடில்லி. டிச. 14 பெண்கள் விடுதலை குறித்து கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய கேள்வியை நீக்கு வதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் பாடத் திட்டத்தில் சேர்க்கப் பட்ட விவகாரம் குறித்து விளக் கம் கேட்டு அறிக்கை அனுப்பி யது டில்லி மகளிர் ஆணையம்.
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாண வர்களுக்கான முதல் பருவத் தேர்வில் கடந்த 11-ஆம் தேதி நடை பெற்ற ஆங்கிலத் தேர்வுக்கான வினாத்தாளில், பெண்கள் தங்கள் கணவருக்கு அடங்கி இருக்க வேண்டும் என்ற பொருளில் கேள்வி இடம்பெற்றது.
மேலும், மற்றொரு கேள் வியில், கணவனின் பேச்சை கேட்டால் தான் குழந்தைகளின் கீழ்படிதலை தாயால் பெற முடியும் என்றும், குழந்தைகள் மீதான பெற்றோரின் அதிகா ரத்தை பெண் விடுதலை அழித்து விடுகிறது என்பது போன்ற கருத்துகள் இடம்பெற்றிருந்தது.
பெண் அடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் விதமாக அமைந் துள்ள இந்த பத்தி வினா கேள்வி களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த விவகாரம் இன்று நாடாளு மன்றத்திலும் எதிரொலித்தது.
இதுகுறித்து மக்களவையில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சிபிஎஸ்இ தேர்வில் பெண்கள் மீதான வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கேள்வி இடம் பெற்றதற்கு “மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத் தினார். மேலும் இந்த கேள்வி களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில், சர்ச்சைக் குரிய இந்த கேள்விகளை கேள்வித்தாளில் இருந்து நீக்குவதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளதோடு, அந்த கேள்விக்கு அனைத்து மாணவர் களுக்கும் முழு மதிப்பின் வழங் கப்படும் என்று தெரிவித் துள்ளது. இந்த நிலையில் இந்த பிற் போக்குத்தனமான கேள்வி இடம் பெற்றது தொடர்பாக டில்லி மகளீர் ஆணையம் சிபிஎஸ்இ நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பி உள்ளது
காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் திரு.அண்ணாமலை டுவிட்டரில் - கட்சியின் அதிகாரப்பூர்வமான முறையில் நேற்று (13.12.2021) பிற்பகல் 12.48 மணிக்குக் கீழ்க்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் விபத்தில் மரணித்தது குறித்து. திராவிடர் கழகத்தின் சார்பில் இரங்கலையும், வீர வணக்கத்தையும் 'விடுதலை' நாளேட்டில் 8.12.2021 அன்று வெளியிட்டுள்ளோம்.
உண்மை இவ்வாறு இருக்க, 'திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அதிகாரப்பூர்வமான துணை அமைப்புகள் ஜெனரல் பிபின் ராவத் இறந்தது சரிதான் என்று கொண்டாடி இருப்பதாக' தமிழ்நாடு பா.ஜ.க.வின் தலைவர் திரு.அண்ணாமலை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
எங்கு, எப்பொழுது திராவிடர் கழகம் பிபின் ராவத் இறந்தது சரிதான் என்று கொண்டாடியது என்று விளக்கப்படவில்லை என்பதிலிருந்தே, இது பொய்யானது என்பது வெளிப்படை.
திராவிடர் கழகத்தின்மீது பொய்யான வகையில் அபாண்டமாக அவதூறு பரப்பி, மக்கள் மத்தியில் திராவிடர் கழகத்தைப்பற்றி மோசமான அபிப்ராயம் உருவாகும் வகையில் செயல்பட்டுள்ளார்.
தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்டு, 75 ஆண்டுகளுக்குமேல் - மக்கள் மத்தியில் நிலவும் தீண்டாமை, ஜாதி, மூடநம்பிக்கை இவற்றை எதிர்த்தும், சமூகநீதி, பெண்ணுரிமை, மதச்சார்பற்ற தன்மை, பகுத்தறிவுப் பிரச்சாரத்தையும், செயல் பாடுகளையும் மேற்கொண்டுவரும் அரசியல் சார்பில்லாத ஒரு சமூக சீர்திருத்த இயக்கத்தின்மீது அவதூறு பரப்பியுள்ள தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் திரு.அண்ணாமலைமீது சட்டப்படியான உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசையும், குறிப்பாகக் காவல்துறையையும் கேட்டுக்கொள் கிறோம்.
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
14.12.2021
----++++----+++-----+-+++--++++++------+++--
திராவிடர் கழகத்தின்மீது தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவதூறுப் பிரச்சாரம் குறித்து காவல் துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் துறை ஆணையரிடம் கழகத்தின் சார்பில் இன்று (14.12.2021) கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை,டிச.8- புலம்பெயர்ந்த தமிழர்கள் நலனுக்காக தமிழ்நாடு அரசின் சார்பில்,‘ மறுவாழ்வு மற்றும் தமிழ்நாட்டுக்கு வெளியில் வாழும் தமிழர் ஆணையரகம்’ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை நேற்று (7.12.2021) சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது: ஆண்டுதோறும் ஜன. 12ஆம் தேதி `புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாளாக' கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதன்படி, ஜன. 12, 13ஆம் தேதிகளில் புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாள் விழா, `தமிழால் இணைவோம்' என்ற பெயரில் சென்னையில் கொண்டாடப்படுகிறது.
இதில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் விவரங்களை புதிதாக தொடங்கப்பட்டுள்ள இணையதளத்தில் பதிவு செய்யலாம். இந்த இணையதளம் மூலம் புலம் பெயர் தமிழர்களுக்காக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளலாம். வெளிநாடுகளில் வசிப்போர் தாங்கள் பிறந்த கிராமத்தின் மேம்பாட்டுக்காக ஏதேனும் செய்ய விரும்பினால், அவர்கள் பெயரிலேயே அந்த நலத்திட்டங்கள் செய்யப்படும். வெளிநாடுகளுக்கு குறிப்பிட்ட பணிக்காக செல்வோர், அங்கு வேறு பணிகளில் அமர்த்தப்படும் நிலை உள்ளது. எனவே, அவர்கள் பணி தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகாம் வாழ் இலங்கை தமிழர்கள் தங்கள் சொந்த நாடு செல்ல விரும்பினால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
இந்தியாவில் ஒமைக்ரானால் பிப்ரவரிக்குள் 3ஆவது அலை: அய்.அய்.டி. விஞ்ஞானி கணிப்பு
மும்பை, டிச.8 ஒமைக்ரானால் பிப்ரவரிக்குள் 3ஆவது அலை ஏற்படும் என்று அய்.அய்.டி. விஞ்ஞானி மனிந்திர அகர்வால் கணித்துள்ளார்.
கரோனா உருமாறிய தொற்று 3ஆவது அலையாக அக்டோபருக்குள் தாக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்து இருந்தனர். அதன்படி 3ஆவது அலை தாக்கவில்லை. இந்தநிலையில் வருகிற பிப்ரவரிக்குள் ஒமைக்ரான் தொற்றுடன் 3ஆவது அலை உச்சத்தை எட்டும் என்று கரோனா கணிப்பு வியூக நிபுணரும், இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன (அய்.அய்.டி.) விஞ்ஞானியுமான மனிந்திரா அகர்வால் எச்சரித்து உள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:-
இப்போதைய கணிப்பு படி தற்போதைய புதிய வைரசுடன் வருகிற (2022) பிப்ரவரிக்குள் 3ஆவது அலை உச்சத்தை எட்டும். அப்போது நாட்டில் தினமும் 1 லட்சம் முதல் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படலாம். ஆனால் இது 2ஆவது அலையை விட மிதமானதாகவே இருக்கும். தற்போதைய புதிய மாறுபாடு அதிக பரவும் தன்மையை கொண்டது போல் தெரிகிறது. ஆனால் அதன் தீவிரம் டெல்டா மாறுபாட்டில் காணப்படுவது போல் இல்லை.
இந்தநிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் தொற்று பரவலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தற்போது வரை இந்த தொற்று தென் ஆப்பிரிக்காவில் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யவில்லை. ஆனால் அங்கு தொற்று பரவல் மற்றும் மருத்துவமனைகளில் நோயாளிகள் சேர்க்கை போன்ற தரவுகள் நமக்கு தெளிவான பிம்பத்தை தரும். இவ்வாறு அவர் கூறினார்.
காந்தியின் இந்தியா கோட்சேவின் இந்தியாவாக மாறுவது போல் உணர்கிறேன் - மெகபூபா முப்தி
புதுடில்லி, டிச.8 காந்தியின் இந்தியா கோட்சேவின் இந்தியாவாக மாறுவது போல் உணர்கிறேன் என்று மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மேனாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி தலைநகர் டில்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மெகபூபா முப்தி பேசியதாவது, வாஜ்பாய் ஆட்சி காலத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் மக்கள் இந்திய அணிக்கும், இந்திய மக்கள் பாகிஸ்தான் அணிக்கும் ஆதரவாக முழக்கம் எழுப்பியது எனக்கு நினைவிருக்கிறது.
பாகிஸ்தான் மேனாள் அதிபர் பர்வேஷ் முஷரப் இந்திய அணியின் மேனாள் கேப்டன் தோனியை புகழ்ந்து பேசியுள்ளார். ஆனால், சில நாட்களுக்க்கு முன்னர் ஆக்ராவில் சில இளைஞர்கள் (காஷ்மீர் இளைஞர்கள்) இந்தியாவுக்கு எதிரான போட்டியின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பினர்.
இந்த வழக்கில் இளைஞர்களுக்கு ஆதரவாக வாதாட ஒரு வழக்குரைஞர் கூட வரவில்லை. ஆகையால், காந்தியின் இந்தியா, கோட்சேவின் இந்தியாவாக மாறுவது போல் நான் உணருகிறேன் என்றார்.
* ராஜீவ் காந்தி கொலை - ஏழு ஆயுள் கைதிகள் பிரச்சினை!
* உச்சநீதிமன்றம் கூறியும் அவர்களை விடுதலை செய்ய ஆளுநர் இழுத்தடிப்பது ஏன்?
* பேரறிவாளன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லையே!
* மாநில அமைச்சரவையின் பரிந்துரைக்கு உட்பட்டவரே ஆளுநர்!
ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக 30 ஆண்டு களாக சிறையில் வாடுவோரை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்று உச்சநீதி மன்றம் கூறியதின் அடிப்படையில், மாநில அரசின் பரிந்துரைக்கு உட்பட்டவரான ஆளுநர், அவர்களை விடுதலை செய்யாமல் தாமதிப்பது - இழுத்தடிப்பது சரியல்ல என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதால், மேலும் காலதாமதம் செய் யாமல், அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
மேனாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 29 ஆண்டுகளுக்கு மேலாக (30 ஆண்டுகள்) சிறையில் உள்ளனர்.
இவர்களை விடுதலை செய்யும் முழு அதிகாரம் மாநில ஆளுநருக்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டே உத்தரவிட்டது.
பேரறிவாளன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லையே!
ஆனால், இதற்கு ஒன்றிய அரசும், சி.பி.அய்.யும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இவர்களின் விடுதலையை வலியுறுத்தி தமிழ்நாடு அமைச்சரவை செய்த பரிந்துரை யைக்கூட குடியரசுத் தலைவர் - (ஒன்றிய அரசு) கடந்த 2017 ஆம் ஆண்டு நிராகரித்தார்.
இதை எதிர்த்து பாதிப்புக்கு ஆளான பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில், ''ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டுக்கான பேட்டரியை நான் வாங்கிக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான ஓர் ஆதாரத் தைக்கூட சி.பி.அய். இதுவரை கொடுக்கவில்லை. அத னால், என்னை வழக்கிலிருந்து விடுதலை செய்ய வேண்டும்'' என்று அவ்வழக்கின்மூலம் கோரினார்.
விசாரணை அதிகாரி தியாகராசனும், நீதிபதி கே.டி.தாமசும் கூறியது என்ன?
இதை விசாரித்த உச்சநீதிமன்றம் சி.பி.அய்.க்குக் கடும் கண்டனம் தெரிவித்தது.
(இவரது வழக்கினை தொடக்கத்தில் பதிவு செய்த தியாகராஜன் என்ற எஸ்.பி., அவர் கூறியதாக வலிந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது என்று அவர் மனச்சாட்சியோடு கூறினார். அதுமட்டுமல்ல, வழக்கில் தண்டனை வழங்கிய நீதிபதி கே.டி.தாமஸ் அவர்கள் இதுபற்றி தனது மன ஒதுக்கீடுக் கருத்துகளையும் முன்பு பேட்டியாகக் கொடுத்துள்ளார்.)
தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முடிவு எடுக்க பல ஆண்டுகள் - காலதாமதம் செய்து, உச்சநீதி மன்றம் சுட்டிக்காட்டிய பின்பே, கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.
அதில் 'ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான முழு அதிகாரமும் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உண்டு. மாநில ஆளுநர் என்ற முறையில் நான் தலையிட முடியாது' என்ற ஒரு புது நிலைப்பாட்டை எடுத்தார்.
அமைச்சரவை முடிவுக்குக் கட்டுப்பட்டவரே ஆளுநர்
பல மாதங்கள் கிடப்பில் இருந்த இந்த வழக்கு, உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுமுன் விசாரணைக்கு மீண்டும் நேற்று (7.12.2021) வந்தபோது, தமிழ்நாடு அரசு சார்பாக வாதாடிய மூத்த வழக்குரை ஞர்கள் ராகேஷ் துவேதி, ஜோசப் அரிஸ்டாட்டில், ''ஆளுநர், அமைச்சரவை முடிவுக்குக் கட்டுப்பட்டவர். ஆனால், இந்த விவகாரத்தில் ஆளுநர் அமைச்சரவை பரிந்துரை யின்மீது உரிய முடிவு எடுக்க முடியாமல் காலம் தாழ்த்திவிட்டார்'' என்று குற்றம் சாட்டினர்.
மாநில அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று, அதன் அடிப்படையில் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெளிவுடுத்திவிட்டது. இந்த நிலையில், ஆளுநர் தாமதிப்பது சரியல்ல.
பேரறிவாளன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரை ஞர் கோபால் சங்கர நாராயணன், ''பேரறிவாளன்மீதான குற்றச்சாட்டில் ஓர் ஆதாரத்தைக்கூட சி.பி.அய்.யால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியவில்லை; அதனால், அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்ய வேண்டும்.
மாநில ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்யலாம் என உச்சநீதி மன்றம் தெளிவான உத்தரவு பிறப்பித்தும், அவர் அதனைக் கருத்தில் கொள்ளவில்லை. இந்த விவகாரம் இழுத்தடிக்கப்படுகிறது. அதுவரை பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கவேண்டும்'' என்றும் கோரியுள்ளார்.
''வாய்தா இனி கிடையாது!'' - உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் ''ஆளுநரின் - ஒன்றிய அரசின் முடிவு காலதாமதப்படுத்துவதை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் உடனடியாக முடிவு எடுக்கவேண்டும்'' என்று உறுதிபடக் கூறியுள்ளது.
வாய்தா கேட்ட ஒன்றிய அரசின் கூடுதல் சொலி சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் தனது கடும் அதிருப்தியையும் பதிவு செய்துள்ளார் நீதிபதி.
பின், ''ஒரே ஒருமுறைதான் - இம்முறை மட்டும்தான் வாய்ப்புத் தரப்படும்'' என்று கூறி, ஜனவரிக்கு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர். மீண்டும் வாய்தா கேட்கக் கூடாது என்றே திட்டவட்டமாகத் தெரிவித் துள்ளனர்!
இதில் அரசமைப்புச் சட்டத்தினை ஆளுநர் மதிக்கும் கட்டாய பிரச்சினையும் ஆளுநருக்குச் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
ஆளுநர் ஒன்றிய அரசின் கருத்துகளைப் பிரதி பலித்துதான் அவரது முடிவை இப்படி காலந்தாழ்த் துவதாகத்தான் பொருள், ''தாமதிக்கப்பட்ட நீதி மறுக் கப்பட்ட நீதி'' என்ற நிலைமைக்கு அவர் தள்ளுவதாகவே ஆகும். உச்சநீதிமன்ற அவமதிப்புக்கும் ஆளுநர் உள்ளாகி விட்டதுமாகும்.
நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டதன் நோக்கமென்ன?
எனவே, ஆளுநர் - ஒன்றிய அரசு மேலும் காலதாமதம் செய்வது, நியாயத்திற்கும், சட்டத்திற்கும் ஏற்புடையத்தக்கதாகாது.
அது, நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டுள்ளதன் தத்துவத்திற்கு எதிரானதாகி விடும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
8.12.2021