வெள்ளி, 6 நவம்பர், 2020

மனுதர்மத்தைக் காப்பாற்ற முடியாத மனுவாதிகள்!

பிறப்பின் அடிப்படையிலேயே பேதம் கற்பிக்கிறதே - ஒரு குலத்துக்கொரு நீதி பேசுகிறதே மனுஸ்மிருதி - பெண்களை விபச்சார தோஷம் உள்ளவர்கள் என்று ஒட்டு மொத்தமாகக் கேவலப்படுத்துகிறதே - நான்கு வருணங்களைக் கடவுள் பிர்மாவே படைத்தார், அதில் நான்காம் வருணத்தவரான சூத்திரன் விபச்சாரி மகன் என்று கூறுகிறதே என்று ஆதாரத்தோடு சுட்டிக் காட் டினால் அறிவு நாணயமாகப் பதில் சொல்ல வாக்கற்ற கோழைகள் வேறு பக்கம் திசை திருப்புகிறார்கள்.

தொல்காப்பியம் போன்ற சங்க நூல்களைக் கொளுத்துவீர்களா என்று 'துக்ளக்' குருமூர்த்தி அய்யர் எதிர் கேள்வி எழுப்புகிறார். இதன் மூலம் 'ஆம் நாங்கள் மனுஸ்மிருதி பேர்வழிகள் தான் - அதில் எள்ளளவும் யாருக்கும் அய்யப்பாடு வேண்டாம்' என்று 'காப்புக் கட்டி' சத்தியம் செய்து விட்டார்கள் என்று பொருள்.
இனி யாராவது 'பார்ப்பனர்கள் முன்புபோல் இல்லை - எவ்வளவோ திருந்தி விட்டார்கள்' என்று நாக் கூசாமல்  சொல்ல முன் வருவார்களேயானால், அவர் களை பைத்தியக்கார மருத்துவமனைக்கு அனுப்பி, 'சங்கிலி போட்டுக்' கட்டி வைக்க வேண்டியதுதான்.

தொல்காப்பியம் குறித்து தந்தை பெரியார் தம் கருத்தினைப் பதிவு செய்துள்ளார் என்பதை ஒப்புக் கொள்கிறோம்.

"தமிழர்களிடத்தில் இல்லாதிருந்த அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால்வகைச் ஜாதி முறையை ஆரியர் மெல்ல மெல்ல நாட்டி விட்டனர்” என்று பேராசிரியர் பரிதிமாற்கலைஞர் (சூரிய நாராயண சாஸ்திரி) 'தமிழ்மொழியின் வரலாறு' எனும் நூலில் எழுதுவதும் உண்மையே!
அதே நேரத்தில் தொல்காப்பியத்தில் பெண்கள் விபச்சார தோஷம் உள்ளவர்கள் என்றோ, சூத்திரன் என்றோ, அவன் விபச்சாரி மகன் என்றோ சொல்லப் பட்டிருந்தால் 'துக்ளக்' பூணூல் கூட்டம் எடுத்துக்காட்ட வேண்டும்.

ஆண்களுக்குச் சமத்துவமாகப் பெண்கள் இல்லை என்பது வேறு. அந்தப் பெண்களே விபச்சார தோஷம் உள்ளவர்கள் என்று இழிவுபடுத்துவது வேறு.
இழிவுபடுத்துவதும், உரிமை மறுப்பதும் ஒன்றல்ல; உரிமை மறுப்பு என்பது கருத்துக்குக் கருத்து மோதல் - எதிர்த்துப் போராடுதல் ஆகும். ஆனால் இழிவு படுத்துவது என்பது எதுவாக இருந்தாலும் எரிக்கப்பட வேண்டியது என்பதை சுயமரியாதை உள்ளவர்கள் எவரும் ஏற்றுக் கொள்வார்கள்.

"எதிர்ப்பதற்குத் தேவையான காரணங்கள் வேறு - எரிப்பதற்குத் தேவையான காரணங்கள் வேறு;  இரண்டும் ஒன்றல்ல;  ஆனால் பகுத்தறிவு என்றாலே, அது பித்தலாட்டம்" ('துக்ளக்' 4.3.2009) என்று கருதுகிற கூட்டத்திடம் இதனை எதிர்பார்க்க முடியாதல்லவா!

மனிதன் என்றாலே ஆறாவது அறிவு - அது பகுத்தறிவு என்பது அறிவியல் ரீதியானது- மானுடவியல் கூறுமாகும்.

அதையே பித்தலாட்டம் என்பவர்களை அய்ந்தறி வுப் பட்டியலில் வைக்க வேண்டியதுதான்; நாம் யாரா ரிடமெல்லாம் போராட வேண்டியிருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால் வெட்கப்படத்தான் வேண்டும்.  மனுதர்மத்திற்கு வக்காலத்து  வாங்கும் 'சோ'வே கடைசி வரை அதைக் காப்பாற்ற முடியவில்லையே!

"சூத்திரர்கள் வேதம் கற்கக் கூடாது என்று ஒருபுறம் கூறுகிறது மனுதர்மம் - பிராமணர் அல்லாதார்களிட மிருந்து போதனை பெறும் அனுமதியையும் பிராமண னுக்கு அளிக்கிறது. பிராமணர் அல்லாதவன் எனும் போது, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தவர் அனைவருமே அடங்குகிறார்கள் அல்லவா?

இந்த முரண்பாடு - அதாவது மேற்கண்ட விதிக்கு சூத்திரர்கள் வேதம் கற்கக் கூடாது என்ற முரண்பாடு மனுஸ்மிருதியில் இருக்கத்தான் செய்கிறது"
('துக்ளக்' 8.11.2000)
என்று உண்மையை வேறு வழியின்றி ஒப்புக் கொண்டவர்தான் குருமூர்த்தி அய்யரின் குருநாதர் திருவாளர் சோ. ராமசாமி. 

இதற்கெல்லாம் அவர் களிடம் பதிலை எதிர்பார்க்க முடியாது. அடுத்த இதழில் வேறு பக்கம் தாவி விடுவார்கள் - பகுத்தறிவை வெறுக்கும் இந்த அறிவுக் 'கொழுந்துகள்(?)'

நன்றி விடுதலை நாளிதழ் - Viduthalai Daily Paper, 6.11.20

வியாழன், 5 நவம்பர், 2020

மனித இயல்பை மிஞ்சியவர் பெரியார்!

மனித இயல்பை மிஞ்சியவர்
====================

(தந்தை பெரியாரிடம் பேரன்புகொண்டவர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை டாக்டர் ஏ.சி.ஜான்சன். 23.12.1973ஆம் தேதி இரவு விடியும் வரை அய்யா அவர்களைக் காப்பாற்ற போராடிய மூன்று டாக்டர்களில் ஒருவர். அய்யா அவர்களை அதிகமான அளவில் புகைப்படங்களும், சினிமாப் படங்களும் எடுத்து வைத்துள்ளவர் - டாக்டர் ஜான்சன். அய்யா அவர்களும், டாக்டரும் பழகுவது தந்தையும் மகனும் பழகுவதுபோலவே இருக்கும்.)

இந்த உலகத்தின் பெருஞ் சக்திகள், மாபெரும் இயற்கை நிகழ்ச்சிகள் அனைத்தும் மனிதனிடத்தில் அச்சத்தையும் பதைபதைப்பையும் உண்டாக்குகின்றன. இது எதுவரை? அவற்றினிடத்தில் நெருங்கிப் போகவும், அவற்றைப் பற்றி ஆய்வு நடத்தவும், அவை பற்றி மேலும் விவரங்களைக் கண்டு பிடிக்கவும் மனிதனுக்கு எப்போது துணிவு வருகிறதோ அதுவரை!

கடக்க இயலாதவை யாயும் பேரச்சமூட்டுபவையாயும் மாகடல்கள் மனிதனுக்குக் காட்சியளித்தன. எதுவரை? கரையிலே வந்து முட்டி மோதுகின்ற அலைகளுக்கு அப்பால் என்ன இருக்கின்றது என்று கண்டுபிடிப்பதற்காக கொலம்பசும் வா°கோடகாமாவும் வேறு சில முன்னோடிகளும் புறப்படும்வரை தான். அவர்கள் மாபெரும் நாடுகளையும் மிகப் பெருஞ் செல்வங்களையும் கண்டுபிடித்தார்கள்; உலக வரலாற்றின் போக்கினையே மாற்றியமைத்தார்கள்.

பெரியார் என்ற சொல்!

‘பெரியார்’ என்னும் சொல்லின் பொருள் காருண்யம் மிக்கது. ‘பெரியார்’ என்னும் அந்தச் சொல்லே பல்வேறு மக்களின் இதயத்தில் வலிமை வாய்ந்த உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பவல்லது. சிலருக்கு அச்சம்; சிலருக்கு வெறுப்பு; சிலருக்குத் திகில்! பிறருக்கோ உண்மை அன்பு.

அவநம்பிக்கை, அச்சம், வெறுப்பு எல்லாம் பிரதானமாக யாருக்கு ஏற்படுகிறது? பெரியாரைத் தனிப்பட்ட முறையில் அறியாதவர்களுக்கு - வெகு தொலைவில் நின்று கொண்டு, குழம்பி மங்கிப்போன தங்கள் கண்களால் அவரைப் பார்ப்பவர்களுக்கு!

பெரியார்மீது நம்பிக்கை வைக்காதவர்களுள் நானும் ஒருவனாக இருந்தேன். அவருக்கும் எனக்கும் எந்த ஒட்டும் உறவும் இருந்திருக்க நியாயமில்லை. அவர் பேசுகின்ற கூட்டங்களுக்கு போய் மாட்டிக் கொள்ளாதபடி அதிஜாக்கிரதையாக நான் பார்த்துக் கொள்வேன். உண்மையில், எனக்கு 35 வயதுக்கு மேலாகும்வரை நான் அவரைப் பார்த்ததே கிடையாது. பெரியார், பிளேக் என்னும் கொள்ளை நோய் போல வெறுத்து ஒதுக்கப்படவேண்டிய ஒரு மனிதர் என்று நான் கருதினேன்.

வெறுத்தேன் - வியந்தேன்

பெரியார் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்; மேலும் அவர் எதையும் பட்டவர்த்தனமாகப் பேசுகிறவர். எனவே, ஒரு மனிதனின்பால் இன்னொரு மனிதனை அன்பு கொள்ளச் செய்யும் நல்லியல்புகள் எதுவும் அவரிடம் இருக்காது என்று மக்களில் பலர்

கருதினார்கள்.

அப்போது, காலஞ்சென்ற முதல்வர் திரு.சி.என்.அண்ணாதுரை அவர்களின் இறுதி நாட்கள். நான் அன்னாருக்கு மருத்துவச் சேவை செய்யும் பாக்கியம் பெற்றிருந்தேன். ஒரு நாள், முதல்வரைப் பார்க்க வந்திருந்த பழுத்த பழமான மனிதர் ஒருவரை நான்கு பேர் நடத்திக் கூட்டிக் கொண்டு வந்ததை நான் கண்டேன்.

உடல் நிலை மோசமாகிக் கொண்டிருந்த முதல்வரைக் கண்டதும் அந்தப் பெரிய முதியவர் தமது அடக்க இயலாத துயரத்தின் காரணமாக இடிந்து விழுந்தாற்போல ஆகிவிட்டார்; அண்டையில் நின்றவர்கள் ‘பெரியார்’ என்று ‘கிசுகிசு’ குரலில் பேசிக்கொண்டார்கள். நாம் நிரம்ப விஷயங்கள் கேள்விப்பட்டோமே அந்த மனிதர் இவராகத்தான் இருக்க வேண்டும் என்று நான் ஊகித்துக் கொண்டேன். ஆனால், அவரது துயரம் மனிதாபிமானம் நிறைந்ததாக இருந்தது. இது என்னை வியப்பிலாழ்த்தியது.

அடுத்த முறை எனக்குப் பெரியாரோடு தொடர்பு ஏற்பட்டது அவர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, அம்மருத்துவமனையில் நான் கதிரியக்கச் சிகிச்சை மருத்துவனாகப் பணியாற்றி வருகிறேன்.

பெரியாருக்கு பல ஆண்டுகளாக இருந்து வந்த ஹெர்னியாவுக்காக (குடல் இறக்கம்) அறுவைச் சிகிச்சை செய்வதற்காக டாக்டர் பட் அவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தார்கள். இதன் காரணமாக, பெரியாரின் சிறு நீர்க்கழிவு உறுப்புகளின் ஒரு பகுதி குடலிறக்கத்தினுள் இழுக்கப்பட்டு சிக்கிக் கிடந்தது. இதன் விளைவாக, சிறு நீர்க்கழிவுக்கு ஓரளவு தடை எற்பட்டிருந்தது.

சிறு நீர்க்கழிவுப் பாதையை எக்°ரே மூலம் பரிசோதிக்கும்போது நான் அழைக்கப்பட்டேன். பெரியாரின் மூத்திரப் பையினுள் ஒரு குழாய் செருகப்பட்டது. மாறுபட்ட திரவம் ஒன்று உள்ளே செலுத்தப்பட்டது. இப்பொருள் உள்ளே செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது, சிறு நீர்ப்பை மிகவும் மோசமான நிலையில் இருந்ததாக நான் கண்டேன். இயல்பாக, இது நோயாளிக்கு மிகுந்த வேதனையையும் துன்பத்தையும் ஏற்படுத்தியிருக்கும்.

பெரியாரின் பேராற்றல் என்னுள் பதிந்தது!

ஆம்; பெரியார் வேதனையாலும் துன்பத்தாலும் துடிதுடித்துக் கொண்டுதான் இருந்தார். துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் மனிதர் ஒருவரை ஆசுவாசப்படுத்துவதற்காக நான் கேட்டேன், “வலிக்கிறதா, அய்யா?” பெரிய புள்ளிகளுக்குப் பரிசோதனை நடைபெறுகிறது என்றால் அவர்கள் பெரிய ஆர்ப்பாட்டம் செய்து விடுவார்கள். பரிசோதனையின்போது அவர்களுக்கு வலி ஏற்பட்டுவிட்டாலோ, அவர்களுள் பெரும்பாலோரால் அதைத் தாங்கிக் கொள்ளவே இயலாது. அவர்கள் கண்டபடி கத்துவார்கள்; புகார் சொல்லுவார்கள்; பக்கத்தில் நிற்பவர்களை யெல்லாம் திட்டித் தீர்த்து விடுவார்கள்.

ஆனால் பெரியார் என் கைகளில் ஒன்றைச் ‘சட்’டென எட்டிப் பிடித்தார். “உங்களுக்கு என்ன விருப்பமோ அப்படியே செய்யுங்கள்; நீங்கள் அருகிலே இருப்பதால் இப்போது வலி அதிகமாக இல்லை” என்றார். இவ்வாறு சொல்லிக்கொண்டே என் கையை எடுத்துத் தமது கன்னத்தோடு வைத்து அணைத்துக் கொண்டார். தனது தாயின் ஆதரவில் முழு நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு சின்னஞ்சிறு குழந்தையின் செயலைப் போன்றிருந்தது இது.

இச்செயல் எனக்கு முற்றிலும் புதியதாக இருந்தது. இந்தப் பேராளரின் பெருந்தன்மை பேராற்றலுடன் என்னுள்ளே பதிந்தது. அவரது சிறு நீர்ப்பையின் நிலைமையை நான் கண்டதும் அவர்மீது நான் கொண்ட வியப்பு மேலும் பெருகியது. இவரது சிறுநீர்ப்பை இருந்த நிலையில் உடல் நல மிக்க எந்தவொரு பலசாலி இளைஞனின் சிறுநீர்ப்பையும் இருந்திருந்தால் உடலாலும் மனத்தாலும் எதையும் செய்ய முடியாத அளவு அவன் உடைந்து போயிருப்பான்.

சிறுநீர்ப்பாதையில் கிருமி தாக்கினால் அது மனத்தையும் இலகுவில் பாதித்துவிடும். புத்தி மாறாட்டத்தை உண்டாக்கிவிடும். பரிசோதனை முடிவடைந்தது. அறுவைச் சிகிச்சை செய்யப்படும் போது தன்னுடன் நான் இருக்க இயலுமா? அதற்காகக் கொஞ்ச நேரம் ஒதுக்க என்னால் இயலுமா என்று பெரியார் என்னிடம் கேட்டார். இதற்கு நான் டாக்டர் பட் அவர்களிடம் அனுமதி பெற்று அறுவை சிகிச்சை நடந்த போது பெரியாருடனேயே இருந்தேன்.

நான் பார்த்த பிற அறுவைச் சிகிச்சைகளைவிட இந்த அறுவைச் சிகிச்சை மிகவும் சிக்கலானதாக இருந்தது. முறையாக உள்ள உறுப்பு அமைப்புகளைக் காண்பது அரிதிலும் அரிதாக இருந்தது. சிறு நீர்ப்பையிலிருந்து சிறு நீரை வெளியேற்றுவதற்காக மாட்டப்படும் குழாயை உடம்பின் எந்த இடத்திலே துளைத்துப் பொருத்துவது? சரியான இடத்தைக் கண்டுபிடிப்பது டாக்டர் பட் அவர்களுக்கு இமாலயப் பிரச்சினையாகி விட்டது.

டாக்டர் பட் அவர்கள் ஆன்றடங்கிய அறுவை மருத்துவர். இதை நான் நன்கு அறிவேன். எதற்கும் நிலை குலையாதவர் அவர். (சில ஆண்டுகளுக்கு முன் அவரது சொந்தச் சகோதரிக்குப் பெரிய அறுவைச் சிகிச்சை ஒன்றை அவர் செய்யும்படி ஏற்பட்டது; அப்போது கூட அவரிடம் கலக்கமே இல்லை) அத்தகைய டாக்டர் பட் அவர்களுக்கே இது பெரிய காரியமாகப்பட்டது. அவர் பெருமளவு பதைபதைப்புடன் இருந்தார்.

டாக்டர் பட்டின் அபாரத்திறன்

பெரியாரின் பழுத்த வயது காரணமாக அவரது இருதய நிலை பற்றி சற்றுப் பயம் ஏற்பட்டிருந்தது. மயக்க மருந்தை அவரால் தாக்குப் பிடிக்க முடிமுh என்பது பற்றியும் அச்சமேற்பட்டிருந்தது. சிறுநீரை வெளியேற்றுவதற்கு இடுப்புக்கு மேலே குழாய் பொருத்துவது என்பது தான் மிகவும் சாதாரணமான மருத்துவ நடைமுறை. இந்தக் குழாய் பெரியாருக்குப் பல்லாண்டு நிலைத்து இருக்க வேண்டும்; இதனை எப்படிப் பொருத்துவது என்பதற்கு டாக்டர் பட் அவர்களின் அறிவு அனைத்தும், ஆதாரம் அனைத்தும் திரட்டிப் பயன்படுத்தப்படவேண்டியதிருந்தது. இவற்றை அவர் திரட்டிப் பயன்படுத்திய அந்த நாளை நான் எம் மொழியில் பாராட்டுவேன்! டாக்டர் பட் அவர்களின் உதவியாளனாக நான் இருந்த நாளைவிட இந்த நாளில் தான் நான் அவரை உச்சிமேற்கொண்டு மெச்சிப் பாராட்டினேன்.

இறுதியாக, அறுவைச் சிகிச்சை நடந்தேறியது. பெரியார் வார்டுக்குத் திருப்பியனுப்பப்பட்டர். மறுநாள் நாங்கள் பெரியாரைப் பார்க்கப் போனோம். டாக்டர் பட் அவர்களுக்கும் எனக்கும் நன்றி சொல்லப் பெரியார் விரும்பினார். எங்களை எப்படியாவது தொட்டு நன்றி கூறவேண்டும் என்று முயன்று கொண்டிருந்தார் பெரியார்.

அவர் பணிவை உரைக்க இயலுமோ?

மல்யுத்தப் போட்டியின்போது எதிரியின் காலைப் பிடித்து அவர்களை அப்படியே தாக்கி அப்பால் வீசியெறியும் மாமல்லர்களை நான் கண்டிருக்கிறேன். “வெல்வதற்காக குனிதல்” என்ற ஆங்கிலச் சொற்றொடரைப் பற்றியும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், ஒரு மாபெரும் முதிய தலைவர் - தொண்ணூறுக்கும் அதிகமான வயதடைந்தவர் - என்னை நோக்கி வளைந்து குனிகிறார்; அதன் மூலம் அவர் பால் நான் கொண்டிருந்த பகைமையைக் கெல்லியெறிகிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ளவே இயலவில்லை! கேவலம் பொருள் சிதைந்து அழிவுறும் சொற்களால் அவரது பணிவினை எப்படி விளக்குவது?

உண்மையில், தம்மோடு தொடர்புகொள்கிறவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர் இவ்வாறே நடக்கிறார். அவர்கள் பெரியவர்களா? சின்னவர்களா? என்பது பற்றியோ அவர்கள் ஏழைகளா, பணக்காரர்களா என்பது பற்றியோ அவருக்கு அக்கறை இல்லை. இந்த நிகழ்ச்சியின் விளைவாக என் உள்ளத்தில் ஒரு தீர்மானம் உருவாகியிருந்தது. இந்த ஒப்புயர்வற்ற மனிதரை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்தத் தீர்மானம். இதன் பிறகு நான் அடிக்கடி அவரைப் போய்ப் பார்த்தேன்; அவரது அரசியல், சமுதாய இலட்சியங்கள் அனைத்தையும் பற்றி அவரிடம் மிகவும் மனந்திறந்து விவாதித்திருக்கிறேன்.

நான் பல பெரிய மனிதர்களையும் நோயாளிகளையும் பார்த்திருக்கிறேன். இவர்கள் 60 வயதுக்குப் பிறகு மாறாத குறிப்பிட்ட கருத்துக்களைப் பிடிவாதமாக மனதில் உருவாக்கிக் கொண்டிருப்பவர்கள். 70 வயதுக்குப் பிறகு அவர்களின் கருத்துக்கள் ஆட்டம் கண்டிருக்கும். 80 வயதுக்குப் பிறகோ நொய்ந்துபோன பல கருத்துக்களே அவர்களிடம் இருக்கும். இவையும் கூட அவர்களுடைய குணப்பண்புகளுடன் கூட புதைக்கப்பட வேண்டியவைதான்.

ஆனால், நான் பெரியாருடன் உறவாடத் தொடங்கியபோது அவரது கருத்துக்களும் சிந்தனைகளும் மிகவும் உயர்ந்தவையாக, மிகவும் உன்னதமானவையாக இருக்கக் கண்டேன். இந்தத் தொண்ணூற்று வயதுப் பழுத்த முதியவரின் உள்ளம் எனக்குத் திறந்து காட்டிய ஆழங்களையும் உயரங்களையும் அரை குறையாகப் புரிந்து கொள்வதற்குக் கூட நான் எனது மனத்தை முற்றிலும் ஒரு முகப்படுத்த வேண்டியிருந்தது. அத்துணை உயர்வும் உன்னதமும் படைத்தவை அவரது சிந்தனைகளும் கருத்துகளும்.

கூர்ந்த அறிவு

அவரது கூர்ந்த மதி எவராலும் நம்பொணாத அளவு அத்துணைக் கூர்மையானது. அவருடன் பிறர் பேசிக் கொண்டிருக்கும்போது, அப்பேச்சிலுள்ள ஒரு தெளிவற்ற வாக்கியத்தைப் பிடித்துக் கொள்வார் - அதில் இரு பொருள் தொனிக்கும் வகையில்! அரசியல்வாதிகளால் வேறு ஏதோ காரியத்துக்காகச் சொல்லப்பட்ட வாக்கியங்களையும் அவர்தம் மனதில் பிடித்துக் கொள்வார். எப்படி? அவருக்கோ காது கேட்பதில் சிரமம், கேட்கும் கருவியைக் காதிலே பொருத்திய வண்ணம் பிறர் பேசுவதைக் கேட்டு அதில் தமக்கு வேண்டிய வாக்கியங்களை அப்படியே மடக்கிப் பிடித்துக் குறித்துக்

கொள்வார்.

அவரது கண்கள் வயது காரணமாக ஓரளவு மங்கலாகி விட்டன. என்றாலும் இந்தக் கண்களைக் கொண்டே துருவித் துருவிப் படித்துவிடுவார். இதற்காக அவர் பூதக் கண்ணாடியைப் பயன்படுத்தினார். அசல் ஷெர்லாக்ஹோம்° தான்! துப்பறிவதற்கு உண்டான ஒரு தடையத்தைக் கூட அவர் தப்பவிட்டுவிடமாட்டாரே! 94ஆவது 95ஆவது வயதுகளின் போது அவர் எழுதிய நாட்குறிப்பேடுகளையும் கூட்டங்கள் ஒன்றோடு ஒன்று குழம்பிப் போகாதபடி அவர் தேதி கொடுப்பதையும் நாளெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் போலிருக்கும்!

இவருக்கு நிகர் இங்கர்சாலுமல்ல!

இவையனைத்துக்கும் மேலாக, நூற்றாண்டினை எட்டி வேகமாக நடைபோட்டுக் கொண்டிருந்த அவரது உடல் வலுதான் என் உள்ளத்தில் வெகு ஆழமாகப் பதிந்தது. சாக்ரட்டீ°, பெர்னாட்ஷா, இங்கர்சால் போன்ற பெரிய பெரிய சமுதாய தொண்டர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் பலர் இருந்திருக்கிறார்கள். மாபெரும் சக்தி படைத்த, மாபெரும் இலட்சியங்களை வரித்துக் கொண்ட மனிதர்கள் தங்களது உன்னதமான இலட்சியங்களை எழுத்தில் வடித்துச் சென்றவர்கள் ஏராளம். எனினும் இந்த மனிதருக்கு ஈடு நிற்கக்கூடியவர்கள் வெகு சிலரே - ஏன், யாருமே இல்லையென்று கூட கூறலாம். ஏனென்றால்... இவர் மட்டுமே காலை 7 மணிக்குக் கன்னியாகுமரியிலே ஒரு கூட்டத்துக்கு தேதி - நேரம் ஒதுக்கிவிட்டு அதே நாள் மாலை 5 மணிக்கு ஈரோட்டிலே இன்னொரு கூட்டத்துக்கும் அதற்கு மேல் நள்ளிரவில் 200 மைல் தொலைவிலுள்ள இன்னொரு ஊரில் கூட்டத்துக்கும் நேரம் கொடுக்கக்கூடியவர்.

அய்யா ஒரு கார் பாட்டரி

அவர் மனித உருவில் ஓடிக் கொண்டிருந்த ஓர் என்ஜின், அது மட்டுமா? அவர் அளவு வேகத்தில் ஓடக்கூடிய ஓட்டப்பந்தய வீரர் யாருமே இல்லை. டாக்டர் பட் அவர்கள் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்கள் - அவர் ஒரு கார் பாட்டரியைப் போன்றவர். இடைவிடாமல் கார் ஓடிக் கொண்டே இருந்தாலன்றி பாட்டரி மீண்டும் மீண்டும் சக்திபெற (சார்ஜ்) இயலாது!

ஒருமுறை கடுமையான வயிற்றுப் போக்கினைத் தொடர்ந்து ஏறத்தாழ மயக்கமடைந்து விட்ட நிலையில் மருத்துவமனைக்கு அவர் கொண்டு வரப்பட்டார். அவருடைய வயதுக்கு அது அவரது உயிருக்கே உலை வைக்கக் கூடியது. ஊசி குத்துவதையோ செயற்கை முறையில் உணவு ஏற்றப்படுவதையோ பெரியார் எப்போதுமே பெரிதும் வெறுத்து வந்தார். அவரது தொண்டையில் சில அவுன்° திரவ உணவை உள்ளே இறக்குவது என்பது மிகவும் கடினமான காரியம்.

திரவ நிலை சில மணி நேரத்துக்குள் ஓரளவு சமமாகி விட்டது. அரைகுறை மயக்க நிலையிலிருந்து பெரியார் விழித்துக் கொண்டார். “நாம் எங்கே இருக்கிறோம்” என்று கேட்டார். மயக்கமடைந்த நிலையில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதையும் தாம் மயக்கமடைந்திருந்த நிலையிலேயே தமது சிறுநீர் வெளிப்போக்குக் குழாய் மாற்றப்பட்டிருப்பதையும் தாம் சிறிது திரவ உணவு உட்கொண்டிருப்பதையும் உணர்ந்தார். உடனடியாக, “சரி! சரி! அடுத்து மாநாட்டுக்குப் புறப்பட்டுப் போக வேண்டிய நேரமாகி விட்டது! எனக்கு இப்போது எல்லாம் சரியாகி விட்டது!” என்று கூறிக் கொண்டே அவர் எழுந்து  விட்டார்.

எந்தக் கூட்டத்துக்கும் அவர் காலந் தவறிப் போனார் என்பது என்றும் நடக்காத ஒன்று. கூட்டம் 4 மணிக்குத் தொடங்க வேண்டும் என்றால், அவர் சரியாக 3-55 மணிக்கு மேடையில் வந்து அமர்ந்து விடுவார். உடல் தொடர்பான வசதிக் குறைவுகள், அதிகமான உடல் எடை, ஓரளவு கீல்வாதம், பெருமளவிலான குடலிறக்கம் இது அவரது சிறு குடல், சிறு நீர்ப்பை, மற்ற உயிர்நாடியான உள்ளுறுப்புகள் ஆகியவற்றின் அளவில் பாதிக்கு மேல் இருந்தது - ஆகியவை காரணமாக அவர் நடமாடுவதே மிகவும் கஷ்டமான காரியம்.

இது போதாது என்று, சிறு நீர்ப் போக்குக்காகப் பொருத்தப்பட்டிருந்த குழாய் வேறு. இந்தக் குழாய் ஒரு பாட்டிலுடன் இணைக்கப்பட்டு அந்தப் பாட்டில் ஒரு வாளியினுள் வைக்கப்பட்டுத் தூக்கிச் செல்லப்பட வேண்டும். அவரைத் தவிர வேறு யாராக இருந்தாலும் நடமாட்டத்தையோ பிரயாணத்தையோ தவிர்த்திருப்பார்கள். ஆனால் பெரியார் அப்படியல்ல, எப்போதும் அவர் பயணம் செய்து கொண்டே இருந்தார். தினம் இரண்டுக்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு ஒப்புதல் கொடுத்தார் - இவை ஒவ்வொன்றுக்கும் இடையில் 200க்கு மேற்பட்ட மைல் தொலைவு இருக்கும்!

முதுமையில் இளமை

நான் இப்போது என் வாழ்வில் இளமை துள்ளும் பருவத்தில் இருக்கிறேன். நான் விளையாட்டு வீரனும் கூட! ஒரே நாளில் சென்னைக்குப் போய்த் திரும்புவது என்றால் எனக்கே மிகவும் கஷ்டமாக இருக்கிறது; இரவில் நான் மிகவும் களைத்துப் போய்விடுகிறேன். ஆனால் பெரியார் என்றுமே களைப்பறியாதவர். தாம் களைத்துப் போயிருப்பதாக அவர் தமக்குத் தாமே கூட ஒப்புக் கொள்வதில்லை. மாறாக, தமது கார் ஒரு முறை நடு வழியில் பழுது பட்டுப்போனபோது தாம் போக வேண்டிய திசையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்றினை நிறுத்தி, அதில் ஏறி, கூட்டத்துக்குச் சரியான நேரத்தில் இருக்கும்படியாகத் தாம் போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்து விட்டார் - சிறுநீர்ப் போக்குக் குழாய், பாட்டில், வாளி இவற்றுடன்! நடமாடுவதற்கே பெரும் கஷ்டப்பட வேண்டிய நிலையில்!

பொதுக் கூட்டங்களில் ஏதோ படுகிழடுகள் ஊர்வதுபோல அவர் என்றுமே இருக்கமாட்டார். மிகவும் சாதுரியமும் எதையும் அளந்தறிந்து பேசும் அறிவாற்றலும் பெற்றவர் அவர். சாமானிய மக்கள் பேசும் பாணியில் பேசத் தொடங்கியவர் அவர். ஆனால் மக்கள் மனத்தில் மிகவும் ஆழமாக ஊடுருவிப் பதியும் வண்ணம் அவர் பேச்சு அமைந்தது. அப்பேச்சு மக்களின் மனத்தை கவர்ந்து ஆட்கொண்டது. ஒரு மணி நேரமோ அல்லது அதற்கு மேலோ மக்கள் கவனத்தைப் பிறிதின்பால் செலுத்த முடியாதபடி இழுத்து வைத்துக் கொண்டது.

மனித இயல்பை மிஞ்சியவர்

நான் அரசியலில் என்றுமே அக்கறை இல்லாதவன். எனினும் அவரது மனோவசியப் பேச்சினால் கவரப்பட்டேன். கூட்டத்தினரைச் சுற்றிலும் தமது ‘மாயவலை’ எனும் பேச்சினை இந்தக் கைதேர்ந்த நெசவாளி நெய்தபோது அதனைக் கேட்டு எனது உணர்ச்சிகள் கிளர்ந்தெழுந்தன; அப்பேச்சு என்னை அப்படியே வாரிக் கொண்டு போயிற்று. பலமுறை, கூட்டம் தொடங்குவதற்குச் சில நிமிஷங்களுக்கு முன்பாக, அவர் சொல்லொணாத உடல் வேதனையினால் கஷ்டப்படுவதை நான் கண்டிருக்கிறேன். இந்த வேதனையே அவரது மனத்தின் கவனத்தை அலைக்கழித்துவிடும் என்று நான் அஞ்சியிருக்கிறேன். எனினும், கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது அவர் ஒரு தடவை கூட இடர்ப்பாடு அடைந்ததை நான் கண்டதில்லை. இது ஒன்றே பெரிய சாதனையாகும் - மனித இயல்பினை மீறிய அதிமனித சாதனையாகும்.

அவர் ஆணையிட்டிருந்தால் மருத்துவத் தொழிலையே துறந்திருப்பேன்

அவருடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு - அவரது பொதுக் கூட்ட உரைகள் சிலவற்றை நான் கேட்ட பிறகு - அவர் என்னைப் பார்த்து, உன் மருத்துவத் தொழிலுக்கு முழுக்குப் போட்டு விட்டுத் தமது பணியில் நாட்டை மேம்படுத்தும் அவர்தம் பணியில் சேர்ந்துவிடும்படி கேட்டிருப்பாரேயானால், நான் அவ்வாறே செய்திருப்பேன்; அது எனக்குப் பெரிய கௌரவம் என்றும் கருதியிருப்பேன், நான் அந்த அளவுக்குப் பக்குவப்பட்டு விட்டேன்.

அறிவியல் அடிப்படையிலான நிகழ்ச்சி ஒன்றினை நான் எவ்வாறு ஆராய்ந்திருப்பேனோ அதே போலப் பெரியாரையும் நான் ஆராய்ந்திருக்கிறேன். நான் எனது இந்த ஆய்வில் மிகவும் ஜாக்கிரதையாக, இருந்தேன்; மிகுந்த கவனத்துடன் நான் படுத்து ஆராய்ந்தேன், என் அறிவில் பட்டது இது தான் - பல நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை பிறக்கும் மாமனிதர்களுள் ஒருவரே பெரியார்.

சிலருக்கு அறிவாற்றல் மிகுந்திருக்கும்; ஆனால் அதற்கு இணையான உடல் வலிமை இருக்காது. இவை இரண்டும் பெற்றிருந்தால், முரண்பாடுகளைச் சந்திக்கும் துணிச்சலும் பெரியார் பாதிக்கப்பட்டிருந்த அளவு உடல் நிலையில் இடர்ப்பாடுகள் நிறைந்து 90 வயதிலும் கூட கடுமையாக உழைக்கும் தெம்பும் பெற்றவர்கள் வரலாற்றில் யாருமே இருந்ததில்லை.

பெரியார் வேறு நாட்டில் பிறந்திருந்தால்...

ஒரு அறிவியலறிஞன் என்ற முறையில் நான் கண்டது “மருத்துவத் துறையின் அற்புதமே பெரியார்” என்ற உண்மையைத் தான். அவர் இந்த நூற்றாண்டின் அற்புதம். அவர் மட்டும் இந்த நாட்டில் பிறக்காமல் வேறு ஏதேனுமொரு நாட்டில் பிறந்திருந்தாரானால் இந்த உலகமே அவரது புகழ் பாடியிருக்கும். ஆனால் பெரியாரைப் பெற்றிருந்தது இந்தியாவின் நல்வாய்ப்பு என்றே நான் கருதுகிறேன். இந்த மாமனிதர் என்ன செய்துள்ளார் என்பதை நமது நாடு முழுமையாகப் புரிந்து கொண்டு பாராட்டாமலிருக்கலாம் என்ற போதிலும், இந்திய வரலாற்றின் போக்கினைப் பெரியார் மாற்றியமைத்தார் என்ற உண்மை எவராலும் மறுக்கவொண்ணாதது.

சீர்திருத்த சக்கரத்தை இயக்கிவிட்டார்

மூடநம்பிக்கை, பேராசை, சுயநலம், அச்சம், துணிவின்மை போன்ற பலப்பல சக்திகள் பெரியாரின் இலட்சியங்களுக்கு எதிராக இன்னமும் கூட செயற்படுகின்றன. எனினும் பெரியார் சீர்திருத்தச் சகடத்தின் சக்கரங்களை இயக்கி வைத்து விட்டார். பெரியார் நட்டு வளர்த்துள்ள மரம் ஒரு நாள் கனி தரும் என்பதை நாம் நம்பலாம்.

பெரியார், சாதாரணமான மனிதன் ஒருவனைப் போலத் தமது வாழ்வின் சுவைகளை என்றுமே அனுபவிக்கவில்லை. அவரது வாழ்க்கை முழுவதுமே தியாகமயமானது. பணங்காசில் அவர் மிகவும் காரியக்காரராக இருந்தார் என்று பலர் பலபடப் பேசுகிறார்கள். பணம் தான் பெரியாருக்கு வைட்டமின் சத்து என்று கூட நகைச்சுவையாகக் கூறப்பட்டது. இது உண்மையே! என்றாலும் அவர் இந்த வைட்டமின் சத்தினைத் தமக்காக என்றுமே சாப்பிட்டதில்லை. நாட்டுக்கே அந்தச் சத்தினை வழங்கினார். நாட்டுக்குத் தானே அந்தச் சத்துப்பொருள் மிகவும் அவசியமாகத் தேவைப்பட்டது. தன்னிடமிருந்த சத்துப் பொருளை (பணத்தை) அவர் மருத்துவமனைகள், பள்ளிகள், அனாதை இல்லங்கள், பிற நிறுவனங்கள் போன்றவற்றை நடத்தும் அறக்கட்டளைகள் என்ற வடிவில் வாரி வழங்கிவிட்டார்.

படுத்துறங்குவதற்கு வசதியான படுக்கை அவருக்கு இருந்ததில்லை. ஒரு சாதாரண நடுத்தரக் குடும்ப மனிதன் தனக்குத் தேவையென்று விரும்பக் கூடிய வசதிகளைக் கூட அவர் அனுபவிக்கவில்லை.

அவர் குரல் ஓயாது

இந்தத் தலைவரின் குரல் இன்று ஓய்ந்துவிட்டது இடிக் குரலில் பெரியார் முழங்கும் பேருரைகளை இனி ஒலிப்பதிவு நாடாக்களிலன்றிக் கேட்க இயலாது. கருணை பொங்கித் ததும்பும் அவரது திருமுகத்தையும் அவரது அபாரத் துணிச்சலையும் இனி நமது இதயத்தின் நினைவலைகளிலும் புகைப்பட உருவங்களிலும் தான் காணமுடியும். என்றாலும் அவர் இயக்கிவைத்த சிந்தனையின் அதிர்வு அலைகள் ஓய்ந்துவிடவில்லை. அவற்றை ஒழிந்துவிடுவது என்பதும் யராலும் எப்போதும் இயலாது!

- டாக்டர் ஏ.சி.ஜான்சன்

தந்தை பெரியார் 96ஆம் ஆண்டு பிறந்தநாள் ‘விடுதலை’ மலர்107

திரவ நிலை சில மணி நேரத்துக்குள் ஓரளவு சமமாகி விட்டது. அரைகுறை மயக்க நிலையிலிருந்து பெரியார் விழித்துக் கொண்டார். “நாம் எங்கே இருக்கிறோம்” என்று கேட்டார். மயக்கமடைந்த நிலையில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதையும் தாம் மயக்கமடைந்திருந்த நிலையிலேயே தமது சிறுநீர் வெளிப்போக்குக் குழாய் மாற்றப்பட்டிருப்பதையும் தாம் சிறிது திரவ உணவு உட்கொண்டிருப்பதையும் உணர்ந்தார். உடனடியாக, “சரி! சரி! அடுத்து மாநாட்டுக்குப் புறப்பட்டுப் போக வேண்டிய நேரமாகி விட்டது! எனக்கு இப்போது எல்லாம் சரியாகி விட்டது!” என்று கூறிக் கொண்டே அவர் எழுந்து

விட்டார்.

தந்தை பெரியார் 96ஆம் ஆண்டு பிறந்தநாள் ‘விடுதலை’ மலர்

ராமர் கோவிலுக்குள் செல்ல ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுப்பா ?

விடுதலைச் செய்தி!

படித்ததில் பிடித்ததைச் சூத்திர/பட்டியிலினச் சங்கி அடிமைகளின் கவனத்திற்குக் மொண்டுவர விரும்புகிறேன்.

ராமர் கோவிலுக்குள் செல்ல ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுப்பா ?
 
இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கோவில்களில் நுழைய அனுமதி மறுத்து வருவது பல ஆண்டுகள் கடந்து தற்பொழுது நடைமுறையில் இருப்பதாக கேள்விப்பட்டு உள்ளீர்களா ? இப்பொழுது எல்லாம் யார் சார் அப்படி பார்க்குறா, அனைவரும் கோவில்களுக்கு போகிறோம் என சொல்பவர்களே அதிகம்.

” ஆனால், நடைமுறையில் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கோவில்களில் நுழைய அனுமதி மறுக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது என்பதை அனைவரும் அறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் “.

” உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு ராமர் கோவிலில் 10 நாள் பூஜைக் காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என கோவில் நிர்வாகம் அறிக்கை விட்டதாக ” யூடர்ன் ஃபாலோயர் ஒருவர் கூறி, அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து கூறுமாறு கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, அதில் கூறப்பட்டுள்ள கோவில் அடையாள சொற்களை வைத்து தேடிய பொழுது விடுதலை நாளிதழில் ” ராமர் கோவில் திருவிழாக் காலங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடதாம் ” என்ற தலைப்பில் வெளியான செய்தியின் துவக்கம் கிடைத்தது. அதில், குறிப்பிட்டு இருக்கும் விவரங்களை வைத்து எப்பொழுது நிகழ்ந்தது என்று மேற்கொண்டு ஆராய்ந்து பார்த்தோம்.

2017 ஆகஸ்ட் 24-ம் தேதி நியூஸ் 18-ன் செய்தியில் உத்தரப் பிரதேசத்தில் கோவிலுக்குள் செல்ல தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி வெளியாகி இருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் ஹமிர்புர் மாவட்டத்தில் உள்ள கதா என்ற கிராமத்தில் உள்ள ராம் ஜானகி கோவிலில் ” ராமாயணம் பாடல் ” நிகழ்ச்சி நடைபெற இருந்ததை தொடர்ந்து 10 நாட்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் வீட்டை வீட்டு வெளியே வர வேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒட்டப்பட்டு இருந்தது.

உயர் சாதி எனக் கூறிக் கொள்பவர்கள் அதிகம் வருவதாலும், தாழ்த்தப்பட்ட மக்கள் ” சுத்தமானவர்கள் ” இல்லை என்பதால் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும். 10 நாட்கள் ராமாயணம் பாடல் நிகழ்ச்சி முடியும் வரை வீடுகளிலேயே தங்கி இருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

எனினும், மாவட்ட நிர்வாகத்தின் அழுத்ததின் காரணமாக ஒட்டப்பட்ட நோட்டீஸ்கள் அகற்றப்பட்டன. ஆனால், வழிபாடு நடக்கும் நாட்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் நுழைந்து விடக் கூடாது என கோவில் வாசலில் கையில் தடியுடன் இருவர் பாதுகாப்பிற்கு நின்றுள்ளார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தடை விதிக்கும் நோட்டீசில் கையெழுத்திட்ட கோவில் பூசாரி குன்வர் பகதூர் கூறுகையில், ” கோவிலுக்கு வரும் அவர்கள் குடித்து விட்டு வருவதால், கோவிலின் புனிதம் கேட்டு விடும் என்ற காரணத்தினால் வேறு வழியின்றி செய்ததாக கூறி இருக்கிறார். மேலும், கோவில் உள்ள நிலம் தன்னுடைய மூதாதையருக்கு சொந்தமானது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுப்பது புதிய கட்டுப்பாடுகள் இல்லை, நீண்ட காலமாக கடைபிடிக்கும் ஒன்று எனத் தெரிவித்து இருக்கிறார்.

ராஜு சாஹு என்பவர் கூறுகையில், வழிபாட்டிற்காக கோவிலுக்குள் சென்ற பொழுது அடித்து, வலுக்கட்டாயமாக கோவிலுக்குள் வெளியே விரப்பட்டதாக செய்தியில் வெளியாகி இருக்கிறது. மாவட்ட நிர்வாகம் தரப்பில், கதா கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க மறுப்பது தவறு, அது குற்றமாகும் ” என கூறியதை ETV வெளியிட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் கோவிலுகளுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்க மறுப்பது பல பகுதிகளில் அரங்கேறி வருகிறது. 2016-ல் குஜராத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுக்கும் நடைமுறையை இந்தியா டுடே களத்தில் சென்று செய்தி வெளியிட்டு இருக்கிறது.

2019-ல் கர்நாடகாவில் கல்லேஸ்வரா கோவில் பழுதடைந்த காரணத்தினால் மக்களிடம் நிதி திரட்டி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தாழ்த்தப்பட்ட மக்களை உள்ளே அனுமதிக்க முடியாது என கூறிய பிறகு அரசு அதிகாரிகள் தலையிட்டனர்.

இன்றைய காலத்திலும் இப்படி தீண்டாமை எனும் தீய எண்ணத்தை கடைபிடிக்கும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அனைவரும் இந்துக்கள் எனக் கூறும் தேசத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கின்றனர். இந்நிலை மாறவே பல தலைவர்கள் போராடினார்கள். ஆனால் இத்தனை ஆண்டுகள் கழித்தும் தீண்டாமை தொடர்வது வேதனையளிக்கிறது.

ஆனால் வேலைப் பிடித்தால் 'விமோசனம்' என்பதையும் நம்புவோர் உள்ளவரையில் சங்கிகளுக்குக் கொண்டாட்டம்தான்
- முத்துச்செல்வன் முகநூல் பதிவு
6.11.20

வேளுக்குடி வேதியர்க்கு வினாக்கள்

இவ்வார 'துக்ளக்' (11.11.2020) முழுவதும் மனுஸ்மிருதிக்கே அர்ப்பணிக்கப்பட்டு விட்டது.
சகோதரர் திருமாவளவன் பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டக் கருத்தரங்கில் மனுதர்மத்தில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டு இருக்கும் உண்மையை எடுத்துச் சொன்னாலும் சொன்னார் - பா.ஜ.க.வினரும் சங்பரிவார்களும் பார்ப்பனர்களும் இடுப்பு வேட்டி அவிழ்வது கூடத் தெரியாமல் ஆத்திரத்தில் அம்மணமாக ஆடித் திரிகிறார்கள்.

ஆதாரப் பூர்வமாக இத்தனையாவது அத்தியாயம் - இத்தனையாவது சுலோகம் என்று எடுத்துக்காட்டிய நிலையில் அதற்குப் பதில் சொல்ல முடியாத பரிதாப நிலையில் விழி பிதுங்கி, உடல் வியர்த்து உளற ஆரம்பித்து விட்டனர்.

இப்படி ஆதாரத்தோடு அத்தியாயம் எண், சுலோகம் எண்களைக் கூறி எடுத்துச் சொன்ன பிறகும்கூட யாரோ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் என்ற நாமதாரியை தேடிப் பிடித்து இவ்வார துக்ளக்கில் (பக்கம் 13) எழுத வைத்துள்ளனர்.

அத்தியாயம் - சுலோகங்களைக் குறிப்பிட்டு எழுதிய பிறகும், அய்யங்கார் வாள் எழுதுகிறார்:
பெண்கள் இழிவாகக் கூறப்பட்டிருந்தால், அது எந்த ஸ்லோகம் என்று குறிப்பிட்டு, அதன் அர்த்தம் தெரிந்தால் அதையும் சொல்ல வேண்டும். ஆனால் மனுஸ்மிருதியை விமர்சிக்கும் யாரும் அப்படி தெளிவாகக் கூறவில்லை என்று எழுதுகிறாரே - இவர்களை என்ன சொல்ல!

ஏதோ இந்த அய்யங்கார் தான் நாம் எழுதியதைப் படிக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம் - 'விடுதலை' ஆதாரத்தோடு எடுத்துக் காட்டியவற்றை அறிவு நாணயத்தோடு துக்ளக் ஆசிரியர் குழுவில் ஒரே ஒருவராவது யோக்கியமாக எடுத்துக் காட்டியிருக்க வேண்டாமா?

கிருஷ்ணன் அய்யங்கார் ஸ்வாமிகள் கேட்ட தற்காக ஒன்றிரண்டை மீண்டும் ஆதாரத்தோடு இங்கு எடுத்துக்காட்டுகிறோம்.

1) மனுதர்மம் அத்தியாயம் 9 - சுலோகம் 14 என்ன கூறுகிறது!
மாதர் ஆடவரிடத்தில் அழகையும், பருவத் தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக வேண்டி அவர்களைப் புணருகிறார்கள்.

2) மனுதர்மம் அத்தியாயம் 9 - சுலோகம் 17 என்ன கூறுகிறது?
படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.

3) மனுதர்மம் அத்தியாயம் 9 - சுலோகம் 19 என்ன கூறுகிறது?

மாதர்கள் பெரும்பாலும் விபசார தோஷமுள்ள வர்களென்று அனேக சுருதிகளிலுஞ் சாஸ்திரங் களிலுஞ் சொல்லப்பட்டிருக்கின்றன. அதற்குத் திருஷ்டாந்தரமாக அந்த விபச்சாரத்துக்கு சுருதியில்  சொல்லிய பிரயாச்சித்தத்தைக் கேளுங்கள்.

எடுத்துக்காட்டுக்கு இவை மூன்றும் போதும் என்று கருதுகிறோம்.

அடுத்த 'துக்ளக்' இதழில் திருவாளர் வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் இதுகுறித்து வியாஸம் எழுதுவாரா?
அறிவு நாணயம் இருந்தால் 'துக்ளக்' அவரிடம் பதிலைப் பெற்றுப் பிரசுரிக்குமா? எங்கே பார்ப்போம்.

எந்தப் பதிப்பில் யார் எழுதி, யாரால் வெளியிடப் பட்டது என்று சொல்லித் தப்பிக்கப் பார்ப்பார்கள். அதற்கும் இடம் கொடுக்காமல் அதற்கும் இதோ ஆதாரம்:
இவ்வளவுக்குப் பிறகும் பழைய பொய் மூட்டைகளை  அவிழ்த்துக் கொட்டினால் உங்கள் யோக்கியதையின் ஆபாசம் இதுதான் இதுதான் என்று தமக்குத்தானே அம்பலமாகும்.
- மின்சாரம்
4.11.20

வெள்ளி, 30 அக்டோபர், 2020

தமிழக அரசின் 162 ஆவது பிரிவுப்படி அரசு ஆணை: வரவேற்கத்தக்க ஏற்பாடு*

*திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை*

*தமிழக அரசின் 162 ஆவது பிரிவுப்படி அரசு ஆணை: வரவேற்கத்தக்க ஏற்பாடு*

*திராவிடர் கழகத் தலைவர்  கருத்து*

தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பிய, தமிழ்நாட்டு மருத்துவக் கல்வி இடங்களில் 7.5 சதவிகிதம் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படவேண்டும் என்ற உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் தராமல் சுமார் இரண்டு மாதங்களாக இழுத்தடிப்பதோடு, மேலும் சில வாரங்கள் ஆகலாம் என்று இவ்வாண்டு கலந்தாய்வு தொடங்கவேண்டிய காலகட்டத்திலும் ஆளுநர் கூறிய நிலையில், தமிழ்நாட்டின் அத்துணை கட்சிகளும், தலைவர்களும் வற்புறுத்தியும், அதற்கு மதிப்பளிக்கத் தவறிய நிலையில், தமிழ்நாடு அரசு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 162 ஆவது பிரிவினைப் பயன்படுத்தி, தனது செயற்பாட்டினை ஒரு அரசு ஆணையாகவே போட்டு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். 

மருத்துவ மாணவர்கள் தேர்வுமூலம் ஒரு கதவு திறக்கப்படுகிறது.

தமிழக அரசின் கொள்கை முடிவு (Policy Decision) ஆகவும் அமைவதால், இது தற்போதைய சூழ்நிலையில் உள்ள ஒரே வழி!

*தமிழக அரசின் இந்த ஆணை முடிவை வரவேற்கிறோம்!*
*மாநில அரசின் இந்த உரிமை உணர்வு தொடரட்டும்!*

*கி.வீரமணி,*
தலைவர்,
திராவிடர் கழகம்

 29.10.2020   
சென்னை .

செவ்வாய், 20 அக்டோபர், 2020

மறைவு - நன்கொடை - படத்திறப்பு

மறைவு

October 10, 2020 • Viduthalai • மற்றவை
செங்கல்பட்டு மாவட்ட கழகத் தோழர் ம.கருணாநிதி அவர்களின் தாயார் ம.அஞ்சலா (வயது 81) அவர்கள் 7.10.2020 அன்று அதிகாலை செங்கல்பட்டு அருகிலுள்ள வல்லம் என்ற ஊரில் காலமானார்.  மாலை 4 மணி அளவில் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட கழகத்தின் சார்பிலும் கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பிலும் மாலை வைத்து மரியாதை செய்யப்பட்டது. கலியப்பேட்டை தமிழ் மணி, செங்கல்பட்டு இராஜேந்திரன், தன சேகரன், செம்பியன், தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, பேரமனூர் கழகத் தோழர்கள் சு. விஜயராகவன். கி.நீலகண்டன், கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க தலைவர் த.ரமேஷ், துணைத்தலைவர் கோ.குமாரி மற்றும் கழகத் தோழர்களும் கோத்ரேஜ் தொழிற்சாலை தொழிலாளர்களும் மரியாதை செலுத்தினர்.
October 17, 2020 • Viduthalai • மற்றவை

7.10.2020இல் மறைந்த தனது தாயார் ம.அஞ்சலா (வயது-81) அவர்களின் படத்திறப்பு (18.10.2020, வல்லம், செங்கல்பட்டு) நிகழ்ச்சியின் நினைவாக அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.1000/- நன்கொடையாக வழங்கினார் செங் கல்பட்டு மாவட்ட கழகத் தோழர் ம.கருணாநிதி.

செவ்வாய், 13 அக்டோபர், 2020

பெண்ணே! பெண்ணே! பெரியாரை எண்ணி பெருமிதப்படு!

-- ஆசிரியர் கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்
தந்தை பெரியாரின் மானுடப் பற்று மகத்தான சாதனை செய்த மறக்க முடியாத சமூக விஞ் ஞானம்! தன் காலத்திலேயே தாங்கொணா எதிர்பபையும் சந்தித்து , அந்த எதிர்ப்பே பிறகு அவரது கொள்கைப் பயிருக்கு நல்ல உரமாகி , விளைச்சல் வெற்றித் தந்ததைக் கண்டு களித்த வரலாறு அவருக்கே உண்டு . 

மக்கள் தொகையில் சரி பகுதியான பெண்கள் - இந்திய நாட்டில் படையெடுத்து மூளைக்குப்  போடப்பட்ட அடிமை விலங்கு காரணமாக அவர்களது சுதந்திரம் பறிக்கப்பட்டு - அடிமை வாழ்வு வாழ வேண்டியது ஆண்டவன் கட்டளையாகவும் , சனாதனத்தின் சங்கிலியாகவும் பிணைக்கப்பட்டது . 

' நாஸ்தீரி ஸ்வாதந்தர்யம் அர்ஹதி " ( பெண்களுக்கு சுதந்திரம் அளிக்கலாகாது)
 " ஸ்தீரியோ ஹீமூலதோஷனாம் ( பெண்தான் எல்லாத் தீமைகளுக்கும் அடிப்படைக் காரணம்) 
"பால்யே பிதிர்வ ஸே விஷ்டேது பாணிக் கிரஹா யௌவ்வளே புத்தரானாம் பர்த்தரீ ப்ரேது நப ஜேத் ஸ்தீரி ஸ்வதந்தரதாம் ' பெண்ணே நீ குழந்தை பருவம் வரை அப்பன் சொன்னதைக் கேள்.
வளர்ந்து மணமானதும் கணவன் சொன்னதைக் கேள். உனக்குக் குழந்தை பிறந்து தலையெடுத்ததும் உன் மகன் சொல்வதைக் கேட்கவேண்டும். உனக்கு இதுதான் கதி. நீ சுதந்திரமாக வாழத் தகுதியற்றவள் ஆண் சொல்படி கேள் " 

ஸ்தீரினாந்த சூத்ர ஜாதினாம் " ( பெண்கள் அனைவருமே சூத்ர ஜாதி)
" நஸ்த்ரீ சூத்ர வேத மத்யதாம் ' 
( அதனால் பெண்களும் , சூத்திரர்களும் வேதம் படிக்கக் கூடாது ; வேதம் ஓதுவதைக் கேட்கக் கூடாது)
" ஸ்த்ரீதாம் உபநயனஸ்தானே விவாஹம் மனு ரப்ரவீத் அதாவது , பெண்களுக்கு உபநயனம் கிடையாது - எவ்வித மந்த்ர சம்ஸ்காரங்களும் கிடையாது பெண்களுக்கு பூணூல் கல்யாணம் கூடாது - கிடையாது . 
" சிதாவாரோஹணம் பிரம்மச்சரீயம் " ( கணவனை இழந்த பெண் என்றால் அவளை
அவனது சிதையிலேயே தீ வைத்து தீர்த்துக்கட்டு! . 

இப்படியெல்லாம் ஆதிகாலத்து சனாதன தர்மம் இருந்தது- பெண்ணடிமை என்பது உயிர்க்கொலையில்கூட முடிந்துள்ளது . பிறப்பு முதல் இறப்பு வரை அடிமைகளாகவே இருக்கப் படைக்கப்பட்டவர்கள் . இவற்றில் பெரும்பாலான கொடுமைகள் பிரிட்டிஷ் கிழக்கிந்திய ஆட்சி- அதனையொட்டிய காலனிய ஆட்சிகளில் பல சட்டங்கள் மூலம் தடுக்கப்பட்டன . 

பெண்களின் விடுதலைக்கு மிக முக்கியத் தேவை அவர்களுக்குப் படிப்புரிமையும் , சொத்துரிமையும் என்றார் தந்தை பெரியார் . குழந்தைத் திருமணம் , அதனால் விளைந்த ' பால்ய விதவைக் கொடுமைகள் ' மலிந்திருந்தன . மனிதநேயத்தோடு , அதனை உடைக்க முன்வந்தார் சுமார் 110 ஆண்டுகளுக்கு முன்பே! 

அதனை தனது வீட்டில் - குடும்பத்திலிருந்தே துவக்கினார் - தனது தங்கை மகளின் பால்ய விதவைத்தனத்தை எதிர்த்து , மறுமணம் முடித்து , ' புரட்சி ' செய்து , அதனால் , தன்னுடைய புயலைப் பொருட் குடும்பத்திலும் , ஊரிலும், ஜாதியிலும் எழுந்த புயலை பொருட்படுத்தாது, இலட்சிய பயணத்தை தொடர்ந்த ஒரு மனிதாபிமானி!

- விடுதலை, தந்தை பெரியார் 142ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர்
( கட்டுரையின் ஒரு பகுதி)