வெள்ளி, 17 பிப்ரவரி, 2023

சிங்கப்பெருமாள் கோயில், பல்லாவரம் பகுதிகளில் தமிழர் தலைவர் எழுச்சியுரை!

வியாழன், 16 பிப்ரவரி, 2023

மக்களை படிக்காதேன்னு சொல்றதுக்கு ஒரு கட்சியா? ஒரு மதமா? யார் அந்நியன்? - வெள்ளைக்காரனா? பார்ப்பானா? புழல், அம்பத்தூர் பகுதிகளில் தமிழர் தலைவர் எழுச்சியுரை!

தமிழர் தலைவர் திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளில் பரப்புரை!

பி.பி.சி. வெளியிட்ட ஆவணம் தவறு என்றால் அதனை எதிர்த்து விளக்கம் அளிக்கலாம் - வழக்குப் போடலாம்!

திங்கள், 23 ஜனவரி, 2023

பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை - தமிழர் தலைவர் வாழ்த்து


ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில்  திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரசு கட்சி வேட்பாளராக ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அகில இந்திய காங்கிரசு கட்சியின் தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளார்.  இன்று (23.1.2023) சென்னை பெரியார் திடலுக்கு ஈ.வெ.கி.ச.இளங்கோவன் வருகை தந்து, தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு ஈ.வெ.கி.ச.இளங்கோவன் பயனாடை அணிவித்தார். அவருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து இயக்க வெளியீடுகளை வழங்கி, இடைத்தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மு.கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, காங்கிரசு கட்சி செய்தித் தொடர்பாளர் கோபண்ணா, நாசே இராமச்சந்திரன், இதயதுல்லா, சட்டமன்ற காங்கிரசு கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை.


வியாழன், 19 ஜனவரி, 2023

பிராமணர்' சங்க மாநாட்டில் பாண்டே ஜாதித் திமிர் பேச்சு?

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் பெயரில் சாலை பெயர் மாற்றம் தினமணிக்கு தெரியாதா?

 

 தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகத்துறை கடந்த மே மாதத்தில் வேனல்ஸ் சாலையை அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் சாலை எனப் பெயர் மாற்றி அரசாணை வெளியிட்டது. தினமணி (9.9.2022) ஏடோ இன்னமும் பழைய பெயரையே வெளியிடுவது ஏன்? சாலை பெயர் மாற்றம் தினமணிக்கு தெரியாதா?

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமிழ்நாடு அரசிடம், "பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டு காலம் பாதுகாத்து அவரது இயக்கமாம் திராவிடர் இயக்கத்தை மேலும் அய்ந்தாண்டு காலம் காத்தவரும், ஏராளமான ஆதரவற்ற குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லம் அமைத்தும், மேலும் 60 ஆண்டுகளாக திருச்சியில் கல்வி நிறுவனங்களை நடத்தி வந்தவருமான அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களது நூற்றாண்டை அரசு சார்பில் நடத்திடும் வாய்ப்பை இதற்கு முன் பெறவில்லை.

இந்த நிலையில், பெரியார் ஈ.வெ.ரா. சாலை அருகில் உள்ள வேனல்ஸ் சாலையில் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களின் முழு உருவச் சிலை தமிழ்நாடு அரசின் உரிய அனுமதியோடு மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களால் 1994 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

அந்த சிலை அமைந்து இருக்கும் எழும்பூர் ரயில் நிலையத்துக்கு பின் பகுதியிலிருந்து செல்லும் வேனல்ஸ் சாலையின் பெயரை அன்னை 

ஈ.வெ.ரா. மணியம்மையார் சாலை என்று பெயர் மாற்றம் செய்வது அவரது நூற்றாண்டு காலக்கட்டத்தில் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மை யாரை பெருமைப்படுத்தியதாகவும், மகளிர் மாண்பை உயர்த்தியதாகவும் இருக்கும்." எனக் கோரி இருந்தார்.

இதனை ஏற்று சென்னை மாநக ராட்சி மண்டலம் 5-க்கு உள்பட்ட சென்னை வேனல்ஸ் சாலையை அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் சாலை என பெயர் மாற்றம் செய்ய நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆணை வெளியிட்டு இருக்கிறது.

அன்னை மணியம்மையார் சிலை அருகிலிருந்து எழும்பூர் ரயில் நிலையத்தையொட்டி ஆல்பர்ட் திரையரங்கம் வரை உள்ள வேனல்ஸ் சாலை அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பெயர்ப்பலகை அரசு சார்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே தினமணி (9.9.2022) ஏட்டில் அன்னை 

ஈ.வெ.ரா.மணியம்மையார் சாலை என்று வெளியிடுவதற்கு பதிலாக பழைய பெயரையே வெளியிட்டிருப்பது ஏன்?