வியாழன், 15 செப்டம்பர், 2022

அண்ணாவின் மூன்று முத்தான சாதனைகள்: அண்ணா வெறும் படமல்ல - வழிகாட்டும் பாடம்! -செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர்

• Viduthalai

பெரியாரின் திராவிட மண்ணில் காவிகள் வாலாட்டினால் ஒட்ட நறுக்கப்படும்!

செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர்

சென்னை, செப்.15 பெரியார், அண்ணா, கலைஞர் பிறந்து வழிகாட்டிய மண்ணில் காவிகள் படையெடுக் கலாம், வாலாட் டலாம் என்று நினைத்தால், அந்த வால் ஒட்ட நறுக்கப்படும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 

அண்ணாவின் 114 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2022) அண்ணா சாலையில் அமைந்துள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவித்த  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

அண்ணாவின் முப்பெரும் சாதனைகளுடைய விளக்கம் - விரிவாக்கம் இப்பொழுது அதிகமாகத் தேவைப் படுகிறது

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களுடைய 114ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவான இன்று - முன்பு எப் பொழுதும் தேவைபட்டதைவிட, அண்ணா அவர்களின் முப்பெரும் சாதனைகளுடைய விளக்கம், விரிவாக்கம் இப்பொழுது அதிகமாகத் தேவைப்படுகின்ற காலகட்டம்.

அண்ணா அவர்கள் ‘திராவிட மாடல்' ஆட்சிக்கு அடித்தளம் வகுத்தார்கள். நீதிக்கட்சி ஆட்சியினுடைய தொடர்ச்சி தன்னுடைய ஆட்சி என்று அடக்கத்தோடும், உரிமையோடும் எடுத்துச் சொல்லி, அதனைத் தொடர்ந்தார்கள்.

அண்ணா அவர்களுடைய ஆட்சியினுடைய முப் பெரும் சாதனைகள் அதனுடைய விளைவுகள் - அதனுடைய தாக்கங்கள் இன்றைக்கும் தேவைப் படுகின்றன.

உதாரணத்திற்கு, தாய்த்திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார்கள்.

பெரியார் மண்ணை - காவி மண்ணாக ஆக்கிவிடவேண்டும் என்கிற தீவிர முயற்சிகள் நடைபெறுகின்றன

ஆனால், தமிழ்நாடு, பெரியார் மண்ணாக, திராவிட மண்ணாக இருப்பதை காவி மண்ணாக ஆக்கிவிட வேண்டும் என்பதற்குத் தீவிரமான முயற்சிகள் நடைபெறுகின்ற காலகட்டத்தில், அண்ணா அவர்கள் படமல்ல - பாடம் இன்றைய காலகட்டத்திற்குத் தேவை!

அதேபோலத்தான் சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட வடிவம் கொடுத்து, ஓர் அருமையான பண்பாட்டுப் புரட்சியை அண்ணா அவர்கள் உருவாக்கினார்கள் சட்ட ரீதியாக. தந்தை பெரியாரின் சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட விளக்கம் கண்டார்.

இன்று அவற்றிற்கெல்லாம் கேள்விக் குறிகளாக, சனாதன படையெடுப்பு   நடைபெறுகின்றது.

அதுபோலவே, இருமொழிக் கொள்கை என்று, தமிழும் - ஆங்கிலமும்தான் தமிழ்நாட்டில். இங்கே வேறு மொழிக்கோ, மூன்றாவது மொழிக்கோ இட மில்லை. விருப்பமுள்ளவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம். மொழி திணிப்புக்கு இங்கே இடமில்லை என்பதைத் தெளி வாக்கினார் அண்ணா அவர்கள்.

ஆனால், இன்று வருகின்ற செய்தி என்ன?  இந்திதான் இந்தியாவை இணைக்கும் என்று கூறுகிறார் ஒன்றிய அமைச்சராக இருக்கும் ஒருவர்.

இந்தி, இந்தியாவை இணைக்குமா? அல்லது பிளக்குமா? என்பதை ஒவ்வொரு மாநிலமும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில், அந்த சுவ ரெழுத்தைக் கூடப் படிக்கத் தவறுகிறார்கள்.

எனவேதான், அண்ணா இப்பொழுது தேவைப் படுவது வெறும் படமாக அல்ல - அண்ணா அவர் களுக்கு நாம் புகழ்மாலை சூட்டுவது மட்டும் போதாது - மலர்மாலைகளை அவருடைய சிலைக்கு அணிவிப்பது மட்டும் போதாது - அண்ணாவினுடைய கொள்கைகளை நாம் மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும்.

சட்டமன்றம், நாடாளுமன்றம், வீதி மன்றம் இவற்றையெல்லாம் தாண்டி, மக்கள் மன்றம் தீர்ப்பளிக்கக்கூடிய உணர்வை உருவாக்கத் தந்தை பெரியார் வழியில், அண்ணா வழிகாட்டினார் - கலைஞர் தொடர்ந்தார்; இன்றைய ‘திராவிட மாடல்' ஆட்சி ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக் கின்றது.

ஆகவே, இது தொடரவேண்டுமானால், அண் ணாவை நாம் போற்றவேண்டும் என்பது வார்த்தைகளால் அல்ல - செயல்களால்தான்.

செய்தியாளர்: பெரியார் சிலை பீடத்தில் உள்ள கடவுள் இல்லை வாசகம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்கவேண்டும் என்று உச்சநீதி மன்றம் சொல்லியிருக்கிறதே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: அந்த வழக்கே இன்னும் அனுமதிக்கப்பட்டதா என்று சந்தேகத்தில் இருக்கிறது. 

அந்த வழக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டு, காலாவதியாகக் கூடிய சூழலில், அதற்கு அனுமதி கொடுக்கவேண்டுமா? இல்லையா? என்று கேட்டு இருக்கிறார்கள். வழக்கு வரட்டும், முழு விவரங் களை உங்களுக்குப் பிறகு சொல்கிறேன்.

 காவிகள் வாலாட்டினால் ஒட்ட நறுக்கப்படும்

செய்தியாளர்: தமிழ்நாட்டில் பெரியார் சிலை மற்றும் பெரியார் சார்ந்த சில சர்ச்சைகள் எழுகின்றனவே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: காவி படையெடுப்பு இங்கே வருகிறது; காவி படையெடுத்தால், அதன்மூலம் காலிகள் வாலாட்டினால் ஒட்ட நறுக்கப்படும்; மக்களாலும் தடுக்கப்படும். நன்றி, வணக்கம்!

 - இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்

அண்ணாவுக்குச் சூட்டும் புகழ்மாலை‘திராவிட மாடல்' ஆட்சியின் புகழைப் பரப்புவதே!தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

அண்ணாவுக்குச் சூட்டும் புகழ்மாலை

‘திராவிட மாடல்' ஆட்சியின் புகழைப் பரப்புவதே!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

அண்ணாவின் 114 ஆம் ஆண்டுப் பிறந்த நாளில், அவர் வழிகாட்டிய வகையில் ஆட்சி நடத்தும் ‘திராவிட மாடல்' ஆட்சியின் புகழைப் பரப்புவதே அவருக்குச் சூட்டும் புகழ் மாலை  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறிள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

இன்று (15.9.2022) அறிஞர் அண்ணாவின் 114 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா!

இது ஒரு திராவிடர்த் திருவிழா! காரணம், தந்தை பெரியாரின்  தலைமாணாக்கராக இருந்து அண்ணா எழுதிய எழுத்துகளும், பேசிய பேச்சுகளும், ஆட்சியைப் பிடித்து ‘திராவிட மாடல்' ஆட்சிக்கு அடித்தளமிட்டுச் செய்த சாதனைகளும், அவர்தம் போதனைகளும் என்றென்றும் நிலைத்து நின்று, பின் வந்த ஆட்சிகளுக்குக் கலங்கரை விளக்கமாக ஒளியூட்டிக் கொண்டிருக்கிறது!

தந்தை பெரியாரிடம் கற்ற பாடங்களை தனது வாழ்நாளில் கடைப்பிடித்து, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற ஆயுதங்களுடன் தனது பொது வாழ்க்கையை நடத்தியவர்.

ஆட்சி என்பது காட்சியல்ல; திராவிடப் பேரினத்தின் அடிமை வாழ்விலிருந்து ஏற்படவேண்டிய மீட்சி என்பதனை நன்கு புரிந்து, ஓராண்டு கால ஆட்சி என்பதில் முப்பெரும் நிலைத்த சாதனைகளைச் செய்து, சாகா சரித்திரம் படைத்தவர்.

இன்று பலருக்கு அண்ணா வெறும் படம் - சிலைக்கு மாலை சூட்டிவிட்டு சிலர் அண்ணாவின் பகுத்தறிவு, சுயமரியாதை, பண்பாட்டுப் புரட்சியை மறந்துவிடுகின்றனர்!

சீலம் முக்கியம்; செயல்திறன் மூலம் இன்றைய ‘திராவிட மாடல்' ஆட்சி அதைச் சாதித்து சரித்திரம் படைக்கிறது!

ஆரிய அலையில் 

சனாதன சுறா

அண்ணா அன்றே எச்சரித்தார்:

‘‘ஆரிய அலையிலே சனாதனம் என்ற சுறா மீன்கள் உலவுகின்றன. வருணாசிரமம் என்ற வாயகன்ற திமிங்கலங்களும்,  மீன்களும் உள்ளன'' என்று.

இன்று அது ‘‘விஸ்வரூபம்'' எடுத்து, தனது பெருஉருவைக் காட்டி ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' தத்துவத்தை அழிக்க ஆலவட்டம் சுற்று கிறது. அந்த ஆரிய மாயையை வீழ்த்தும் பொறுப்பு உண்மையான அண்ணாவின் தம்பிகட்கும், சீடர் களுக்கும் விடியலை விரும்பும் அனைவருக்கும் தேவை!

அண்ணா வாழ்க!

அண்ணாவின் ‘திராவிட மாடல்' ஆட்சியின் சரித்திர புகழ் திக்கெட்டும் பரவுவதே - பரப்புவதே அறிஞர் அண்ணாவுக்குச் சூட்டும் வாடா மாலை!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

15.9.2022


புதன், 7 செப்டம்பர், 2022

தமிழர் தலைவர் அவர்களே, நூறு ஆண்டுகளுக்கு மேலும் வாழ்ந்து எங்களுக்கு வழிகாட்டுங்கள் - வழி நடத்துங்கள்!

வெள்ளி, 2 செப்டம்பர், 2022

ஆகமமா - அரசமைப்புச் சட்டமா? என்று கேட்டால், அரசமைப்புச் சட்டம்தான் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியது!

வியாழன், 1 செப்டம்பர், 2022

பழங்குடியின பணிப்பெண் சித்திரவதை பிஜேபி பெண் பிரமுகர் கைது


ராஞ்சி, செப்.1- ஜார்க்கண்டின் ராஞ்சி நகரை சேர்ந்தவர் சீமா பத்ரா. மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரியான மகேஷ்வர் பத்ராவின் மனைவி. பா.ஜ.க.வின் மூத்த தலைவராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், சீமா மீது அவரது வீட்டு பெண் பணியாளர் சுனிதா என்பவர் காவல்துறையில் புகார் அளித்து உள்ளார். அதன்படி, ராஞ்சி நகரின் அர்கோரா காவல்துறையினர் பத்ராவை தேடி வந்தனர். காவல்துறையினர் தேடுவது பற்றி அறிந்ததும் சீமா தப்பி செல்ல முயன்றுள்ளார்.

இதில், ராஞ்சியில் இருந்து சாலை வழியே தப்ப முயன்ற சீமாவை காவல்துறையினர்  கைது செய்துள் ளனர். பழங்குடியின பெண்ணான சுனிதா அளித்த புகாரில் பல கொடுமையான சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுஉள்ளன.

அந்த புகாரில், சீமா பத்ராவின் வீட்டில் பணியாளாக வேலை செய்து வருகிறேன். அவரது வீட்டில் உள்ள கழிப்பறையை நாக்கால் சுத்தம் செய்ய வைத்து கொடுமை செய்துள்ளார் என தெரிவித்து உள்ளார்.

சுனிதாவின் உடலில் பல இடங்களில் காயங்கள் உள்ளன. சூடான பொருட்களை கொண்டு அவரது உடலில் சீமா பத்ரா சூடு வைத்துள்ளார் என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுனிதாவின் வாக்குமூலம் பிரிவு 164இன் கீழ் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

வீட்டில் வேலைக்கு வந்த பெண் பணியாளை துன்புறுத்திய குற்றச்சாட்டை தொடர்ந்து ஜார்க்கண்ட் பா.ஜ.க., சீமாவை இடைநீக்கம் செய்துள்ளது. ராஞ்சி காவல்துறையினர் சீமா பத்ராவை நீதிமன்றத்தில்   நிறுத்தினர். சிறையில் அடைத்தனர்.

வீட்டுக்கு வேலைக்கு வந்த இடத்தில், பழங்குடியின பெண்ணை கொடுமையாக சித்ரவதை செய்த, மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரியின் மனைவி மற்றும் மூத்த பா.ஜ.க. தலைவரான அவரது செயலால் அந்த பகுதி மக்கள் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்து உள்ளனர்.  

இதுதான் இவர்களின் பசுநேசம் கருவுற்ற பசுவை பாலியல் இச்சைக்கு ஆளாக்கி கொலை செய்த அசாம் மாநிலத்தவர்


கவுஹாத்தி, செப். 1- அசாம் மாநிலத்தில் உள்ள சந்தன் பிடி பகுதியில் வசிக்கும் ஆர்த்தி புபியா என்பவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றைத் தந்தார். 

அதில் எனது மாட் டுக் கொட்டகையில் கட் டிவைத்திருந்த கருவுற்றி ருந்த பசுமாடு அதிக உதி ரப்போக்கால் மரண மடைந்துள்ளது, நன்றாக இருந்த மாடு இறந்தது பற்றி விசாரணை செய்ய வேண்டும் என்று புகார் கொடுத்தார்.   காவல்துறையினரின் விசாரணையில் பசுமாட்டின் பின்பகுதி யில் கடுமையான காயம் ஏற்பட்டு அதன் மூலம் மரணம் உண்டானது என்று தெரியவந்தது, 

இதனை த்தொடர்ந்து நடந்த விசாரணையில் அதே பகுதியைச்சேர்ந்த 30 வயதான பரத்யுத் புபியா என்பவன் கருவுற் றிருந்த மாட்டோடு கொடூரமான முறையில் உடலுறவில் ஈடுபட்டுள் ளான். இதில் வால்பகுதியி லிருந்து உடலின் உள்ளே குடல் பகுதிவரை கிழிந்தி ருந்தது. மேலும் அவனது வீட்டின் பின்னால் மாட் டின் ரத்தக்கறையுடன் கூடிய ஆடைகளையும் கைப்பற்றினர். இதனை அடுத்து பரத்யுத் மீது இந்திய சட்டப்பிரிவு 377-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்துவரும் பரத்யுத் பக்தியுள்ளவர் என்றும் பசுக்களுக்கு பூஜை செய்ய ஊர்க்கா ரர்கள் அவரை அழைப் பார்கள் என்றும் தெரிய வந்துள்ளது. மாடுகளுக்கு பூஜை செய்ய அழைக்கும் போது அழகான மாடு களைப் பார்த்தால் இரவு நேரம் தொழுவத்திற்கு சென்று மாடுகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பானாம். ஆனால் கருவுற்ற மாடு முரண்டு பிடித்ததால் வன்முறை யாக நடந்துள்ளான். இதனால் மாடும் மரணம டைந்துவிட்டது.