புதன், 9 மார்ச், 2022

துக்ளக்'குக்குப் பதிலடி!


கேள்வி: ஆட்டுக்குத் தாடியும், மாநிலத்திற்கு ஆளுநரும் தேவையா? என்ற ஸ்டாலினின் கருத்தைப்பற்றி?

பதில்: ஸ்டாலினுக்கு ஆடுபற்றியும் கொஞ்சம் கூற வேண்டியிருக்கிறது. செம்மறி ஆட்டுக்குத் தாடி கிடையாது. எனவே, இயற்கையில் தாடி இல்லாத ஆடும் உண்டு. ஆனால், அரசியல் சாசனத்தில் ஆளுநர் இல்லாத மாநிலம் இருக்க முடியாது. ஸ்டாலினுக்குத் தெரிந்திருக்கும் அரசியல் சாசனத்தில் முதல்வர் இல்லாத மாநிலம் இருக்க முடியும்.

- 'துக்ளக்'

சிந்தனை: ஆட்டுக்குத் தாடி எதற்கு என்று கேட்டால், செம்மறி ஆட்டின் வாலைப் பிடித்துத் தொங்குகிறார் குரு மூர்த்தி அய்யர்வாள்.

செம்மறி ஆட்டுக்குத் தாடி இல்லாமையால் அதற்கு என்ன பயன்?

மிக சாமர்த்தியமாக எழுதுவதாக 'துக்ளக்'குகளுக்கு ஒரு அற்பத்தனம்!

ஆளுநர் என்போர் ஒன்றிய அரசின் ஏஜெண்டாகத்தானே நடந்து வரு கின்றனர்; மக்களால் தேர்ந் தெடுக்கப் பட்ட ஆட்சியின் முடிவுகளுக்கு முட்டுக் கட்டை போட குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்ட அதிகாரி தானே ஆளுநர். அதிகாரிகள், ஆட்சியாளர்களை அதிகாரம் செய்ய முடியுமா?

தி.மு.க. ஆட்சியைக் கலைக்க ஆளுநர் ஒப்புதல் மறுத்தும், or other wise    என்ற அரசியல் சாசனப் பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் தி.மு.க. ஆட்சியைக் கவிழ்த்தது எப்படி?

மற்றவற்றிற்கெல்லாம் வெள்ளைக்காரன் - கிறிஸ்தவன் ஏற்பாடு களை ஏளனம் செய்யும் பா.ஜ.க., இதில் மட்டும் வெள்ளைக்காரர் களுக்கு வெண் சாமரம் வீசுவானேன்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக