'துக்ளக்' 30.12.2020
தாழ்த்தப்பட்டவர்கள்; பிற்படுத்தப்பட்டவர்கள் ஹிந் துக்களாக இருந்தும் கல்வி, வேலை வாய்ப்பில் அவர்களுக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீட்டை எதிர்ப்பது, தடுப்பது பா.ஜ.க. தானே - பா.ஜ.க. ஆட்சி தானே!
உரிய பயிற்சி பெற்று இவர்கள் அர்ச்சகரானால் ஹிந்துமத ஆகமங்களுக்கு விரோதம் என்று உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடுவோர் யார்? உயர் ஜாதி ஹிந்துப் பார்ப் பனர்கள் தானே - ஜீயர்கள் தானே சங்கராச்சாரியார்கள்தானே! ஹிந்துக்களுக்கான கட்சி என்று மார்தட்டும் அதே ஹிந்துக் களான தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டோருக்கான வளர்ச்சிகளையும், உரிமைகளையும் எதிர்ப்பானேன்? அப்படி என்றால் பெரும்பாலான ஹிந்துக்களுக்கு பா.ஜ.க. எதிரி தானே!
இதனை திராவிடர் கழகத் தலைவர் வீரமணியும், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும் சுட்டிக் காட்டினால், எப்படி திசை திருப்புகிறார்கள் பார்த்தீர்களா? இதற்குப் பெயர்தான் பூணூல் புத்தி என்பது - நரித்தனம் என்பது.
பா.ஜ.க.வையும் பார்ப்பனர்களையும் அவர்களின் ஊட கங்களையும் பெரும்பாலான மக்களான தாழ்த்தப்பட் டோரும் பிற்படுத்தப்பட்டோரும் புரிந்து கொள்வீர்களாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக