மயிலாடுதுறை, பிப்.8 மயிலாடுதுறை மாவட்டம் குத் தாலத்தை அடுத்த திருவாவடுதுறை மட ஆதினமகர்த்தர் பிப்ரவரி 7ஆம் தேதி (நேற்று) பட்டினப்பிரவேசம் மேற்கொள்ள இருப்பதாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் ஆ.ச.குணசேகரன், மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ், குடந்தை மாவட்டத் தலைவர் கு.நிம்மதி மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கடந்த 2ஆம் தேதி மாலை ஆதினகர்த்தரை நேரில் சந்தித்து பட்டினப்பிரவேசம் எனும் மனிதனை மனிதன் சுமக்கும் மனித உரிமை மீறலை கைவிடக் கோரி வேண்டுகோள் விடுத்தனர்.
நேரில் சந்தித்த கழக தோழர் களிடம் ஆலோசிப்பதாக கூறிய ஆதீனகர்த்தர் திட்டமிட்டபடி பட்டினப்பிரவேசம் செல்ல இருப்பதை அறிந்து தலைமைக் கழகத்தின் சார்பில் திருவாவடுதுறையில் மாபெரும் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இச் செய்தி தீப்போல் பரவி பல்வேறு தோழமை அமைப்புகளின் பொறுப்பாளர்களும் இந்த மறியலில் தாங்களும் கலந்து கொள்வதாக அறிவித்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், துணைக் கண்காணிப்பாளர், குத்தாலம் காவல்துறை ஆய்வாளர் ஆகியோரை நேரில் சந்தித்து மனிதனை மனிதன் சுமக்கும் பல்லக்கில் சந்நிதானம் பவனி வருவது மனித உரிமை மீறலாகும். அதை தடுத்து நிறுத்த வேண்டும். ஆதீனம் பல்லக்கு ஏறும் பட்சத்தில் திருவாவடுதுறையில் மாபெரும் மறியல் போராட்டத்தை நடத்துவோம் என்று சொல்லி மாவட்ட கழகத்தின் சார்பில் இரண்டு தினங்களுக்கு முன்னர் மனு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் மறியலை கைவிடக்கோரி காவல்துறையிலிருந்து கடுமையான நெருக்கடி கொடுக்கப்பட்டது. முன் கூட்டியே கைது (PREVENT ARREST) செய்வோம் என மிரட்டிப் பார்த்தனர். இது தோழர்களுக்கு இன்னும் உத்வேகத்தை அளிக்கவே பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மதியம் 2 மணிக்கே கழக தோழர்கள் சாரை சாரையாக குவியத் தொடங்கினர். கொட்டும் பனியில் கடும் குளிரிலில் பெண்களும் குழந்தைகளும் மறியலில் முழக்கமிட்டக் காட்சி காண்போரை வியக்க வைத்தது.
மாலை 5 மணிக்கு மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ் மறியல் போராட்டத்தைத் தொடங்கி வைத்து ஆர்ப்பாட்ட தலைவர்களை முன்மொழிந்தார். மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன் வரவேற்றார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், தஞ்சை இரா.ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன், மயிலாடுதுறை, குடந்தை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர், சிதம்பரம், அரியலூர், விருத்தாசலம் மாவட்டத் தலைவர், செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.
திருவாரூர் மண்டலத் தலைவர் கி.முருகய்யன், தஞ்சை மண்டலச் செயலாளர் குடந்தை குருசாமி, கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு இராமகுரு, தமிழக வாழ்வுரிமை கட்சி குடந்தை மாவட்ட செயலாளர் செல்வம், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் பெரியார் செல்வன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
நேரம் செல்லச் செல்ல காவல்துறையினர் கழகத் தோழர்களை கலைக்க பல்வேறு உத்திகளை கையாண்டனர். கைது செய்யப்போவதாக மிரட்டினர். தேர்தல் நேரம் என்பதால் 6 மணிக்கு மேல் ஒலிபெருக்கியை பயன்படுத்தக் கூடாது என்றனர். நீங்கள் கலைந்து சென்றால்தான் நாங்கள் உள்ளே சென்று பல்லக்கை நிறுத்தச் சொல்லி பேச முடியும் என்றனர். தோழர்கள் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. எங்களால் உங்களுக்கு ஒரு சிறு சட்ட ஒழுங்கு பிரச்சினை கூட ஏற்படாது. எங்கள் தோழர்கள் இராணுவக்கட்டுப்பாட்டையும் மிஞ்சியவர்கள் என்று பதிலளிக்கப்பட்டது.
கழகப்பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் ஒலிபெருக்கியின்றியே தனது தலைமை உரையை நிறைவு செய்தார். அதைத் தொடர்ந்து போக்குவரத்திற்கு இடையூறின்றி சாலை ஓரத்தில் அமர்ந்தபடி தோழர்கள் மீண்டும் இடி முழக்கமிட்டனர். இரவு 9 மணியளவில் காவல்துறையினர் கைது செய்வதாக அறிவித்தனர். பெண்கள் குழந்தைகள் உள்பட மறியலில் கலந்து கொண்ட தோழர்கள் உற்சாகமாக முழக்கமிட்டவாறே காவல் துறை வாகனங்களில் ஏறினர். குத்தாலம் ஆசியா மஹாலில் தோழர்கள் சிறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இரவு பத்து மணிக்கு ஆதினம் மனிதர்கள் தூக்கும் பல்லக்கில் ஏறி ஊர்வலம் புறப்பட்டார் என்ற செய்தி அறிய கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. மண்டபமே இடிந்து விழுந்து விடுமோ என்றளவிற்கு சந்நிதானத்தை எதிர்த்து கடும் குரலில் கண்டனம் எழுப்பினர். உணர்ச்சி வயப்பட்ட கழக முதுபெரும் பெரியார் தொண்டர்களை அமைதிப்படுத்துவதே பெரும்பாடாகிவிட்டது. திருவாவடுதுறையில் பட்டினப் பிரவேசமெல்லாம் முடிந்த பின்னர் நள்ளிரவு 2 மணிக்கு விடுதலை செய்வதாக காவல்துறையால் அறிவிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட தோழர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு தோழர்கள் விடைபெற்றனர்.
போராட்டத்தின் தொடக்கத்தில் விசிறி சாமியார் தஞ்சை முருகன் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரனுக்கு பயனாடை அணிவித்து, தோழர்கள் மீது மலர் தூவி வாழ்த்தினார்.
மறியல் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் :
மயிலாடுதுறை மாவட்டம் :
மாவட்ட அமைப்பாளர் ஞான. வள்ளுவன், மாவட்ட துணைச் செயலாளர் நாகரத்தினம். குத்தாலம் ஒன்றியத் தலைவர் முருகையன், ஒன்றியச் செயலாளர் இளமாறன், ஒன்றிய துணைத் தலைவர் சபாபதி, ஒன்றிய தலைவர் ஜெகதீசன், ஒன்றிய விவசாய அணி இளஞ்செழியன், ஒன்றிய அமைப்பாளர் முத்தையன், சிற்றரசு, பாலசுந்தரம் ,சதீஷ், பிரபு.மயிலாடுதுறை ஒன்றிய தலைவர் இளங்கோவன், மயிலாடுதுறை நகர தலைவர் சீனி முத்து மாவட்ட இளைஞரணி தலைவர் அறிவுடைநம்பி, புத்தன், சித்தர்காடு செல்வராஜ், கொள்ளிடம் நகர தலைவர் பாண்டியன், சீர்காழி ஒன்றியத் தலைவர் சந்திரசேகரன்.
தஞ்சை மாவட்டம் :
மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் அ.அருணகிரி, மண்டல மகளிரணிச் செயலாளர் கலைச்செல்வி, மாவட்ட துணைச் செயலாளர் சந்துரு, மகளிர் பாசறை அமைப்பாளர், அஞ்சுகம் , வல்லம் அழகிரி, தஞ்சை மாநகரச் செயலாளர் டேவிட், உரத்தநாடு உத்திராபதி, நகர துணைச் செயலாளர் சக்திவேல், குளமங்கலம் கிளைக் கழக அமைப்பாளர் சின்னய்யன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் விஜயகுமார், நகர இளைஞரணி துணைத் தலைவர் பெரியார் செல்வம்.
குடந்தை மாவட்டம் :
மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, மாவட்ட செயலாளர் துரைராசு, மாவட்ட அமைப்பாளர் அழகுவேல், மாவட்ட துணைத் தலைவர் தமிழ்மணி, குடந்தை ஒன்றியத் தலைவர் ஜில்ராஜ், திருவிடைமருதூர் ஒன்றிய துணைச் செயலாளர் முருகானந்தம், மாவட்ட இளைஞரணித் தலைவர் க.சிவகுமார், மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் திரிபுரசுந்தரி, குடந்தை மாநகரச் செயலாளர் ரமேஷ், மாவட்ட மகளிரணி தலைவர் ஜெயமணிக்குமார், சோழபுரம் நகரச் செயலாளர் மதியழகன், சோழபுரம் நகர அமைப்பாளர் முருக பாண்டியன், திருவிடைமருதூர் ஒன்றியத் தலைவர் கணேசன், நரசிங்கம் பேட்டை அசோகன், திருமருகல் ராமநாதன், திருவிடை மருதூர் துணைத் தலைவர் சிவக்குமார், குருமூர்த்தி, திராவிடபாலு, கலியமூர்த்தி, திருஞான சம்பந்தம், பெரியார் கண்ணன், நகராஜன், வரதராஜன், கணேசன், பட்டம் மோகன், துகிலி தமிழ்மணி, கோவண்ணன், ரமேஷ், சித்தார்த்தன்.
நாகை மாவட்டம் :
மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.எ. நெப்போலியன், மாவட்ட அமைப்பாளர் பொன்.செல்வராசு, மண்டல இளைஞரணி செயலாளர் சூ. ராஜ்மோகன், திருமருகல் ஒன்றிய தலைவர் மு.சின்னதுரை, திருமருகல் ஒன்றிய செயலாளர் சு.ரமேஷ், கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் ரெ.துரைசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் கி.சுரேஷ் , மாவட்ட இளைஞரணி செயலாளர் வெ.தீபன் சக்ரவர்த்தி, வி.இளையராஜா, மாணவர் கழகம் லெ.மணிகண்டன்.
திருவாரூர் மாவட்டம் :
மாவட்டத் தலைவர் வீ. மோகன், மாவட்டச் செயலாளர் வீர.கோவிந்தராசு, திருவாரூர் மண்டலச் செயலாளர் கிருட்டினமூர்த்தி, குடவாசல் ஒன்றிய தலைவர் ஜெயராமன் குடவாசல் பிரபாகரன், திருவாதிரை மங்கலம் ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் பிளாட்டோ, வடுககரைபழனிச்சாமி, முருகய்யன்.
விருத்தாசலம் கழக மாவட்டம் :
மாவட்டச் செயலாளர் ப.வெற்றிச் செல்வன், மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன், விருத்தாசலம் ஒன்றிய தலைவர் கி.பாலமுருகன் விருத்தாசலம் ஒன்றிய செயலாளர் கா.குமரேசன் வேப்பூர் வட்டாரத் தலைவர் பி.பழனிச்சாமி விருத்தாசலம் நகர செயலாளர் த.சேகர், மாவட்ட இளைஞரணித் தலைவர் செ.சிலம்பரசன், மாவட்ட மாணவர் கழகதத் தலைவர் செ.ராமராஜ், கழுதூர் மா.இளங்கோவன், கா.அறிவழகன், பெரியநெசலூர் ஆ.செந்தில்.
காரைக்கால் மண்டலம்:
மண்டலத் தலைவர் குரு. கிருஷ்ணமூர்த்தி, மண்டலச் செயலாளர் பொன்.பன்னீர்செல்வம், மண்டல இளைஞரணி தலைவர் மு.பி. பெரியார் கணபதி, மண்டல மாணவர் கழக செயலாளர் சே.சசிகுமார், மண்டல இளைஞரணி தினேஷ்குமார்,குபேரன், மனோ.
கடலூர் மாவட்டம் :
மாவட்டத் தலைவர் சொ.தண்டபாணி, மாவட்டச் செயலாளர் தென் .சிவகுமார், வடலூர் நகரத் தலைவர்,புலவர் இராவணன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் கோ.வேலு, இரா.வேணுகோபால் ப.க ஆசிரியரணி பெரியார் செல்வன், வடலூர் வீரசுந்தரம், கடலூர் நகரத் தலைவர் க.எழிலேந்தி, சி.எழிலரசு, பெரியார் பெருந்தொண்டர் தி.மாதவன் .
சிதம்பரம் கழக மாவட்டம்:
மாவட்டச் செயலாளர் அன்பு. சித்தார்த்தன், மாவட்ட இணைச் செயலாளர் யாழ்திலீபன், மாவட்டத் துணைத் தலைவர் மழவை கோ.வி.பெரியார்தாசன், மாவட்ட இளைஞரணித் தலைவர் அ.சுரேஷ் ஏ.பி.இராமதாசு நகரத் தலைவர் இரா.செல்வரத்தினம், ஒன்றியத் தலைவர் ஆனந்த பாரதி, அஸ்வின்குமார், அருண்.
அரியலூர் மாவட்டம் :
மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், மண்டலத் தலைவர் கோவிந்தராஜன், மண்டலச் செயலாளர் சு.மணிவண்ணன், பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ் , மாவட்ட அமைப்பாளர் ரத்தின .ராமச்சந்திரன், சிவக்கொழுந்து மண்டல இளைஞரணிச் செயலாளர் பொன்.செந்தில்குமார் அரியலூர் ஒன்றியச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், செந்துறை ஒன்றியத் தலைவர் உமாசங்கர் செந்துறை ஒன்றிய செயலாளர் முத்தமிழ்ச் செல்வன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் திருமால்.
விடுதலை தமிழ் புலிகள் கட்சி :
துணைப் பொதுச் செயலாளர் தளபதி சுரேஷ், தஞ்சை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் குபேந்திரன், குடந்தை வடக்கு ஒன்றிய செயலாளர் முரளி, திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அசுரன், குடந்தை தெற்கு ஒன்றிய செயலாளர் சந்திரன், குடந்தை வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ஹிட்லர், கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் பாரதி திருவிடைமருதூர் ஒன்றியத் தலைவர் ராஜேந்திரன், குடந்தை வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் அலெக்ஸ்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குத்தாலம் நகர செயலாளர் சுந்தர்.
தந்தை பெரியார் தி.க: மாவட்டத் தலைவர் இரா.பரசுராமன், சீர்காழி நகரச் செயலர் பார்த்திபன், கொள்ளிட ஒன்றியச் செயலாளர் பா.பாக்கியராசு மற்றும் 15 தோழர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட தோழர்கள் மறியலில் கலந்து கொண்டனர்.