ஞாயிறு, 12 ஜூலை, 2026

அயோத்தி கோயிலில் நடக்கும் ஊழல் பற்றி ‘கடவுள்’ ராமனுக்குத் தெரியுமா?-கி.வீரமணி

 

‘பக்தி’, ‘பக்தி’ என்று ஏமாறும் பக்தர்களே, சிந்தியுங்கள்!

பக்தி’, ‘பக்திஎன்று ஏமாறும் பக்தர்களே, சிந்தியுங்கள்! அயோத்தி கோயிலில் நடக்கும் ஊழல் பற்றிகடவுள்ராமனுக்குத் தெரியுமா? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பல்வேறு பிரிவுகளை ஏற்படுத்தி, ‘ஆக்டோபஸ்’ அதன் பல கரங்களை விரிப்பது போல, பணிவு, பகிர்வு என்ற பெயரால் தனது ஜாதி, மதவாதக் கொள்கையைப் பரவலாக்கி, தனது ஆதிக்கத்தை மேலும் மேலும், நாளும் நாளும் பரப்பி வருகிறது.

அதன் நூற்றாண்டு கொண்டாடப்படும் இத்தருணத்தில் அதனுடைய செயற்பாட்டிலும், வெளிப்படைத் தன்மை எதுவும் இல்லாது எல்லாம் மறைபொருளாகவே உள்ளன; அதன் ‘ஷாகா’ ஒன்றைத் தவிர.

அது உருவாக்கியுள்ள முக்கிய அமைப்புகளுள் ஒன்று “விஸ்வ ஹிந்து பரிஷத்’ (V.H.P.)!

‘பக்தி போதை‘ மாத்திரைகளை மக்கள் விழுங்கும்படித் தொடர்ந்து செய்து வருகிறது!

இது மீனாட்சிபுரத்தில் மதமாற்றம் நடந்ததையொட்டி ஆழ்ந்த ‘கவலை’, ‘கரிசனம்’ காட்டியும், மக்களைத் தங்களது வயப்படுத்த ‘கடவுள் பக்தி’ போதையையும், அதன் குறியீடுகளையும் ஆங்காங்கு பாமர மக்கள் முதல் படித்த, பணக்காரர் வரைப் பாய்ந்திடச் செய்து – கோயில் திருவிழாக்கள், மக்கள் மறந்துவிட்ட சடங்கு, சம்பிரதாயங்களுக்குப் புது வடிவம் கொடுத்து, தேர் ஓட்டம் மற்றும் பலவற்றிற்கும் மாதா மாதம் ஏதோ ஒரு பெயரில் புதுப்புது ‘பக்தி போதை’ மாத்திரைகளை மக்கள் விழுங்கும்படித் தொடர்ந்து செய்து வருகிறது!

கோயில் ‘கும்பாபிஷேகங்கள்’ மற்றொரு வகை!

புதுப்புது ‘ஜெயந்தி’ – பண்டிகைகளையும் ‘உருவாக்கி!’

தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் ‘பெரு முதலாளி’களால் (கார்ப்பரேட்) நடத்தப்படுவதால், அவர்களை ஏவி விட்டுப் பழைய குட்டிச் சுவர்களுக்கு வர்ணம் பூசுதல், ஓடாத கிராமங்களில் கூடத் தேர் இழுக்கச் செய்தல், முன்பு இல்லாத அனுமன் ஜெயந்தி போன்ற புதுப்புது ‘ஜெயந்தி’ – பண்டிகைகளையும் ‘உருவாக்கி’ வியாபாரங்களையும் தங்கள் வயப்படுத்தி ‘அட்சய திருதி‘ என்று, பல்வேறு ‘மயக்க பிஸ்கெட்’டுகளை தொடர்ந்து தயாரித்துத் தருதல் என்று விதவிதமாகச் செயல்பட்டு வருகிறது.

அறிவியல் தந்த கருவிகள், எலக்ட்ரானிக் மீடியாக்கள், தொலைக்காட்சிகளை வைத்து மத மூட நம்பிக்கைகளைப் பரப்பி, பக்தி போதையூட்டி, ஆட்சியாளர்கள் மீது ஏற்படும் எதிர்ப்பு, அதிருப்தியை அறவே திசை திருப்பவும், மறக்கடிக்கவும் செய்ய இந்தக் கடவுளை, பக்தி மாயையை நல்ல மயக்க மருந்தாக மக்களுக்கு ஊட்டி வருகிறது.

நீதிமன்றத் தீர்ப்புகள் வெறும் ஏட்டுச் சுரைக்காய்களாகவே நிற்கும் பரிதாப நிலை!

ஓட்டு அரசியல் நடத்தி, ஆட்சியைப் பிடிக்க விரும்பும் கட்சிகளும், வாக்கு வங்கியை மனதிற்கொண்டே நடைபாதைக் கோயில்களை அகற்றிட உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளும், அரசின் ஆணைகளும் இருந்தும், அவற்றைச் செயல்படுத்த மறுக்கின்றன. தீர்ப்புகள் வெறும் ஏட்டுச் சுரைக்காய்களாகவே நிற்கும் பரிதாப நிலை!

கும்பாபிஷேகக் கணக்கைப் போட்டிப் போட்டுக் கொண்டு சொன்ன பக்தவத்சலம் ஆட்சி முதல் நேற்றைய தி.மு.க. ஆட்சி வரை அதனால் பெரிய வெற்றியைப் பெற்றதாகத் தெரியவில்லை! ஏமாற்றம் தான் மிச்சம்!

ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., அவற்றின் செயல்பாட்டினைப் பற்றி விவரிக்கையில், கோயில்களையே தங்களது ஆதரவு பெருகும் அமைப்புகளாகக் கருதியே, நடத்துகிறார்கள் என்பது தெளிவாகிறது.

பார்ப்பன வர்ணாசிரமத் தத்துவங்களுக்கு நல்ல உரம் போடவும், இந்தக் கடவுள் பக்தி, கோயில் என்று பார்ப்பனர்கள் கொழுக்கவும், மக்கள் மூளையில் காவிச்சாயம் அடிக்கவும் பயன்படுத்துகின்றன:

பெரியார் மண்ணான தமிழ்நாட்டில்தான் அவர்கள் முழு வெற்றி பெற முடியாமல், முட்டி மோதிப் பார்க்கிறார்கள். சில கூலிப்படைகளையும், எழுத்துக் குத்தகை ஆட்களையும் முகவர்களாக்கி முயற்சி செய்கின்றனர்.

பரப்புரை, அறப் போராட்டங்கள், பேரணிகள் முலம் மக்கள் மத்தியில் தெளிவுப்படுத்தியுள்ளது!

பகுத்தறிவுப் பிரச்சாரத்தை முழுமையாக – மும்முரமாகச் செய்து – அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டுமென்று அரசியலமைப்புச் சட்டம் 51A(h) பிரிவு வற்புறுத்தியுள்ளதைப் பல ஆண்டு முன்பே தந்தை பெரியாரது இயக்கம் மக்கள் மத்தியில் எடுத்துக் கூறி வந்து, பரப்புரை, அறப் போராட்டங்கள், பேரணிகள் முலம் தெளிவுப்படுத்தியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்.சின் முக்கியத் திட்டமான ராமன் கோயில் கட்டுவதை – திட்டமிட்டே பாபர் மசூதி இடிப்பு – பிறகு அதையொட்டிய உச்சநீதிமன்றத்தின் சாதகமான தீர்ப்பு, அதைப் பயன்படுத்தி அயோத்தி ராமன் கோயில் கட்ட அடிக்கல் நாட்டியும், திறப்பு விழா செய்தது பா.ஜ.க., அதன் அறக்கட்டளை அமைத்தல் முதல் பொறுப்பாளர்கள் தேர்வு வரை பிரதமர் மோடியே அவர்களே முன்னின்று செய்து, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானமான “மதச் சார்பற்ற அரசு” என்ற கருத்தாக்கத்தையே காணாமற் போகச் செய்து, அவசர அவசரமாகத் தேர்தலுக்குப் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில் திறப்பு விழா நடந்தது;

விமானத் தளம் திறக்கப்பட்டது, எல்லாவற்றுக்கும் விளம்பரமோ அடை மழைபோல!

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் வந்த வண்ணம் உள்ளது!

ஆனால், இன்று அதில் பரிதாபத்திற்குரிய பக்தர்களின் காணிக்கைகள் எல்லாம் ஊழல் பெருச்சாளிகள் வசம் சிக்கி, குற்றச்செயல்கள் பற்றி முகம் சுளிக்கும் செய்திகள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் வந்த வண்ணம் உள்ளது!

சி.பி.அய். விசாரிக்கத்தக்க ஊழல் என்பது பற்றிச் சற்றும் கருத்தில் கொள்ளாது குற்றம் இழைத்தவர்களை ராஜினாமா மூலம் வெளியே அனுப்புகிறார்கள் (குற்றப் பத்திரிகை இல்லாது). சரியான நடவடிக்கைகள் நடக்குமா? இதுபோன்ற நடவடிக்கைகளே தொடருமா? – யாருக்கும் தெரியாது, ஏன் கடவுள் இராமனுக்குக்கூட தெரியாது என்ற நிலைதானா?

‘பக்தி’, ‘பக்தி’ என்று ஏமாறும் பக்தர்களே, சிந்தியுங்கள்!

- விடுதலை நாளேடு, 12.07.26

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக