*அமைதி ஊர்வலம் * கருத்தரங்கம் *விருது வழங்கும் விழா
சென்னை, டிச. 24- தந்தை பெரியார் அவர்களின் 47ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சிகள் இன்று (24.12.2020) சென்னையில் எழுச்சியுடன் நடை பெற்றன.
இன்று காலை 8.45 மணிக்கு சென்னை அண்ணா சாலை பெரியார் பாலம் அருகில் தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்தார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, சட்டத்துறை தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி, துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, அமைப்புச்செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் மாநில, மண்டல பொறுப்பாளர்கள், தென்சென்னை, வடசென்னை, ஆவடி, தாம்பரம், கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர், திருவொற்றியூர் கழக மாவட்டப் பொறுப்பாளர்கள், மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, மாணவர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அணி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் அண்ணாசாலை பெரியார் சிலை அருகிலிருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டு, சிந்தாதரிப்பேட்டை, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை வழியே பெரியார் திடலை அடைந்தது.
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந் துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு கழக மகளிரணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் மாலை அணிவித்தனர். பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் 21 அடி முழு உருவச்சிலைக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் தலைமையில் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கப் பட்டது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கூற, அவரைத் தொடர்ந்து கழகப்பொறுப்பாளர்கள் சூளுரை ஏற்றனர்.
அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரி யாதை சுட ரொளிகள் நினைவிடங்களில் மலர் வளை யம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் தனி மனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா பரவல் தடுப்புக்கான கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சிகள் நடை பெற்றன. கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளின் காரணமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஊர்வலத் தில் பங்கேற்காமல் அரங்க நிகழ்வில் பங்கேற்றார்கள்.
Ôசமூக நீதிக்கான கி.வீரமணி விருதுÕ
வழங்கும் விழா
காலை 10 மணி முதல் முற்பகல் 11 மணி வரை பெரியார் பன்னாட்டமைப்பு (அமெரிக்கா) சார்பில் Ôசமூக நீதிக்கான கி.வீரமணி விருதுÕ வழங்கும் விழா காணொலியிலும், நேரிலும் நடைபெற்றது.
காணொலிமூலம் பன்னாட்டளவில் பலரும் பங்கேற்றனர். விழாவில் பெரியார் பன்னாட்டமைப்பு (அமெ ரிக்கா) தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன் காணொலிமூலம் வரவேற்புரை ஆற்றினார்.
பெரியார் பன்னாட்டு அமைப்பு (அமெரிக்கா) சார்பில் 2020ஆம் ஆண்டுக்கான Ôசமூகநீதிக்கான கி.வீரமணி விருதுÕ விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் டாக்டர் தொல்.திருமாவள வன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. டாக்டர் இலக்கு வன்தமிழ் காணொலிமூலம் விருதினை வழங்கினார். மருத்துவர் மீனாம்பாள் விருதினை நேரில் வழங்கினார்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுச்சித்தமிழர் தொல். திருமா வளவன் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துரை ஆற்றினார். விருதினைப் பெற்றுக் கொண்டு எழுச்சித்தமிழர் டாக்டர் தொல்.திருமா வளவன் ஏற்புரை ஆற்றினார்.
பேராசிரியர் டாக்டர் ரவிசங்கர் கண்ணபிரான் காணொலிமூலம் நன்றி கூறினார்.
விருது வழங்கும் விழாவில் விடுதலை சிறுத்தை கள் கட்சி செய்திதொடர்பாளர், வன்னியரசு, துணைப் பொதுச்செயலாளர் பாலாஜி, மந்தைவெளி அ. அசோக், சி.ராஜ்குமார் உள்பட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள், மகளிர் அணி பொறுப்பாளர்கள் பெருந்திரளானவர்கள் பங் கேற்றனர்.
தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம்
முற்பகல் 11.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களுக்கு பயனாடை அணி வித்து இயக்க வெளியீடுகளை வழங்கி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்பு செய்தார்.
கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி வரவேற்றார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுக உரையாற்றினார்.
சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி து.அரிபரந்தாமன் கருத்தரங்க சிறப்புரையாற்றினார்.
நூல் வெளியீடு, பெரியார் விருது
‘’தந்தை பெரியாரின் சமூகநீதி சிந்தனைகள்’’ நூலை வெளியிட்டும், பெரியார் விருதினைப் பெற்றுக் கொண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினர் தோழர் தா.பாண்டியன் ஏற்புரையாற்றினார்.
திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக் குரைஞர் பா.மணியம்மை இணைப்புரை வழங்கினார்.
தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகளில் கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளா ளர் வீ.குமரேசன், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம், சென்னை மண்டல செயலாளர் தே.செ. கோபால், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், ஆவடி பா.தென்னரசு, திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க. நடராசன், கே.கே.சி.எழிலரசன், மோகனா வீரமணி, சி.வெற்றிசெல்வி, ஆம்பூர் வடசேரி மீரா ஜெகதீசன், அகிலா எழிலரசன், உமா செல்வராசு, டெய்சி மணியம்மை, பசும்பொன் செந்தில்குமாரி உள்ளிட்ட கழகப்பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
சி.பி.அய்., சி.பி.எம். கட்சிகளின் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள், திராவிடர் கழகத்தின் பல்வேறு அணிகளின் மாநில, மண்டல பொறுப்பாளர்கள், தென்சென்னை, வடசென்னை, தாம்பரம், ஆவடி, கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர், திருவொற்றியூர் கழக மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக