சனி, 22 பிப்ரவரி, 2020

வரலாற்றைத் திரித்து சிந்து சமவெளி திராவிட நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என்பதா?

ஆரியத்தின் பொய்யும் புரட்டும் நீடிக்காது - அம்பலமாகும்!

நிதி அமைச்சர் பட்ஜெட் உரையில் வரலாற்றைத் திரித்து சிந்து சமவெளி திராவிட நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என்பதா?

இதைவிட ஒண்ணாம் நம்பர் விஷமம் வேறு உண்டா?

வரலாற்று ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்ட, திராவிடர்களின் சிந்து சமவெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என்று நிதி அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் திரிபுவாதம் செய்திருப்பது - ஒண்ணாம் நம்பர்  விஷமம் என்றும், இத்தகு பொய்யும் புரட்டும் நீடிக்காது - நிலைக்காது - அம்பலமாகும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சிந்து சமவெளி நாகரிகம் என்பது புராதன - பண்டைக் கால பழைமை வாய்ந்த திராவிட(ர்) நாகரிகம் ஆகும். திராவிட மொழிகளில் மூத்த முன்னோடி மொழி தமிழ்மொழி. இதனை அகழ்வாராய்ச்சி மூலம் ஹரப்பா, மொஹஞ்சதாரோ முதலிய பழைய நகரங்களைத் தோண்டி எடுக்கும் ஆராய்ச்சியை, மேற்கொண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்கால தொல் பொருள் ஆய்வு அதிகாரிகளான சர். ஜான் மார்ஷல், ஃபாதர் ஹிராஸ் ஆகிய ஆய்வாளர்களும், அதனைத் தொடர்ந்து பல வரலாற்று ஆராய்ச்சியாளர்களும், அறிஞர்களும் திராவிட நாகரிகம் என்று உறுதிப்படுத்தினர்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், ஆரியர்களும் இதனை மறைத்தும், திரித்தும் தொடர்ந்து எழுதியும், பேசியும் வருகின்றனர்.

இந்தியா முழுவதும் பரந்து

இருந்தவர்கள் திராவிடர்களே!

திராவிடர்கள் இந்தியா முழுவதும் ஒரு காலத்தில் பரந்து இருந்தவர்கள்; தமிழ்மொழி அக்காலத்தில் பேசப்பட்டது; நாகர்கள் தமிழ் மொழி பேசிய திராவிடர்கள் என்ற கருத்துக்களை டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தனது "தீண்டப்படாதவர்கள் யார்? ஏன் அவர்கள் தீண்டப்படாதவர்கள் ஆக்கப்பட்டார்கள்?" என்ற நூலில் எழுதியுள்ளார்கள்.

சிந்து சமவெளி நாகரிகத்தை

அழித்தவர்கள் ஆரியர்களே!

அது ஒருபுறமிருக்க, சிந்துசமவெளி நாகரிகத்தை அழித்தவர்கள் ஆரியர்கள் என்றும், அவர்களது வேதத்தின் பல சுலோகங்கள் இந்தத் தத்துவார்த்த கருத்துக்களையே கொண்டது என்றும் மேல் நாட்டு அறிஞர்கள் முதல் நம் நாட்டு வரலாற்றாளர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

திராவிடப் பண்பாடு - நாகரிகம் காலத்தால் மூத்தது; கருத்தாலும் முதிர்ந்தது என்பதை ஏற்க மனமில்லாத ஆரியக் கூட்டமும், அதன் "அடியார்களும் நுனியார் களும்" இன்று ஒரு கட்டுப்பாடான பொய்ப் பிரச் சாரத்தைக் கட்டவிழ்க்க, அமெ ரிக்காவில்கூட அன்று ஆள் பிடித்தது அம்பலமாகியது!

வாஜ்பேயி பிரதமராக

இருந்தபோது நடந்தது என்ன?

வாஜ்பேயி பிரதமராக இருந்த காலத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரான முரளி மனோகர் ஜோஷி இதில் மும்முரமாக ஈடுபட்டு மொஹஞ்சதாரோ ("திராவிட") காளை மாட்டுச் சின்னத்தை  - முத்திரையை (ஆரிய) குதிரையாக மற்றியது அப்போதே அம்பலமாகியது. (ஆதாரம்: 'Front line' ஆங்கில ஏடு)

அன்று முதலே தங்கள் கைவசம் உள்ள ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, இல்லாத ஆறாகிய (கற்பனை) சரஸ்வதி நாகரிகம் என்று ஒன்றை இட்டுக்கட்டி, அதனைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய சிலரைத் தயாரித்து எழுத வைத்து வந்தார்கள் - வருகிறார்கள்!

பி.பி. லால் என்பவர்மூலம் தொடங்கி வைத்தனர். எஸ்.பி. குப்தா என்பவரைவிட்டு 'சிந்துசமவெளி நாகரிகம்' என்ற பெயரைக்கூட மாற்றி திரிபு செய்து பார்த்தனர். சிந்து - சரஸ்வதி நாகரிகம் என்று மாற்றி திராவிட நாகரிகம் என்பதையே மறைத்து, அழித்து ஒழித்துவிட வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றனர்.

ஆய்வாளர் டோனி ஜோசப் நூல் என்ன கூறுகிறது?

DNA ஆய்வு மூலம் பல அரிய தகவல்கள் வருவதோடு, அக்காலத்திலே புழக்கத்திலிருந்து - மக்கள் பயன்படுத்தியது தமிழ் என்பதை ஆய்வாளர் டோனி ஜோசப் (Tony Joseph) அவர்கள் எழுதிய ஆய்வு நூலில் (The Early Indians)  குறிப்பிட்டுள்ளார்.

The First Urbanites: The Harappans முதல் நகரத்தவர்; ஹரப்பியர்கள் என்ற தலைப்பில் மூன்றாவது அத்தியாயத்தில்,

''How the Largest Civilization of its time, with a unique set of practices and outlook, took wing. And how its creators spread the Dravidian languages and became the ancestors of both North Indians and South Indians'' என்றே தலைப்பிடப்பட்டுள்ளது.

இதன் தமிழாக்கம்:

"அன்றைய காலகட்டத்தில் தலை சிறந்த பண்பட்ட நாகரிகக் குழுக்களாக திராவிடர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களின் வாழ்வியல் முறை சிறந்த நாகரிகத்திற்கான எடுத்துக்காட்டுகளாக திகழ்ந்தது. அவர்கள் தங்களின் நாகரிகத்தோடு தங்களுக்கென்ற தனித்த மொழியை யும் கொண்டு வட இந்தியா மற்றும் தென் இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்து வந்தனர்."

நிதி அமைச்சரின் ஒண்ணாம் நம்பர் விஷமம்!

இதை தலைகீழாக்கிட நேற்று (1.2.2020) நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தனது பட்ஜெட் உரையில், சரஸ்வதி நாகரிகம் என்ற ஆர்.எஸ்.எஸ். கரடியை உள்ளே திணித்து, அதிகாரப் பூர்வமாகப் பதிவு செய்திருப்பது ஒண்ணாம் நம்பர் விஷமம்! திட்டமிட்ட ஆர்.எஸ்.எஸ். கோல்வால்கர் குரலை அங்கே ஒலித்துள்ளது  - வன்மையான கண்டனத்திற்குரியது.

நமது தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கேயே எதிர்ப்புத் தெரிவித்திருப்பது மிகவும் பாராட்டத்தக்க ஒன்றாகும்.

"சந்தடி சாக்கில் கந்தப் பொடி தூவுவது" என்பது போன்ற மோசடி வித்தை இது!

பொய்யும், புரட்டும் அம்பலமாகும்!

வரலாற்றை மாற்றுவது, திரிபுவாதத்திற்கு ஆளாக்குவது, என்பதில் இவர்கள் தலைகுப்புற நின்று (சிரசாசனம்) போட்டாலும் இளைய தலைமுறையையோ, இனிவரும் தலைமுறையையோ  இக்கூட்டம் ஒருபோதும் ஏமாற்ற முடியாது!

பண்பாடு, மொழி இவைகளை அழிப்பதே அவாளின் குறிக்கோள்!

ஒப்பனைகள் வெகுநாள் நீடிக்காது!

உண்மை ஒரு நாள் அல்ல, ஒவ்வொரு நாளும் வெளியாகும்; அதில் இவர்களது பொய்யும் புரட்டும் பலியாகும். - அம்பலமாகும் - இவர்களின் சதித் திட்டம் நீடிக்காது- நிலைக்காது என்பது உறுதி! உறுதி!!

 

கி. வீரமணி,

தலைவர்

திராவிடர் கழகம்

(குறிப்பு: இவர்கள் கூறும் சரஸ்வதி பற்றிய ஆபாசப் புராணக்கதை -& ஆதாரத்துடன் 3ஆம் பக்கம் காண்க)

 

 

திராவிட நாகரிகத்தைத்  திட்டமிட்டு அழித்த சதி

மும்பை பிரின்ஸ் வேல்ஸ் அருங்காட்சியகத்தின் முகப்பில் 1990-களுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகம் குறித்த வரைபடங்கள், அங்கிருந்து எடுத்த புதைப்பொருட்கள் மற்றும் அப்பகுதியின் வரலாறு போன்றவை எழுதி, அதற்கு இந்திய தீபகற்பத்தில் திராவிட நாகரிகம் மிஸீபீவீணீஸீ suதீநீஷீஸீtவீஸீமீஸீt ஷீறீபீமீst பீக்ஷீணீஸ்வீபீவீணீஸீ நீவீஸ்வீறீவீக்ஷ்ணீtவீஷீஸீ என்று தலைப்பிடப்பட்டு இருந்தது. 1995-களுக்கு முன்பு அங்கு சென்ற பலர் இதைப் பார்த்துள்ளனர்.

1995-களில் முதல் முதலாக சிவசேனா-பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது, பம்பாய் (அழகிய வளைகுடாக்களைக் கொண்ட பகுதி) மும்பையாக மாறியது. விக்டோரியா டெர்மினல் ரயில் நிலையம் சத்திரபதி சிவாஜி ரயில் நிலையமாக மாறியது. சாகர்(பெருங்கடல்) விமான நிலையம் சத்திரபதி சிவாஜி விமான நிலையமாக மாறியது. பிரின்ஸ் வேல்ஸ் அருங்காட்சியகமும் சத்திரபதி சிவாஜி அருங்காட்சியகமாக மாறியது. இவ்வளவு மாற்றங்களோடு சேர்த்து, அங்கு இருந்த மிஸீபீவீணீஸீ suதீநீஷீஸீtவீஸீமீஸீt ஷீறீபீமீst பீக்ஷீணீஸ்வீபீவீணீஸீ நீவீஸ்வீறீவீக்ஷ்ணீtவீஷீஸீ என்ற எழுத்துக்களில் பீக்ஷீணீஸ்வீபீவீணீஸீ என்பதை அழித்து uஸீளீஸீஷீஷ்ஸீ என்பதை எழுதிவிட்டார்கள். இப்போது அங்கு uஸீளீஸீஷீஷ்ஸீ நீவீஸ்வீறீவீக்ஷ்ணீtவீஷீஸீ அதாவது பெயர் தெரியாத நாகரிக மனித இனம் வாழ்ந்தது என்று எழுதிவிட்டார்கள்.  கிட்டத்தட்ட உலக அகழ்வாராய்வு அறிஞர்கள் அனைவருமே ஒப்புக்கொண்ட கருத்து ஆரிய இனம் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே திராவிட இனம் செழித்து வளர்ந்திருந்தது என்பதாகும். 2017-ஆம் ஆண்டு முதல் கீழடி ஆய்வுகள் கூட இந்துகுஷ், கைபர் மற்றும் பர்மிய சமவெளிக்கு மேல் இன்றைய பங்களாதேஷ் பகுதிகள் முதல் தென்கோடி நிலப்பகுதி கடலடியில் மூழ்கிய தென் குமரி வரை திராவிட இனம் வாழ்ந்துள்ளதற்கு சான்றாக இருக்கும் போது இவர்கள் அடையாளம்தெரியாத இனப்பிரிவு என்று எழுதிவைத்துள்ளனர். நிதி அமைச்சரின் உரையின் படி நாளை இவை அனைத்தும் சரஸ்வதி நாகரிகம் என்று மாறும் ஆபத்து உள்ளது.

திராவிடத்திலிருந்து தொளவீரா வரை: குஜராத்தில் உள்ள அரப்பா நாகரிகத்தின் அடிச்சுவடாக இன்றும் இருக்கும் இந்த பகுதியும் திராவிட நாகரிகத்தின் தொட்டில் என்று குறிப்பிடும் வார்த்தையில் 'திராவிடா' என்று முன்பு இருந்தது, சிவசேனா மகராட்டிராவில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த அதே கால கட்டத்தில் 1995-ஆம் ஆண்டு பாஜக குஜராத்தில் கேசுபாய் படேல் தலைமையில் ஆட்சியில் அமர்ந்தது. அதன் பிறகு அரப்பா நாகரிகத்தில் இருந்த 'திராவிடா' குறித்த வாசகங்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டு தொளவீரேஷ்வர் என்ற ஒரு கடவுள் இருந்ததாகக் கூறி அந்தப் பகுதிக்கு தொளவீரா என்ற பெயர் வைத்து இன்று அராப்பா நாகரிக மக்கள் வாழ்ந்த பகுதி தொளவீரா என்று அடையாளம் காணப்படுகிறது, 'திராவிடா' என்ற பெயர் இருந்த அனைத்து அடையாளங்களையும் அழித்து விட்டார்கள்.

ஆரிய - பித்தலாட்ட சதி - புரட்டல்களுக்கு அளவும் உண்டோ!

- விடுதலை நாளேடு 2 2 20

மாலன்களின் “புளுகுப் புராணம்!”


- கவிஞர் கலி.பூங்குன்றன்

சன் தொலைக்காட்சி (திமுக) மூலம் வெளி உலக வெளிச்சத்துக்கு வந்து - திமுக தலைவர் கலைஞரால் “உதவிகள்” பெற்று - அதற்குப் பின் பல “அவதாரங்களை எடுத்தவர்” மாலன் என்ற நாராயணன்.

இப்பொழுது அவர் ‘துக்ளக்‘கின் ஆஸ் தான எழுத்தாளர் - பாரதீய ஜனதாவின் அறிவிக்கப்படாத செய்தித் தொடர்பாளர். இந்த வார ‘துக்ளக்‘ இதழில் (26.2.2020) “தலித் விரோத அரசா?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தீட்டியுள்ளார். அதில் ராஜாஜி பற்றி பலபடப் பாராட்டியுள்ளார் - இதில் ஆச்சரி யப்படுவதற்கு ஏதுமில்லை. அது அவாளின் பூணூல் பாசம்.

இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜிக்கே அந்தப் பிறவிக் குணம் போகவில்லை என்கிறபோது நாராயண மாலன்களுக்கும் அந்த உணர்ச்சி ஓங்கி நிற்பதில் ஆச்சரியம் இருக்க முடி யாது.

‘கேரவன்’ ஏட்டில் வெளிவந்த செய்தி தான் அது.

Infact, one occasion Rajaji proudly said that he valued his Brahminhood more than his Chief Ministership (Caravan, April (1) 1978 - Gandhiji’s Crusade against Casteism).

முதல் அமைச்சர் என்கிற பதவியை விட பிராமணனாக இருப்பதில்தான் பெரு மையு றுவதாகப் புளகாங்கிதம் அடைந்தவர் ராஜாஜி.

தாழ்த்தப்பட்டவருக்காக சித்தூர் சென்று வாதாடியதாக ஒரு தகவலை விவரித்து எழுதியுள்ளார் தோழர் மாலன்.

அது எப்படியோ இருக்கட்டும்; தாழ்த் தப்பட்டவர் விடயத்தில் ராஜாஜி எப்படி நடந்து கொண்டு இருக்கிறார் என்பதை அண்ணல் அம்பேத்கர் வாயிலாகவே கேட்டு விடுவோம்.

“நான் அந்தக் காலத்தில் எக்சிகியூட்டிவ் கவுன்சில் மெம்பராக இருந்த போது வெள் ளைக்கார வைசிராயுடன் பேசி விளக்கி, தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து திறமை மிக்க மாணவர்களைப் பொறுக்கி எடுத்து மேல்நாட்டுக்கு அனுப்பி கல்வி பெற வசதியளிக்கும் திட்டத்தை சர்க்கார் செய்ய வேண்டும் என்பதை அவர் ஒப்புக் கொள் ளும்படிச் செய்தேன்.

அதன்படி அப்பொழுது ஆண்டுக்கு மூன்று லட்சம் ரூபாயை ஒதுக்கினார்கள். இது தொடர்ந்து நடந்து வந்தது. நான் அமைச்சர் பதவியிலிருந்து விலகியவுடன் என் நண்பர் ராஜகோபாலாச்சாரியார் இதை ஒழித்துக்கட்டி விட்டார்.”(Report of  Backward Classes Commission, Vol. III page 75, para 2).

இதுதான் மாலன் மகத்துவமாக ராஜாஜி பற்றிக் கூறும் ராஜாஜியின் தலித் மீது கொண்ட ‘தகத்தகாய காதல்’

ராஜாஜியின் பார்ப்பனப் பற்று எத்தகை யது என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட் டையும் கூற முடியும் - அதுவும் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்களின் எழுத்துக் களிலிருந்தே காட்ட முடியும்.

“தமிழ்நாட்டில் சத்தியாக்கிரகப் போருக்கு உரிய களனாக வேதாரண்யம் குறிக்கப்பட்டது. இராஜகோபாலாச்சாரி யார் தண்டுகளுடன் திருச்சியினின்றும் புறப் பட்டார்.

சிதம்பரத்தினின்றும் ஒரு தண்டை நடத்திச் செல்லத் தண்டபாணி பிள்ளை உள்ளிட்ட சிலர் முயன்றனர். அதற்கு என் தலைமை விரும்பப்பட்டது. அவ்விருப்பத் தைக் குலைக்க என் மனம் எழவில்லை. அச்சமயத்தில் இராஜகோபாலாச்சாரியார் பிடிபட்டதும், தொடர்ந்த போருக்கு யான் நியமிக்கப்பட்டிருக்கிறேன் என்று கேள்வி யுற்றேன்.

இராஜகோபாலாச்சாரியார் கடிதம் எழுதவில்லை. வேறு வழியாகவும் தெரி யப்படுத்தவுமில்லை. எனது நியமனம் வெறும் வதந்தி என்று கருதினேன். எதற் கும் சித்தமாயிருக்கலாமென்று எண்ணி னேன்.

திருச்சியினின்றும் புறப்பட்ட படை யையன்றி, வேறு படைகள் யாண்டும் திரளலாகாதென்றும், அதை வேதாரண் யம் நோக்கலாகாதென்றும் ஓர் அறிக்கை இராஜகோபாலாச்சாரியாரிடமிருந்து வெளிவந்தது. ஆச்சாரியாருக்குப் பின்னர் கே.சந்தானம் நியமிக்கப்பட்ட செய்தியும் எட்டியது. சிதம்பர முயற்சி சிதறியது. எழுந்த என் உள்ளமும் விழுந்தது. நிகழ்ந்தது இவ் வளவே!

பத்திரிகை உலகம் திருவிளையாடல் புரியத் தொடங்கியது. சில பத்திரிகைகள் ‘கலியாண சுந்தர முதலியார் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு சித்தமாயிருந்தார், ஏமாற்றப்பட்டார், ஒரு பிராம ணரல்லாதார் தலைமை பூண்டு படை யைத் திரட்டிச் செல்லப் பிராமணன் கண் பார்க் குமோ’ என்று எழுதினர்.”

(திரு.வி.க. எழுதி வைத்த வாழ்க்கைக் குறிப்பு 1, பக்கம் 318-319).

பாவம் - மாலன் ரொம்பதான் ராஜாஜி யைத் தூக்கிச் சுமக்கப் பார்க்கிறார். ஆனால் உண்மையோ ஜன்னலுக்கு வெளியே

வேறு திசையில் பயணிக்கிறது.

******

மாலனின் அறியாமையா? அண்டப் புளுகா?

“இன்னொன்றும் சொல்ல வேண்டும். இந்திரா சஹானி வழக்கின் காரணமாக பட்டியலினத்தவரின் பதவி உயர்வுக்கு ஆபத்து ஏற்பட்டபோது அரசமைப்பு சட்டத்தைத் திருத்தி அவர்களுக்குப் பாதுகாப்பளித்தவர் அன்றைய பிரதமர் வாஜ்பாய். தவிர, நிரப்பப்படாமல் இருந்த காலியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தார்”.

- இதுவும் அதே ‘துக்ளக்‘ இதழில் (26.2.2020, பக்கம் 23) திருவாளர் மாலன் எழுதியுள்ளார்.

இது உண்மையா? இந்திரா சஹானி வழக்கில் அப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது உண்மைதான்.

அந்த நேரத்தில், மத்திய ஆட்சியில் இருந்தவர் பி.வி.நரசிம்மராவ், சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் சீத்தாராம்கேசரி. அவர்தான் முன்னெடுத் தார். அரசமைப்பு சட்டத்திருத்தம் 77இன் படிதான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டுக்கு வழிச்செய்யப்பட்டது.(The constitution (Seventy - Seventh Amendment) Act 1995 - 17th June 1995. Amendment of Article 16 (4A))
“(4A) Nothing in this article shall prevent the State from making any provision for reservation in matters of promotion to any class or classes of posts in the services under the State in favour of the Scheduled Castes and the Scheduled Tribes which, in the opinion of th States are not adequately represented in the services under the State”

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் பி.வி.நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது மத்திய சமூகநலத்துறை அமைச்சர் சீத்தாராம்கேசரி அவர்களின் துறையின் சார்பாக சட்டம் நிறை வேற்றப்பட்டதுதான் உண்மை.

1995இல் ஆட்சியில் இல்லாத வாஜ்பேயி, பிரதமராக இருந்த போதுதான் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதாக எழுதுவது மாலனின் அறியாமையா - அண்டப் புளுகா?
*கலி.பூங்குன்றன்*

புதன், 19 பிப்ரவரி, 2020

சமூகநீதி செயல்பாட்டாளர்களுக்கு ‘பெரியார் விருது' மத்திய அமைச்சரிடம் செந்தில்குமார் எம்.பி. கோரிக்கை

தருமபுரி, பிப்.19 சமூகநீதி செயல்பாடுகளில் ஈடுபடு வோருக்கு மத்திய அரசு ‘பெரியார் விருது' அளிக்க வேண்டும் என்று தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார்  எழுத்துமூலம் கோரிக்கை வைத் துள்ளார்.

அக்கோரிக்கை வருமாறு:

என்னுடைய தருமபுரி நாடாளுமன்ற தொகுதி மிகவும் பின்தங்கிய தொகுதியாக உள்ளது. அந்த நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரூர், கொளத்தூர், பென்னாகரம் சட்டமன்ற தொகுதி களில் தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். அங்கே பிற்படுத்தப்பட்ட, பழங் குடிப் பிரிவு மக்களுக்காக மாணவர் விடுதிகள் தேவைப்படுகின்றன.

அதேபோல, மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் கொடிய வேலையை ஒழித்து, சமூக ரீதியாக அவர்களை மேம்படுத்த எஸ்.ஆர்.எம். எனப்படும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் நபர்களுக்கான சுய உதவித் திட்டம் மற்றும் புனரமைப்பை செய்யவேண்டும், மேலும் அவர்களுக்கு மாற்று வேலை வாய்ப்பையும் வழங்கவேண்டும்.

சமூகநீதி நடவடிக்கைகளில் சிறப்பாக ஈடுபடும் தனி நபர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு சமூகநீதித் தலைவரான தந்தை பெரியாரின் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் விருதை வழங்க ஒரு குழுவை அமைக்கவேண்டும் என  அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தவார் சந்த் கெலட் அவர்களை, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் சந்தித்து இக்கோரிக்கை மனுவை அளித்தார்.

- விடுதலை நாளேடு, 19.2.20

செம்மொழியாம் தமிழ் மொழியைவிட-செத்தொழிந்த சமஸ்கிருதத்துக்கு 22 மடங்கு மக்கள் பணத்தை வாரி இறைப்பதா?

மக்கள் தொகையில் சில ஆயிரம் பேர்களே பேசும் செத்த மொழியான சமஸ்கிருதத்துக்கு செம்மொழி தமி ழைவிட 22 மடங்குத் தொகையை மத்திய அரசு வாரி இறைத்துள்ளதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

பன்மொழி, பல கலாச்சாரம், பல மதங்கள் என்றுள்ள இந்திய நாட்டில், ஒரே மொழி -  சமஸ்கிருதம், ஒரே கலாச்சாரம் - இந்துத்துவா ஆரிய சனாதனக் கலாச் சாரம், ஒரே மதம் - இந்து மதம் என்று அந்நியர் தந்த பெயரால் இயங்கும் ஆரிய சனாதன வருணாசிரம மதமே இந்து மதம்!

இதனை நடைமுறைப்படுத்துவதை நாளும் வேக வேகமாக மத்திய பா.ஜ.க. அரசு, தனக்குக் கிடைத்துள்ள நாடாளு மன்ற மிருக பலத்தைப் பயன்படுத்தி, பல சட்டங்களை வேக வேகமாக - ஜனநாயக விரோதமாக - மக்கள் விரோதமாக செயல் படுத்தி வருகிறது!

செத்த சமஸ்கிருதத்துக்கு பணத்தை வாரி இறைப்பதா?

‘செத்தமொழி'யான - வடமொழியான சமஸ்கிருதம் - உலகில் பேச்சு வழக்கில் எங்கும் இல்லாத புரோகித மொழியாகும் - தமிழ்போல் மூத்த மொழியும்கூட அல்ல.

பிராக்கிருதம், பாலி போன்றவை களுக்குப் பிறகு கூட்டுக் கலவையாக உருவாக்கப்பட்ட மொழி என்பதே - மொழி ஆய்வு வல்லுநர்கள் திட்டவட்டமாகக் கூறுகிறார்கள்.

‘சமஸ்த்+கிருதம்' என்றால், ‘நன்றாக செய்யப்பட்டது' என்ற பொருளைக் கொண்டதேயாகும்.

125 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில், அரசமைப்புச் சட்டத்தால்  அங்கீகரிக்கப்பட்ட (8 ஆவது அட்ட வணை) 22 மொழிகளில் வெகு வெகுக் குறைவான பேர்களே, 14,135 பேர்களே பேசும் மொழிதான் இது!

இதற்கு மற்ற செம்மொழிகளைவிட தமிழ் செம்மொழியைவிட, மற்ற செம் மொழிகளாக அறிவிக்கப்பட்ட தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா மொழி களைவிட, ஓரவஞ்சனைபோல, மக்கள் வரிப் பணத்தை எடுத்து, சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கே செலவிடும் அநீதி! அதுவும் 22 மடங்கா?

புள்ளிவிவரங்கள் நாடாளுமன்றத்தில் தரப்பட்டவை!

சமஸ்கிருதத்துக்கு செம்மொழி தகுதி கிடைத்தது எப்படி?

உலகின் பற்பல நாடுகளிலும் செம் மொழி தமிழ் சுமார் 10 கோடி மக்கள் பேசும், எழுதப்படும் உயர்தனி செம் மொழி.

சமஸ்கிருதத்திற்கு - செம்மொழித் தகுதி இந்திய அரசுமூலம் கிடைத்தது எப்படி? யாரால் கிடைத்தது? முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றதையொட்டியே சமஸ் கிருதத்திற்கும் வாய்ப்பு கிடைத்தது என்பதுதான் உண்மை.

என்றாலும், இது ‘‘தேவ பாஷையாம்'' - ‘‘தமிழ் நீஷபாஷையாம்!''

கடவுளுக்கு உகந்த மொழி  - ஆர்.எஸ்.எஸ். தாங்கிப் பிடிக்கும் மொழி - ஆரிய மொழியான சமஸ்கிருதமாம்!

அதற்கு இப்படி அரசு பணம் - மக்கள் வரிப் பணம் தாரை வார்க்கப்படுவதா?

தமிழைவிட ஒரு மடங்கு, இரு மடங்கு அல்ல 22 மடங்கு கூடுதலாகவா?

கடந்த பல ஆண்டுகளாக செம்மொழி தமிழை அழிப்பதுதான் முதல் வேலையா?

வாய்ப்பொத்தி கிடப்பதா தமிழ்நாடு அரசு?

தமிழ்நாடு அரசும் வாய்ப் பொத்தி, கைகட்டி வேடிக்கைப் பார்க்கலாமா? என்னே கொடுமை! முதலமைச்சர்தானே செம்மொழி நிறுவனத்தின் தலைவர்!

பா.ஜ.க.வின் பிரதமர் மோடி, தமிழ் ஒப்பனை, தமிழ்பற்றி சில நேரங்களில்  குரல் கொடுத்து தமிழ்நாட்டு வாக்காளர் களை ஏமாற்ற நினைக்கிறார். முகமூடிகளை அவர்களே கழற்றிக் காட்டுகிறார்கள்  இதன்மூலம்.

காவிகளின் தமிழ் வேடம் கலைகிறது!

புரிந்துகொள்ளுங்கள், புத்தியுள்ள மக்களே!

 

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

19.2.2020


செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

செம்மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியாவை விட சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு 22 மடங்கு கூடுதல் நிதி

*https://www.hindutamil.in/news/india/540102-extra-fund-for-sanskrit.html*

*"செம்மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியாவை விட சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு 22 மடங்கு கூடுதல் நிதி"*

*- ஆர். ஷபிமுன்னா -*

புதுடெல்லி, பிப். 18 -
செம்மொழி பட்டியலில் உள்ள தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியாவைவிட, சுமார் 22 மடங்கு கூடுதலாக சம்ஸ்கிருத மொழிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது.
மத்திய அரசின் செம்மொழி பட்டியலில் சம்ஸ்கிருதத்தை அடுத்து, கடந்த 2004-ம் ஆண்டு தமிழ்மொழியும் இடம்பெற்றது. இதைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா மொழிகளும் அப்பட்டியலில் இடம் பெற்றன. இவற்றில் சம்ஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழிகளின் ஆய்வுக்கு மட்டுமே மத்திய நிறுவனம் தொடங்கப்பட்டது. மற்ற 4-ல் மலையாளம் மற்றும் ஒடியாவுக்கு என தனியாக நிதி ஒதுக்கப்படவில்லை. அத்துடன் அம்மொழிகளுக்காக மத்திய அரசின் ஆய்வு மையங்கள் கூட இன்னும் தனியாக தொடங்கப்படவில்லை. மாறாக மைசூரில் உள்ள இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனத்திலேயே அவை செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தெலுங்கு மற்றும் கன்னடத்துக்கு அதன் துறைகள் உயர் ஆய்வு மையங்களாக மாற்றப்பட்டன. பிறகு தெலுங்கு உயர் ஆய்வு மையம் மட்டும் ஆந்திராவின் நெல்லூருக்கு மாற்றப்பட்டது.

இந்தச் சூழலில், நாடாளுமன்றத்தின் சமீபத்திய கூட்டத்தொடரின்போது, சம்ஸ்கிருத வளர்ச்சி குறித்து பாஜக மற்றும் சிவசேனா உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டிருந்தது. அதில் சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக டெல்லியில் தேசிய சம்ஸ்கிருத மையம் நிறுவப்பட்டுள்ளதாகவும், இதற்கு கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ.643.84 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2019-20-ல் ரூ.231.15 கோடி, 2018-19-ல் ரூ.214.38 கோடி, 2017-18-ல் ரூ.198.31 கோடி தொகை ஒதுக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு கடந்த 3 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதி வெகுவாகக் குறைந்து வருகிறது. இதன்படி, 2017-18-ல் ரூ.10.59 கோடி, 2018-19-ல் ரூ.4.65 கோடி, 2019-20-ல் ரூ.7.7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற தமிழாய்வு நிறுவனத்தின் நிர்வாகக் குழு தலைவராக தமிழக முதல்வர் இருந்தும் அதனால் வளர்ச்சி பெற முடியவில்லை. இதன் பொறுப்பு இயக்குநர்களாக நியமிக்கப் படுபவர்களும், தமிழறிஞர்களாக இல்லை என்பதால் அந்த நிறுவனத்துக்கு கிடைக்க வேண்டிய நிதி மற்றும் கட்டுமான வளர்ச்சி தடைபட்டு வருகின்றன.
சர்வதேச நாடுகளுடன் தமிழுக்கான ஒருங்கிணைப்பு கிடைக்காததுடன் ஆய்வுகளும் முறையாக நடைபெறாமல் உள்ளன. தொடக்கத்தில் மூத்த ஆய்வறிஞர்கள் 10 பேர் இருந்தனர். தற்போது ஒருவர்கூட இல்லை. புதிதாக அமர்த்தப்பட வேண்டிய சுமார் 150 பணியிடங்களும் காலியாகவே உள்ளன. இதுபோன்ற செயல்களால் 13 ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் இழப்பையும் மீட்டெடுப்பது மிகவும் கடினம் எனக் கருதப்படுகிறது.

*நன்றி : "இந்து தமிழ் திசை" நாளேடு 18-02-2020*

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் பெறப்பட்ட கையொப்பமிட்ட படிவங்களை மேதகு குடியரசுத் தலைவருக்கு விமானம் மூலம் அனைத்துக் கட்சித் தலைவர்கள் அனுப்பி வைத்தார்கள்

சென்னை, பிப்.16 தி.மு.கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், "குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவும், என்.ஆர்.சிக்கு வழிகோலும் என்.பி.ஆர் தயாரிப்பதை நிறுத்தக் கோரியும், அனைவரது எதிர்வினைச் சிந்தனைகளையும் ஒருமுகப்படுத்தி, மாபெரும் மக்கள் இயக்கம் ஒன்றை முன்னெடுக்கும் வகையில், 2020 பிப்ரவரி 2ஆம் தேதி (ஞாயிறுக்கிழமை) முதல் பிப்ரவரி 8ஆம் தேதி (சனிக்கிழமை) வரை 'கையெழுத்து இயக்கம்' நடத்திடுவது என்றும்; அப்படிப் பெறப்பட்ட கையெழுத்துப் படிவங்களை, அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள கட்சிகளின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் - மேதகு குடியரசுத் தலைவர் அவர்களைச் சந்தித்து அளித்து, தமிழக மக்களின் ஏகோபித்த எண்ணத்தின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவது" என்று 24.1.2020 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
மக்கள் இயக்கமான "கையெழுத்து இயக்கத்திற்கு" அனைத்துத் தரப்பு மக்களும், தங்கள் பேராதரவினை வழங்கிட வேண்டுமென அனைத்துக் கட்சிகளின் கூட்டம் வேண்டுகோளும் விடுத்தது.
அதனடிப்படையில், தி.மு.கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும், அனைத்துக் கட்சி நிர்வாகிகள் - தோழர்கள், மாநிலம் முழுவதும், மக்கள் கூடும் இடங்களிலும் - வணிக நிறுவனங்களிலும் - கல்வி நிலையங்களிலும் - வீடுவீடாகவும் சென்று, அனைத்துத் தரப்பு மக்களிடமும் 2020 பிப்ரவரி 2ஆம் தேதி முதல் பிப்ரவரி 8ஆம் தேதி வரை கையெழுத்து பெற்ற 2 கோடியே 5 லட்சத்து 66 ஆயிரத்து 82 கையெழுத்திட்ட படிவங்களை; இன்று (16-2-2020), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் சிலை அருகில், திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய அனைத்துக் கட்சித் தலைவர்கள் மேதகு குடியரசுத் தலைவருக்கு விமானம் மூலம் அனுப்பி வைத்தார்கள்.
மாபெரும் மக்கள் இயக்கத்தின் மூலம் பெறப்பட்ட இந்த கையெழுத்துக்கள் தமிழக மக்கள் மத்தியில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கும் (சி.ஏ.ஏ.) - தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) - தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) ஆகியவற்றுக்கு எதிராக உள்ள உணர்வினை வெளிப்படுத்தியுள்ளது.


ஆகவே தமிழக மக்களின் உணர்வு களுக்கு மதிப்பளித்து - இப்போதாவது மத்திய பா.ஜ.க. அரசு குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற்றும் - என்.ஆர்.சி. மற்றும் என்.பி.ஆர். தயாரிக்கும் பணிகளை நிறுத்தி வைக்கும் நடவடிக்கைகளை, மேதகு குடியரசுத் தலைவர் அவர்கள் ஜனநாயகத்தையும் - அரசியல் சட்டத்தையும் பாதுகாத்திடும் வகையில் மத்திய அரசுக்கு பரிந்துரைத்து, அறிவுரையை வழங்கிடுவார் என்று தமிழகமே ஆவலுடனும், நம்பிக்கையுடனும் காத்திருக்கிறது.
- விடுதலை நாளேடு,16.2.20

மத்திய பா.ஜ.க. அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அரசமைப்புச் சட்ட அடிக்கட்டுமானத்தையே சிதைப்பதாக இருக்கிறது!

இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் காவல்துறை நடத்திய தடியடி விரும்பத்தகாதது; கண்டிக்கத்தக்கது!
மத்திய பா.ஜ.க. அரசு, ஆர்.எஸ்.எஸ். கொள்கைப்படி கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம், அரசமைப்புச் சட்ட அடிக்கட்டுமானத்தையே சிதைப்பதாக இருக்கிறது; இதை எதிர்த்துப் போராடுவது மக்களின் ஜனநாயக உரிமை என நீதிமன்றங்கள் தெளிவுபடுத்தியுள்ள நிலையில் சென்னை - வண்ணையில் இஸ்லாமிய அமைப்புகள் அமைதியாக நடத்திய போராட்டத்தில் சென்னை காவல்துறையினரின் தடியடிப் பிரயோகம் விரும்பத்தகாதது; கண்டிக்கத்தக்கது என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மத்தியில் உள்ள நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, தனக்குக் கிடைத்துள்ள நாடாளுமன்ற மிருக பலத்தை வைத்து, அதன் அரசியல் ஆணையரான ஆர்.எஸ்.எஸ். கொள்கைப்படி சில சட்டங்களை - முஸ்லீம்களைக் குறி வைத்தே கொண்டு வந்து நிறைவேற்றி இருப்பதால், நாடு தழுவிய மக்கள் கிளர்ச்சி  வெடித்துக் கிளம்பி நடந்து வருகிறது.
சட்டம் - ஒழுங்கைக் காக்க வேண்டிய மத்திய அரசு கொண்டு வந்துள்ள, நமது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணான இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் பாதிக்கப்படும் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பு மக்களுமே இதனைக் கடுமையாக எதிர்த்து அற வழியில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
எந்த ஒரு சட்டமும் - குடியுரிமைத் திருத்தச் சட்டம் போல - இவ்வளவு கடுமையான எதிர்ப்பை இதுவரை சந்திக்கவே இல்லை.
நாட்டின் பொது மனிதர்கள், அறிவுலக மேதை களும்கூட இச்சட்டத்தை எதிர்த்து அறிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
கறுப்புச் சட்டங்களால் செயல்படுத்துவது வன்மையான கண்டனத்திற்குரியது
ஒரே வரியில் அத்தனைப் பேரும் தேசத்துரோகிகள் என்றோ மற்றபடி பாகிஸ்தானின் ஆதரவாளர்கள் என்றோ கூறுவது உண்மைக்குப் புறம்பானதாகும்.
இந்திய அரசமைப்புச் சட்டம் என்பதில் உள்ள முக்கியமான அடிக்கட்டுமானங்களான மதச் சார்பின்மை, கூட்டாட்சி, சமூகநீதி இவை களுக்கெல்லாம் முரணாக - இவைகளனைத்தையும் ஓரங்கட்டும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள் கையை இப்படிப்பட்ட கறுப்புச் சட்டங்களால் மத்திய அரசு கொண்டு வந்து செயல்படுத்துவது என்பது வன்மையான மக்களின் கண்டனத்திற்குரியதாகும்.
அறவழியில் போராடுவது ஜனநாயகத்தில் அனு மதிக்கப்பட்ட அரசமைப்புச் சட்டமுறையே ஆகும்.
அற வழிப் போராட்டத்தைத் தடுக்க முடியாது
அதன் அடிப்படையிலேயேதான் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் டில்லி பகுதியில் தொடர் போராட்டம் நடத்துவதை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் போட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் "அற வழிப் போராட்டத்தைத் தடுக்க முடியாது. போராடுவதற்கு அவர்களுக்குத் தனி இடம் ஒதுக்கித் தாருங்கள்" என்றுதான் கூறியுள்ளது.
அதுபோலவே மும்பை உயர்நீதிமன்றமும்கூட போராடுவது அவர்களது ஜனநாயக உரிமை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றம் இது சம்பந்தமாக விசாரணைக்கு வந்த வழக்கை அதன் முக்கியத்துவத்தைக் கருதி, உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, இடைக்காலத்தடை ஒன்றை வழங்கி யிருந்தால், இத்தனை போராட்டங்களும்கூட தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்பது பல நீதிபதிகள், அறிவுச் சான்றோர்கள் கருத்தும்கூட!
ஏற்க இயலாது என பல மாநிலங்கள் தீர்மானம்
பல மாநில சட்டமன்றங்களில், "இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம், அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தையே சிதைப்பதாக இருக்கிறது; மதச் சார்பின்மை, மற்ற அடிப்படை உரிமைகள் பகுதிச் சட்டப் பிரிவுகளைப் பொருட்படுத்தாது புறந்தள்ளியதாக உள்ளது என்ற காரணத்தால், ஏற்க இயலாது" என்று  தீர்மானமாகவே இயற்றி உள்ளன. ராஜஸ்தான், மேற்கு வங்கம், கேரளம், புதுச்சேரி, பஞ்சாப், மத்தியப் பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் முதல்முறையாக இந்திய அரசியல் வரலாற்றில் கூட்டாட்சித் தத்துவத்தினை வலியுறுத்தும் முயற்சியின் முகிழ்ப்பாகவே இது காட்டப்பட்டுள்ளது!
எங்கெங்கு காணினும் மக்களின் கிளர்ச்சி!
ஆயிரக்கணக்கான மக்கள்மீது
வழக்குப் பதிவு செய்யும் விசித்திரம்
இந்நிலையில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன் றங்களே கூடப் போராடும் மக்களுக்கு உரிமை உண்டு - ஜனநாயக அமைப்பில் என்று கூறும் நிலையில்,
தமிழ்நாட்டில் அத்தனை ஆயிரக்கணக்கான மக்கள்மீது வழக்குப் பதிவு செய்யும் விசித்திரம் ஒருபுறம்; மறுபுறம் தாங்கள் அங்கே குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக ஓட்டளித்து விட்டு, இங்கே இஸ்லாமிய சிறுபான்மையினர் நலத்தைப் பாதுகாப்போம் என்ற இரட்டை வேடம் ஏனோ?
நேற்றுமுன்தினம் (14.2.2020) அமைதியாக  சென்னை - வண்ணையில் நடைபெற்ற இஸ்லாமியர் போராட்டத்தில் சென்னைக் காவல்துறையினர்  - சில அதிகாரிகள் தடியடிப் பிரயோகம் செய்தது விரும்பத்தகாதது; கண்டிக்கத்தக்கது!
பெரும் கூட்டம் கூடும் போது ஊர்வலம் செல்வோர்மீது வழக்குப் பதிவு செய்வதைத் தாண்டி இப்படி வன்முறையை ஏவியுள்ளதற்கு யார் மூலகாரணம்? தாக்கீது எங்கிருந்து?
கருத்துரிமை, பேச்சுரிமையைக்கூட
பறிக்கும் ஒரு சார்பு நிலை
அண்மைக்காலத்தில் தமிழகக் காவல்துறை பா.ஜ.க. ஆட்சி தமிழகத்தில் நடைபெறுவது போலவே கற்பனை செய்து கொண்டு (அவர்களில் உள்ள கடைசி ஆட்களில் பலர் - அதில் முன்னாள் குற்றவாளிகளும்கூட) குடி மக்களின் நலன் கருதி ஜனநாயக உரிமைக் குரல் எழுப்புவோரைக் கண்டு பாயும் நிலை - மற்ற கட்சிகளின் கருத்துரிமை, பேச்சுரிமையைக்கூட பறிக்கும் ஒரு சார்பு நிலை வெளிப்படையாகவே உள்ளது. நீதிமன்றங்களை நாடியே சாதாரண பொதுக் கூட்டங்களைக்கூட நடத் துவதற்கு அனுமதி பெறும் அவலம் தொடர்கிறது.
இந்நிலையில் வண்ணையில்  நடத்திய வன்முறைகளுக்கு காவல்துறை - ஆளும் அரசின் சார்பில் மனிதநேயத்தோடு வருத்தம் தெரிவிக்க வேண்டும். தவறு செய்த அதிகாரிகள்மீது உரிய நடவடிக்கை எடுத்தால் இக்கிளர்ச்சித் தீயை அணைக்க வாய்ப்பாகும். இல்லையேல் மேலும் அக்கிளர்ச்சி தீவிரமாகப் பரவவே வாய்ப்பு ஏற்படும்.
தமிழக அரசு இப்படியா தேவையற்ற "ராஜாவை மிஞ்சும் ராஜ விசுவாசத்தை" காட்ட வேண்டும்? இதன் பலன் தேர்தலில் பிரதிபலிக்கும் என்பதையும் கவனத்தில் வைத்து செயல்படுவது நல்லது!

கி. வீரமணி,
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
16.2.2020