சனி, 3 டிசம்பர், 2022

தமிழர் தலைவர் ஆசிரியருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி பிறந்த நாள் வாழ்த்து!


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (2.12.2022) தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 90 ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, அவருடைய வாழ்விணையர் மோகனா அம்மையாருக்கும் பொன்னாடை அணிவித்தார். நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ வேலு, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன், முரசொலி செல்வம் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியருக்குப் பொன்னாடை போர்த்தி பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். உடன்  திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் (சென்னை, 2.12.2022).

-------++++---++-+---++ 

தாய்க் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா நீடு வாழ்க!

தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி!


நேரில் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார் (சென்னை, 2.12.2022)

சென்னை, டிச.2- திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க.தலைவர் முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் "தாய்க் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா நீடு வாழ்க!" என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:-

'திராவிட இயக்கத்தின் திருஞான சம்பந்தர் என்ற பேரறிஞர் அண்ணாவின் புகழுரைக்கேற்ப, 10 வயது முதல் தந்தை பெரியாரின் இலட்சியத்தை முழங்கத் தொடங்கி, தொண்டறத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு, இளை யோருக்கு நிகராக சமூகநீதிப் போர்க்களத்தில் சளைக்காமல் போராடி, பகுத்தறிவு இனமான உணர்வினை ஊட்டி வரும் தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் தலைவர் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களுக்கு அகவை 90 என்பதில் அகம் மிக மகிழ்கிறேன். ‘திராவிட மாடல்' அரசின் சமூகநீதிக் கொள்கை சார்ந்த அனைத்துத் திட்டங்களுக்கும், சட்டப் போராட்டங்களுக்கும் உறுதுணையாய் வழிகாட்டியாய்த் திகழும் ஆசிரியர் அய்யா அவர்கள் நூறாண்டு கடந்தும் நலமோடு வாழ்ந்திட நெஞ்சார வாழ்த்துகிறேன்.

-இவ்வாறு திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 90ஆம் ஆண்டு பிறந்த நாள் தலைவர்கள் வாழ்த்து (சென்னை கலைவாணர் அரங்கம் - 2.12.2022)


தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 90ஆம் ஆண்டு பிறந்த நாளன்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் 'திராவிட இயக்கப் போர்வாள்' மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் 'எழுச்சித் தமிழர்' தொல். திருமாவளவன் எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன்,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகத் தொடர்பு செயலாளர் கோபண்ணா, இந்திய கம்யூனிஸ்ட்   (மார்க்சிஸ்ட்) கட்சி மாநிலச் செயலாளர் 

கே. பாலகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர்  ஆர். பிரியா, ஆகியோர் திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர் கி. வீரமணி  அவர்களுக்கு பொன்னாடை  அணிவித்தும் புத்தகங்கள் வழங்கியும்  வாழ்த்துகளை  தெரிவித்தனர்.

தமிழ்நாட்டின் மூத்த தலைவர் ஆசிரியர் அய்யா வீரமணி மேலும் நீண்ட காலம் வாழ்ந்து எங்களுக்கும், நாட்டுக்கும் வழிகாட்ட வேண்டும். பல்வேறு கட்சித் தலைவர்களின் வாழ்த்தும் பாராட்டும்!

வியாழன், 1 டிசம்பர், 2022

தமிழர் தலைவர் ஆசிரியரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் செய்தி!

சனி, 26 நவம்பர், 2022

அன்றே சொன்னார் பெரியார்' என்ற புத்தகத்தை தமிழர் தலைவர் வெளியிட்டார்

கோத்ரா ரயில் எரிப்பு - நடந்த பின்னணி என்ன?

வியாழன், 13 அக்டோபர், 2022

சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போரில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் காவிகளுக்கு எச்சரிக்கை!

 

தமிழ்நாடு பெரியார் மண் - மார்க்ஸ் - அம்பேத்கர் - காமராசர் - அறிஞர் அண்ணா மண்!

இந்த மண்ணைக் காவிமயமாக்க முடியாது! முடியாது!!

இது ஓர் ஒத்திகை, முன்னோக்கு - முடிவல்ல!

சென்னை,எக்.12  தமிழ் மண்ணில் காவிகள் காலூன்ற லாம் என்ற கனவு காணவேண்டாம்; இது பெரியார், மார்க்ஸ், அம்பேத்கர், காமராசர் மண்  என்று எச்சரித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

மனித சங்கிலி அறப்போராட்டம்

நேற்று (11.10.2022) மாலை சென்னை அண்ணா சாலை  சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகே தொடங்கி தேசிய முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டத்தின் முடிவில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அவரது  பேட்டி வருமாறு:

தமிழ்நாடு பெரியார் மண்!

அன்பார்ந்த அருமை அனைத்துத் தேசிய முற் போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களே, மனித சங்கிலியை மிகப்பெரிய வெற்றியாக ஆக்கிய அருமை அனைத்துக் கட்சி முற்போக்குச் சக்திகளே, நண்பர்களே, ஊடகவியலாளர்களே!

தமிழ்நாடு பெரியார் மண்  -

தமிழ்நாடு மார்க்சிய மண் -

தமிழ்நாடு அம்பேத்கர் மண் -

தமிழ்நாடு காமராசர் மண் -

தமிழ்நாடு அறிஞர் அண்ணா மண்-

தமிழ் மண்ணை ஒருபோதும் காவிமயமாக்க முடியாது என்பதற்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இந்த நாட்டில் மதவாதத்திற்கு இடம் தராத மண் தமிழ்நாடு என்பதற்கு இங்கே வாலாட்டக் கூடிய, பாசிச ஆர்.எஸ்.எஸ். மதவாத கும்பலுக்கு இன்றைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த எச்சரிக்கை தமிழ் மண்ணை ஒருபோதும் அவர்கள் காவிமயமாக்க முடியாது என்பதற்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கை!

குறுகிய காலத்தில், அத்துணைத் தலைவர்களுடைய அழைப்பை ஏற்று, இன்றைக்குத் தமிழ்நாடு முழுக்கத் திரண்டிருக்கின்ற அத்துணைப் பேருக்கும் இந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது மட்டுமல்ல - இதுதான் ஒரு பாதுகாப்பு அரண். இதுவேதான் நச்சுக் கிருமிகள் இங்கே உள்ளே நுழைந்து, தங்களுடைய மதவாதத்தை, மதவெறியைக் கிளப்பாமல் தடுத்து,  மனிதநேயத்தைக் காப்பாற்றி, அமளிக்காடாக்க நினைக்கக்கூடிய அந்த முயற்சியைத் தோல்வியுறச் செய்து, முறியடிக்கக் கூடிய மகத்தான முதல் கட்டம் இது.

இது தொடக்கம் - இது முடிவல்ல!

இந்தப் படை எப்போதும் திரளும்! திரளும்!! 

என்று எச்சரிக்கை செய்கிறோம்!

இப்படிப்பட்ட மனித சங்கிலிகள் ஒவ்வொரு நகரத் திலும், ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு கிராமத்திலும், அனைவராலும் எப்படி ஒரு தீயணைப்புப் படை வேலை செய்கிறதோ, உயிருக்குப் பயப்படாமல், எப்படி உள்ளே நுழைய முடியாத இடத்திலும் நுழைகிறதோ - அதுபோல, இந்தப் படை, இன்றைக்குத் திரண் டிருக்கின்ற படை எப்போதும் திரளும்! திரளும்!! என்று எச்சரிக்கை செய்கிறோம்!

ஒத்துழைத்த அத்துணைப் பேருக்கும் நன்றி!

தலைவர்களுக்கும் நன்றி!

மக்களுக்கு நன்றி!

ஊடகவியலாளர்களுக்கும் நன்றி!

இனி வரப்போகின்றவர்களுக்கு இது ஓர் எடுத்துக் காட்டு!

வால் அறுப்போம்! வால் அறுப்போம்!!

இது ஒரு முன்னோக்கு!

இது ஓர் ஒத்திகை!

இதுவே முடிவல்ல - தொடரட்டும்!

வால் அறுப்போம்! வால் அறுப்போம்!

மதவாத, மதவெறிக் காவிகளின்

வால் அறுப்போம் என்பதைக் கூறி முடிக்கின்றேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர் களிடம் கூறினார்.