தந்தை பெரியாரின் மானுடப் பற்று மகத்தான சாதனை செய்த மறக்க முடியாத சமூக விஞ் ஞானம்! தன் காலத்திலேயே தாங்கொணா எதிர்பபையும் சந்தித்து , அந்த எதிர்ப்பே பிறகு அவரது கொள்கைப் பயிருக்கு நல்ல உரமாகி , விளைச்சல் வெற்றித் தந்ததைக் கண்டு களித்த வரலாறு அவருக்கே உண்டு .
மக்கள் தொகையில் சரி பகுதியான பெண்கள் - இந்திய நாட்டில் படையெடுத்து மூளைக்குப் போடப்பட்ட அடிமை விலங்கு காரணமாக அவர்களது சுதந்திரம் பறிக்கப்பட்டு - அடிமை வாழ்வு வாழ வேண்டியது ஆண்டவன் கட்டளையாகவும் , சனாதனத்தின் சங்கிலியாகவும் பிணைக்கப்பட்டது .
' நாஸ்தீரி ஸ்வாதந்தர்யம் அர்ஹதி " ( பெண்களுக்கு சுதந்திரம் அளிக்கலாகாது)
" ஸ்தீரியோ ஹீமூலதோஷனாம் ( பெண்தான் எல்லாத் தீமைகளுக்கும் அடிப்படைக் காரணம்)
"பால்யே பிதிர்வ ஸே விஷ்டேது பாணிக் கிரஹா யௌவ்வளே புத்தரானாம் பர்த்தரீ ப்ரேது நப ஜேத் ஸ்தீரி ஸ்வதந்தரதாம் ' பெண்ணே நீ குழந்தை பருவம் வரை அப்பன் சொன்னதைக் கேள்.
வளர்ந்து மணமானதும் கணவன் சொன்னதைக் கேள். உனக்குக் குழந்தை பிறந்து தலையெடுத்ததும் உன் மகன் சொல்வதைக் கேட்கவேண்டும். உனக்கு இதுதான் கதி. நீ சுதந்திரமாக வாழத் தகுதியற்றவள் ஆண் சொல்படி கேள் "
ஸ்தீரினாந்த சூத்ர ஜாதினாம் " ( பெண்கள் அனைவருமே சூத்ர ஜாதி)
" நஸ்த்ரீ சூத்ர வேத மத்யதாம் '
( அதனால் பெண்களும் , சூத்திரர்களும் வேதம் படிக்கக் கூடாது ; வேதம் ஓதுவதைக் கேட்கக் கூடாது)
" ஸ்த்ரீதாம் உபநயனஸ்தானே விவாஹம் மனு ரப்ரவீத் அதாவது , பெண்களுக்கு உபநயனம் கிடையாது - எவ்வித மந்த்ர சம்ஸ்காரங்களும் கிடையாது பெண்களுக்கு பூணூல் கல்யாணம் கூடாது - கிடையாது .
" சிதாவாரோஹணம் பிரம்மச்சரீயம் " ( கணவனை இழந்த பெண் என்றால் அவளை
அவனது சிதையிலேயே தீ வைத்து தீர்த்துக்கட்டு! .
இப்படியெல்லாம் ஆதிகாலத்து சனாதன தர்மம் இருந்தது- பெண்ணடிமை என்பது உயிர்க்கொலையில்கூட முடிந்துள்ளது . பிறப்பு முதல் இறப்பு வரை அடிமைகளாகவே இருக்கப் படைக்கப்பட்டவர்கள் . இவற்றில் பெரும்பாலான கொடுமைகள் பிரிட்டிஷ் கிழக்கிந்திய ஆட்சி- அதனையொட்டிய காலனிய ஆட்சிகளில் பல சட்டங்கள் மூலம் தடுக்கப்பட்டன .
பெண்களின் விடுதலைக்கு மிக முக்கியத் தேவை அவர்களுக்குப் படிப்புரிமையும் , சொத்துரிமையும் என்றார் தந்தை பெரியார் . குழந்தைத் திருமணம் , அதனால் விளைந்த ' பால்ய விதவைக் கொடுமைகள் ' மலிந்திருந்தன . மனிதநேயத்தோடு , அதனை உடைக்க முன்வந்தார் சுமார் 110 ஆண்டுகளுக்கு முன்பே!
அதனை தனது வீட்டில் - குடும்பத்திலிருந்தே துவக்கினார் - தனது தங்கை மகளின் பால்ய விதவைத்தனத்தை எதிர்த்து , மறுமணம் முடித்து , ' புரட்சி ' செய்து , அதனால் , தன்னுடைய புயலைப் பொருட் குடும்பத்திலும் , ஊரிலும், ஜாதியிலும் எழுந்த புயலை பொருட்படுத்தாது, இலட்சிய பயணத்தை தொடர்ந்த ஒரு மனிதாபிமானி!
- விடுதலை, தந்தை பெரியார் 142ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர்
( கட்டுரையின் ஒரு பகுதி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக