கேள்வி: ராஜாஜி காலத்தில் கொண்டு வரப்பட்ட குலக்கல்வி திட்டம் போன்றது- மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை அதனைக் கட்சி வரைக்கும் எதிர்க்க வேண் டும்! என்று இந்திய கம்யூனிஸ்ட் கடைசித் தலைவர் முத்தரசன் கூறியுள்ளதுபற்றி...
இந்தக் கேள்விக்குத் துக்ளக் இதழில் (18.11.2020) அரசியல் புரோக்கர் திருவாளர் சாமிநாதன் குருமூர்த்தி - பூனைக் குட்டி வெளியில் வந்தது! என்று சொல்லும் வண் ணம் அந்தரங்கத் தகவலைக் கூறியுள்ளார்.
1952இல் நடைபெற்ற சென்னை மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் கம்யூனிஸ்டுகள் உட்பட 166 எம்.எல்.ஏ.க்கள் இருந்த நிலையில், ஆட்சி அமைக்க ஆளுநரிடம் அனுமதி கோரப்பட்டது. கம்யூனிஸ்ட் பெரும்பான்மை கொண்ட கூட்டணி ஆட்சி அமையும் அபா யம் உருவானது.
அந்த ஆபத்திலிருந்து எப்படி காப்பாற் றினார்களாம்? குருமூர்த்தி கூறுகிறார். தின மணி ஆசிரியராக இருந்தஏ.என். சிவராமனும், கோயங்காவும் ராஜாஜியை நேரில் சந்தித்து, அவரின் காலில் இருவரும் சாஷ்டாங்கமாக விழுந்தார்களாம்.
சாமி நீங்கள் தான் நாட்டைக் காப்பாத் தணும் என்று வேண்டிக் கொண்டார்களாம்.
என்ன விஷயம்? என்று ராஜாஜி கேட்க, கம்யூனிஸ்ட் அபாயத்திலிருந்து தாங்கள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூற, ஜவஹர் லால் உங்களை அனுப்பினாரா, என்னை முனிஸிபாலிட்டி சேர்மனாக்க விரும்பு கிறாரா? என்று கிண்டலாகக் கேட்டாராம் ராஜாஜி.
தாங்கள் சம்மதித்தால் மட்டுமே தேசிய வாத ஆட்சி அமையும். கம்யூனிஸ்ட்களை தடுக்க வேறு வழியே இல்லை என்று இரு வரும் மன்றாடினார்களாம்.
நேரு உங்களை வேண்டிக் கொண்டால், நீங்கள் முதலமைச்சராக சம்மதிக்க வேண்டும் என்று கோயங்காவும், ஏ.என். சிவராமனும் கேட்க யோசித்தார், ராஜாஜி. நேரு விரும் பினால் கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வருவ தைத் தடுக்க என்னால் முடிந்ததைச் செய்ய நான் தயார் என்று உத்தரவாதம் கொடுத் தாராம் ராஜாஜி.
நேருவிடம் கோயங்கா தொலைபேசியில் எல்லாவற்றையும் விளக்கிக் கூற, நேருவும் ராஜாஜியுடன் தொலைபேசியில் பேச, ராஜாஜி முதல் அமைச்சர் ஆனார்.
இந்தத் தகவல்களை எல்லாம் கோயங்கா குருமூர்த்தியிடம் கூறியதாக துக்ளக்கில் (18.11.2020) எழுதித் தள்ளியிருக்கிறார் குரு மூர்த்தி அய்யர்வாள்.சட்டசபையில் கம்யூனிஸ்ட்டுகள் என் முதல் எதிரி என்று முதல் அமைச்சரான ராஜாஜி அறிவித்ததையும் துக்ளக்கில் குறிப் பிடப்பட்டுள்ளது. முதலில் இந்தக் யோச னையை கோயங்காவிடம் தெரிவித்ததே ஏ.என்.சிவராமன் தானாம். இதில் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் முக்கியமா னவை எவை?
1952 தேர்தலில் கோயங்கா காங்கிரஸ் சார்பில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி யில் போட்டியிட்டு, திருக்குறளார் வீ.முனு சாமியிடம் பெருந் தோல்வியைச் சந்தித்தார் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.
அரசியலில் - தேர்தலில் நேரடியாக ஈடு படாத சிவராமன்களால் அரசியலில் ஆட் சியை நிறுவுவதில் எப்படிப்பட்ட கபட வேலையை செய்ய முடிகிறது என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஆரிய த்தின் சூழ்ச்சி வலை எத்தகையது என்பது முக்கியம்.
1952 சட்டப் பேரவைத் தேர்தலில் ராஜாஜி போட்டியிட்டாரா? (எந்தத் தேர்தலில் ராஜாஜி மக்கள் வாக்குப் பெற்று வெற்றி பெற்றார்?) அந்த சிரமமான வேலை எல்லாம் வைத்துக் கொள்ள மாட்டார் அவர். யானை வந்து கழுத்தில் மாலை போட்டு ராஜா வாக்கிவிடும் ராஜாஜியை).
1952இல் மேல் சபையில் ஆளுநர் மூலம் நியமிக்கப்பட்டு கொல்லைப்புறம் வழியாக நுழைந்தவர்தான் ராஜாஜி. கொல்லைப்புற வழி நுழைபவர் என்ற சொல்லாடல் இவருக் காகவே உருவான ஒன்றாகும்.
சுதந்திரம் அடைந்து முதலில் நடை பெற்றது 1952 பொதுத் தேர்தல்தான்.
இந்திய சுதந்திரத்துக்குப் பாடுபட்ட கட்சி என்று இந்தியா முழுவதும் அனைத்து மாநி லங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந் தாலும் சென்னை மாநிலத்தில் தோல்வியைச் சந்தித்தது.
காங்கிரஸ் எதிர்ப்புக் கட்சிகள் அய்க்கிய முன்னணி என்ற ஓர் அமைப்பின் கீழ் காங் கிரசை எதிர்க்கும் அணி உருவாக்கப்பட்டது.
தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸ் எதிர்ப்புக் கூட்டணிக்குத் துணை நின்று சென்னை மாநிலம் முழுவதும் சுற்றிச் சுழன்று சூறாவளிப் பிரச்சாரப் பெருமழை பொழிந் தவர்.
கார்ல்மார்க்சை நாங்கள் நேரில் பார்த் ததில்லை - இதோ பெரியாரைப் பார்க்கிறோம் என்றெல்லாம் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலை வர்கள் எல்லாம் புகழாரம் சூட்டினார்கள்.
பல கம்யூனிஸ்டுத் தோழர்கள் தலைமறை வாக இருந்த அந்தக் கால கட்டத்தில் கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் மிகப் பெரிய வெற்றி யைப் பெற்றனர் என்றால் அது சாதாரணமான தல்ல. தந்தை பெரியாருக்கும் திராவிடர் கழகத்திற்கு அதில் மிகப் பெரிய பங்கு உண்டு.
கம்யூனிஸ்டுகளை முதல் எதிரி என்று ஒரு கட்டத்தில் சொன்ன ராஜாஜி கருப்புச் சட் டைகள்தான் என் முதல் எதிரி என்று பிற் காலத்தில் சொன்ன நிலையும்கூட உண்டு.
சிவராமன்களும் கோயங்காக்களும் மூளையைக் கசக்கி பார்ப்பனத்தனத்துடன் பின் திரையில் இயங்கி, இயக்கி, உடல் முழுவதும் மூளை உள்ளதாகத் தம்பட்டம் அடிக்கப்படும் ராஜாஜியைக் கொண்டு வந்து நிறுத்தினாலும், வாய்தா காலம் அவரால் ஆள முடியவில்லையே!
கவர்னர் ஜெனரல் என்னும் உயர்ந்த பதவியை எல்லாம்கூட அனுபவித்தாலும் ஆரியத்தின் அடிப்படைச் சித்தாந்தமான வர்ண தர்மத்தை நிலை நிறுத்துவதில்தானே அவர் குறியாக இருந்திருக்கிறார்.
சூத்திரனுக்கு எதை கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற மனுதர்ம சிந்தனைதானே அவருக்குள் குடியிருந்து வழி நடத்தியிருக்கிறது.
1937இல் சென்னை மாநில பிரதமராக (Premier) வந்த போதும் 2500 பள்ளிகளை இழுத்து மூடினார். 1952இல் முதல் அமைச்சராக அவர் திணிக்கப்பட்டபோதும் 6000 பள்ளி களை இழுத்து மூடிஅரை நேரம் படித்தால் போதும், மீதி அரை நேரம் அப்பன் தொழி லைச் செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கவில்லையா?
அந்த ஆணையே அவருக்குப் படு குழியாக்கப்படவில்லையா? தொழிற்கல்வி என்று எல்லாம் பார்ப்பனப் பத்திரிகைகள் மடிகட்டி, மல்லுக்கட்டிப் பிரச்சாரம் செய் தாலும், இது குலக்கல்வியே! என்ற தந்தை பெரியாரின் ஒற்றை அடியே மரண அடியாகி, ஆச்சாரியாரை ஆட்சியை விட்டே ஓடச் செய்ததே!
அந்தக் கால கட்டத்தில் கோயங்காவும், தினமணி சிவராமன்களும் உயிரோடு தானே இருந்தனர்! ராஜாஜிக்கு முட்டுக் கொடுத்து ஆட்சியைக் காப்பாற்றச் செய்ய முடியவில் லையே ஏன்?
1954இல் ஆட்சியை விட்டு தந்தை பெரியாரால் விரட்டியடிக்கப்பட்ட ராஜாஜி யின் அரசியல் பொது வாழ்வு அத்தோடு அஸ்தமனம் ஆனது ஆனதுதான். அதற்குப் பின் சுதந்திரா கட்சி என்ற ஓர் அரசியல் கட்சியை உண்டாக்கிப் பார்த்தார், 1971இல் தன் பரம எதிரியான காமராசரின் கையைப் பிடித்து கர்ணம் போட்டும் பார்த்தார், விளக் கெண்ணெய்க்குக் கேடாக முடிந்ததே தவிர பிள்ளை பிழைத்த பாடில்லையே!
அன்று சிவராமன்கள் செய்த வேலை யைத்தான் அவரின் சீடர் கோடிகளான குருமூர்த்திகளும் செய்து பார்க்கிறார்கள். நான் அரசியல் புரோக்கர்தான் என்று பச் சையாக ஒப்புக் கொண்டு எழுதினார் மறைந்த சோ.ராமசாமி; இப்பொழுதும் அதே புரோக்கர் வேலையைத் தான் அன்றாடம் செய்து கொண்டு வருகிறார் திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள்.
அன்று கம்யூனிஸ்டு ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக காலில் விழுந்த படலம் எல்லாம் நடந்திருக்கிறது. இப்பொழு தும் குருமூர்த்தி கூட்டம் யார் காலில் விழுந்தாலும் (நடிகர்களாகக் கூட இருக் கலாம்) தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடக் கூடாது என்று சத்ருசம்ஹார யாகம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
இவர்கள் எந்தக் காரணங்களுக்காக திமுக வரக் கூடாது என்று நினைக்கிறார்களோ, அதே காரணங்களுக்காகவே திமுக ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் துடிதுடித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது மட்டும் காலத்தின் கல்வெட்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக