தமிழ் மலர்

மனிதப்பற்று, தன்மானம், பகுத்தறிவு, சரிநிகர், இனவுணர்வு, மொழி உணர்வு இவற்றிற்காகவும் நலவாழ்வு,வரலாறு மற்றும் சிந்தனைத் தூண்டலுக்காகவும் பயன்பட

பக்கங்கள்

  • முகப்பு
  • பெரியார் உலகம்
  • சுயமரியாதை உலகு
  • பகுத்தறிவு உலகு
  • சமூக நீதி
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • திராவிடர் இனம்
  • தமிழ் உலகு
  • சிந்தனை செய்வோம்
  • மகளிர் மாண்பு
  • தென் சென்னை திராவிடர் கழகம்

ஞாயிறு, 5 மார்ச், 2023

இராமன் பாலம் அல்ல - மணல் திட்டே! - மின்சாரம்

      பதிலடிப் பக்கம்

          January 30, 2023 • Viduthalai

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)

இராமன் பாலம் அல்ல - மணல் திட்டே!

மின்சாரம்

இராமாயணத்தைப் பற்றி 

இராஜாஜியின் கருத்து என்ன?

1930ஆம் ஆண்டு, சுதந்திரப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது, இராஜாஜி கூறிய கருத்துகள் பிற்காலத்தில், 'இராஜாஜியின் கட்டுரைகள்' என்ற தொகுப்பு நூலாக வெளிவந்தது. அதில், 'பொருளற்ற சண்டைகள்' என்ற தலைப்பில், 'இராமாயணம் நடந்ததல்ல; நன்மைக்கும் தீமைக்கும் உள்ள வேற்றுமைகளைக் காட்ட வால்மீகி முனி சிருஷ்டித்த கற்பனைதான்' என்று இராஜாஜி கூறியது, அதில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அது வருமாறு:

"உலக அனுபவத்தை வைத்து ஆராய்ந்து யோசித் தால், வால்மீகி ரிஷியானவர் இராமாயணத்தைப் பாடி யதற்கு முன்னமே - அதாவது புராதன காலந்தொட்டே, 'சீதாராம சரித்திரம்' எழுத்து வடிவம் பெறாமலே, பல நூற்றாண்டுகளாக மக்களிடையே வாய்வழிக் கதையாக வந்திருப்பதாகத் தோன்றுகிறது. கர்ண பரம்பரையாக முன்னமேயே இருந்த இராம சரிதத்தை எடுத்துக் கொண்டு அதற்கு வால்மீகி பகவான் நூல் வடிவம் கொடுத்தாற்போல் தோன்றுகிறது. அதனா லேயே கதையில் பல சிக்கல்கள் ஏற்பட்டது என்றும் ஊகிக்கலாம். வாலியைக் கொன்ற முறை, அதில் காணும் நியாயக் குறை, சீதையைக் காட்டுக்கு அனுப் பிய அநீதி என்பன போன்ற இன்னும் பல சிக்கல்கள்.

வால்மீகி ரிஷியின் காவியத்தில் இராமனுடைய நடவடிக்கைகளை, ஈஸ்வர அவதாரமாக வைத்து எழுதவில்லை. சில அதிகாரங்களிலும், இங்குமங்கும் சுலோகங்களிலும், தெய்வ அவதார விஷயத்தையும் சொல்லி வந்தாலும், மொத்தத்தில் வால்மீகி இராமா யணத்தில் காணப்படும் இராமன் ஒரு சிறந்த இராஜ குமாரன். வீர புருஷன். அபூர்வமான தெய்வீக நற் குணங்கள் பெற்றவன். அம்மட்டே; கடவுளாக வேலை செய்யவில்லை."

ஆன்மீகத்திலும், கடவுள் நம்பிக்கையிலும் அழுத்தமான ஈடுபாடு கொண்டவரான இராஜாஜி. வால்மீகி இராமாயணத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்ட பெருமை அவருக்குண்டு. மிகுந்த ஆய் வுக்குப் பிறகு, 'வால்மீகி இராமாயணம் வாய்வழியாக வந்த கதை' என்று அவரே கருத்து தெரிவித்து இருக்கிறார்.

- கே.எஸ்.அழகிரி 

(தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி)

- - - - -

பாரதியாரின் பாடலைப் பாருங்கள்!

"கடலினைத் தாவும் குரங்கும்

வெங் கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்

வடமலை தாழ்ந்தத னாலே 

தெற்கில் வந்து சமன்செயும் குட்டை முனியும்

நதியி னுள்ளேமுழு கிப்போய் 

அந்த நாகர் உலகிலோர் பாம்பின் மகளை 

விதியுற வேமணம் செய்த திறல் 

வீமனும் கற்பனை என்பது கண்டோம். 

ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும் 

ஒன்றில் உண்மையென் றோதிமற் 

றொன்று பொய்யென்னும் 

நன்று புராணங்கள் செய்தார் 

கவிதை மிகநல்ல தேனும் 

அக்கதைகள் பொய்யென்று 

தெளிவுறக் கண்டோம்!" 

இது எங்களுடைய பாட்டு அல்ல நண்பர்களே; பாரதியாருடைய பாட்டு.

"குரங்குகள் பாலம் கட்டின" என்ற பொய்த் திரையைப் பாரதியாரே கிழிக்கிறார். "கவிதை மிக நல்ல தேனும், அக்கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்" என்று ‘தேசியக்கவி' பாரதியாரே கூறியிருக்கின்றாரே என்ன பதில்?

- திராவிடர் கழகத் தலைவர் 

ஆசிரியர் கி.வீரமணி

- - - - -

ராமனே உடைத்து விட்டானே!

ராமன் கட்டினான் பாலம் என்கின்றனர். கம்ப ராமாயணக் கூற்றின்படி, அந்தப் பாலத்தை ராமனே உடைத்துவிட்டான் (ஆதாரம்: கம்பராமாயணம் மீட்சிப்படலம் 171ஆம் பாடல்)

மரக்கல மியங்க வேண்டி வரிசிலைக் குதையாற் கீறித் 

தருக்கிய விடத்துப் பஞ்ச பாதக ரேனுஞ் சாரிற் 

பெருக்கிய வேழு மூன்று பிறவியும் பிணிக ணீங்கி 

நெருக்கிய வமரர்க் கெல்லா நீணிதி யாவரன்றே

இராமன் புஷ்பகத்தின்மீது ஏறிச் செல்லுகையில் கடலில் அவ்விடத்து மரக்கலங்கள் இடையே இனிது செல்லுதற்பொருட்டு தனது வில்லின் நுனியாற் சேதுவைக்கீறி யுடைத்து வழிவிட்டார்.

மரக்கப்பல்கள் ஓட்டுவதற்கு அப்பாலம் தடையாக இருந்தது என்று கருதி. ராமனே அந்தப் பாலத்தை உடைத்துவிட்டான் என்று ராமாயணத்தில் கூறிய பிறகு, ராமன் பாலம் அங்கு இப்போது இருக்கிறது என்பது அறிவு நாணயமா? இராமனையே மறுப்ப வர்கள் இவர்கள் தானே!

அன்றைக்கு மரக்கப்பல் ஓட பாலத்தை இடிக்க நேர்ந்தது. இன்று பெரிய பெரிய கப்பல்கள் பயணிக்க மணல் திட்டாகிய அந்தப் பாலத்தை இடிக்க நேரு கிறது-அவ்வளவுதானே!

- திராவிடர் கழகத் துணைத் 

தலைவர் கலி.பூங்குன்றன்

ஜெயலலிதாவின் முரண்பாடு

"இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சி யான கப்பல் போக்குவரத்துக்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாக கிழக்கு நோக்கி கப்பல்கள் செல்ல வேண்டுமானால், இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதற்குத் தீர்வாகத்தான் சேது சமுத்திரத் திட்டம். இத்திட்டத்தின்படி ராமேசுவரத்திற்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் உள்ள ஆடம்ஸ் பாலம் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகள் இவற்றையெல்லாம் அகற்றி ஆழப்படுத்தி, கால்வாய் அமைப்பதுதான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம்."

- 10.5.2001 அன்று அதிமுக வெளியிட்ட 

தேர்தல் அறிக்கையிலிருந்து

ஆடம்ஸ் பாலம் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த அதே ஜெயலலிதாதான் ராமன் பாலம் என்றும், அது பதினேழு இலட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ராமன் பாலம் என்றும் புதுக்கரடி விட்டார்.

- - - - -

ராமர் சேது பாலம் பற்றிய 

உறுதியான ஆதாரம் இல்லை!

மாநிலங்களவையில் 

ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு!

"விண்ணிலிருந்து படம்பிடித்து இராம் சேதுவை ஆராய்வதில் பல்வேறு கட்டுப்படுத்தும் காரணிகள் இருக்கின்றன. இராமாயணத்தின் வரலாறு பதினெட்டா யிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. இராம் சேது 56 கிலோ மீட்டர் நீளமுடையது. கடலுக்குள் காணப்படும் மணற்படுகை, இராம் சேதுவின் எஞ்சியிருக்கும் பகுதி என்று துல்லியமாகக் கூற முடியாது. இராம் சேது உருவான வரலாறு, அதன் காலம் ஆகியன பற்றி விண்கலங்களிலிருந்து எடுக்கப்படும் படங்கள் துல்லியமான தகவல்களைத் தருவதில்லை" என்று ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங். 2022 டிசம்பர் 23 அன்று மாநிலங்களவையில் கூறியுள்ளார்.

- (புதுடில்லி, 24 டிசம்பர் 2022) 

"இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே பழங்கால ராமர் சேது பாலம் இருந்ததாகக் கருதப்படும் பிராந்தியத்தின் செயற்கைக்கோள் படங்கள். தீவுகள் மற்றும் சுண்ணாம்புக் கற்களைக் கைப்பற்றியுள்ளன. ஆனால் அவை ஒரு பாலத்தின் எச்சங்கள் என்று துல்லியமாகச் சொல்ல முடியாது' என்று 22.12.2022  அன்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

"ஓரளவிற்கு, விண்வெளி தொழில்நுட்பத்தின் மூலம் துண்டுகள், தீவுகள், சில வகையான சுண்ணாம் புக் கற்கள் ஆகியவற்றைக் கண்டறிய முடிந்தது. அவை எச்சங்கள் அல்லது பாலத்தின் பாகங்கள் என்று துல்லியமாகச் சொல்ல முடியாது" என்று, ஒன்றிய விண்வெளித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

- மதுரையில் நடைபெற்ற சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தும் திறந்த வெளி மாநாட்டில் எடுத்துக்காட்டப்பட்ட தகவல்கள் (27.1.2023)

இப்பொழுது சொல்லுங்கள் - இராமன் பாலம் என்பது பொய்தானே! மக்கள் நல வளர்ச்சிக்காக அந்த மணல் மேட்டை உடைத்து சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்துவதுதானே சரி!

இடுகையிட்டது parthasarathy r நேரம் 1:12 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: இராமன் பாலம், மணல் திட்டு, மின்சாரம்

கீழ்ப்பாக்கம், அரசு மருத்துவமனையில் கோவிலா?

 தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறை அமைச்சரின் கவனத்திற்கு...!

   January 25, 2023 • Viduthalai

கீழ்ப்பாக்கம், அரசு மருத்துவமனையில் கோவிலா?

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி (தீயணைப்பு நிலையம் அருகில்) வளாகத்தில் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதைக் கண்டித்து "அறிவுவழி காணொலி இயக்கம்" சார்பில் 24.01.2023 அன்று  மதியம் காணொலி இயக்குநர் பழ.சேரலாதன் தலைமையில் சா.தாமோதரன், துரைராஜ், மாணிக்கம், தமிழ்ச்செல்வன் ஆகியோர் மருத்துவ கல்லூரி இயக்குநர் திருமதி.சாந்திமலர் அவர்களைச் சந்தித்து கோயில் கட்டுமானப் பணிகளை நிறுத்தக்கோரி மனு அளித்தனர். உடன் அரசு ஆணையையும், நீதிமன்றத் தீர்ப்பு நகலையும் அளித்தனர். மனு குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மருத்துவ கல்லூரி இயக்குநர் தெரிவித்தார்.

இந்தக் கோயில் சட்டத்திற்குப் புறமான வகையில் அரசு நிலத்தில் கட்டப்படும் கோயிலாகும். இதற்காக யாரிடமும் யாரும் அனுமதி பெறவில்லை.  இவ்வாறான செயலைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொதுப் பணித்துறை கைகட்டி, வாய் மூடி சும்மா இருப்பதிலிருந்தே, இந்த கோயில் கட்டும் பணியைச் செய்பவர்கள் வழக்கமான திரை மறைவுச் சதிச்செயல்கள் மூலம் தங்கள் வேலைகளைச் செய்பவர்கள்என்பதைத் தெளிவுபடுத்தும்.

இந்தக் கோயில் கட்டும் செயலானது, தமிழ்நாடு அரசின் ஆணை 426 நாள்: 13.12.1993 க்கும், சென்னை உயர்நீதிமன்ற ஆணை 07.06.2022 ல் W.P.  27748 of 2022  என்ற வழக்கில் கூறப்பட்ட தீர்ப்புக்கும் எதிரானதாகும். 

இடுகையிட்டது parthasarathy r நேரம் 12:38 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கீழ்ப்பாக்கம், கோவில், மருத்துவமனை

'பெரியார் லைஃப்' உயிர் காக்கும் பணி - செயலியை தமிழர் தலைவர் ஆசிரியர் தொடங்கி வைத்தார்


     January 24, 2023 • Viduthalai

தக்க சமயத்தில் உடல் உறுப்புகள் கிடைக்காமல் போவதால் ஆண்டு தோறும் ஏறத்தாழ அய்ந்து லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

உறுப்புக்கொடை வழங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் பத்து முதல் இருபது சதவிகித உயிர்கள் காப்பாற்றப்படலாம். நூறு கோடிக்கு மேல் ஜனத்தொகை உள்ள நாடு இது. இதில் உடல் உறுப்புக்கொடை வழங்க முன் வருபவர்கள் பத்து லட்சம் மக்களில் 0.08 பேர்தான் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

திராவிடர் கழக இளைஞர் அணியின் முயற்சியால் உருவாகியுள்ள அமைப்பு ‘பெரியார் லைஃப்’. பொதுத் தொண்டுக்காகவே வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் தந்தை பெரியார். அவருடைய அடிச்சுவட்டைப் பின்பற்றி வாழும் இளைஞர்கள் உருவாக்கியுள்ள மனிதநேய வலைதளம் இது.

22.1.2023 அன்று மாலை திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் அச்செயலியைத் தொடங்கி வைத்தார்.

எளிதில் தொடர்பு! விரைவில் உதவிக்கரம்!!

குருதிக் கொடையும் உடல் உறுப்புக் கொடையும் நம்மை நிஜ மனிதர்களாக்கக் கூடியவை. திராவிடர் கழக இளைஞர் அணி ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ந்து குருதிக் கொடை முகாம்கள் நடத்திவருகிறது. எதிர்பாராத சூழ்நிலைகளில் உறவினர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினர் மறைந்தவர்களின் உடல் உறுப்புகளை கொடையாக வழங்க முன்வரலாம் என்று பொது மக்களுக்கு இளைஞர் அணியினர் எடுத்துச் சொல்வது வழக்கம்.

இந்த வலைதளத்தின் மூலம் கொடை வழங்க முன் வருபவர்கள் எளிதில் மருத்துவமனைகளுடன் தொடர்புகொள்ள முடியும். கழகத்தின் இளைஞர் அணி இதற்கு உதவி செய்யும். பல்வேறு மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் இந்தப் பணியில் ஈடுபடுவார்கள்.

நாட்டில் நிலவும் சமத்துவமின்மைக்கும், ஜாதிப் பாகுபாடுகளுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் எதிராகப் போராடிவரும் இளைஞர் அணியினர் கூடுதலாக இந்த மனிதநேயப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளனர். 'எல்லோருக்கும் எல்லாம்’ என்னும் ஆசிரியரின் கொள்கைப்படி தொண்டாற்றி வருகின்றனர்- இளைஞர் அணியினர். பிறருடைய துயரங்களை நீக்கவும், அன்பையும் மனித நேயத்தையும் பரப்பவும் அயராது உழைக்க முன் வந்துள்ள இளைஞர்கள் அவர்கள். ’திராவிட மாடல்’ தொண்டு என்றே இதனைப் பெருமிதத்துடன் குறிப்பிடலாம். அந்தப் பாதையில் இந்தப் புதிய வலைதளத்தின் பயணம் துவங்கியுள்ளது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

யார் எல்லாம் விழிக்கொடை செய்யலாம்?

விழிக்கொடையின் அவசியம் என்ன?

விழிக்கொடை வழங்கப்பட்டபின் எவ்வளவு விரைவாக விழியின் வெண்படலம் இன்னொருவருக்குப் பொருத்தப்பட வேண்டும்?

குருதிக் கொடைக்கு எவ்வளவு நேரமாகும்?

பதிவு செய்வதற்குரிய படிவம்  புதிய வலைதளத்தில் உள்ளது.

அர்த்தமுள்ள வாழ்க்கை

எதற்கும் அஞ்சாத நெஞ்சமும் துணிவும் நிறைந்த, ஈடு இணையற்ற தலைவராக விளங்கியவர் தந்தை பெரியார். ஓய்வின்றி உழைத்தவர். நிகரற்ற சிந்தனையாளர். அரசியல், பொருளாதாரம், சமூகம், இலக்கியம், தத்துவம், கடவுள் மறுப்பு, மதமறுப்பு- இப்படிப் பல பரிமாணங்களில் காட்சியளித்தவர் அவர்.

அவர் அணுகாத பிரச்சினை ஏதுமில்லை. அவரது பார்வைக்கு வராத சமுதாயச் சீர்கேடும் எதுவுமில்லை. வாழ்ந்த காலத்திலேயே ஒரு சகாப்தமாகி விட்ட மேதை பெரியார். ஒப்பற்ற மனித நேயர் அவர் என்றால் மிகையாகாது.

மொழிப்பற்றும், இனப்பற்றும் இல்லாதவராக வாழ்ந்த பெரியார், கடவுளும் இல்லை, மதம் என்ற ஒன்றும் இல்லை என்று முழங்கியவர். ஜாதிகளை அடியோடு அழிக்கப் போராடிய பெரியார், அரசியல் ஆதாயம் எதையும் நாடியதில்லை. மனிதர்கள் இருக்கும் போதும், இறந்த பிறகும் பிறருக்குப் பயன்படவேண்டும் என்று சொன்னவர்.

    January 24, 2023 • Viduthalai


இடுகையிட்டது parthasarathy r நேரம் 12:15 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: செயலி, பெரியார் லைஃப்

புதன், 1 மார்ச், 2023

ஏற்றமிகு 7 திட்டங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

 

       March 01, 2023 • Viduthalai

சென்னை, மார்ச். 1- மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், ரூ.1,136 கோடியில் 44 மருத்துவமனை கட்டடங்களுக்கு அடிக்கல் உட்பட ஏற்றமிகு 7 திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் நேற்று (28.2.2023) நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்ட லின் பங்கேற்று,  ஏற்றமிகு 7 திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது, முதலமைச்சர் பேசியதாவது: திமுக ஆட்சி அமையும் முன்பே நான் கூறியபடி, பொருளாதாரம், வேளாண்மை, குடிநீர், கல்வி, நகர்ப்புற வளர்ச்சி, சமூக பாதுகாப்பு, ஊரக வளர்ச்சி ஆகிய 7 இலக்குகளை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக தொடர்கிறோம். ஆட்சிப் பொறுப் பேற்று 2 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான புதியமுதலீடுகளை ஈர்த்துள்ளோம். ரூ.2,563 கோடியில் ஊரக குடிநீர் திட்டங் களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம். ரூ.18,815 கோடி மதிப்பில் 446 குடிநீர் திட்டப் பணிகள், ரூ.4,499 கோடியில் 23 பாதாள சாக்கடை திட்டங்களுக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.49,385 கோடியில் ஊரக வளர்ச்சித் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக 7 திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. மனிதர்களே மனிதக் கழிவுகளை அகற்றும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க தலித் இந்திய வர்த்தக தொழிற்சங்கத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பாதாள சாக்கடை திட்ட பராமரிப்பு, கழிவுநீர் அகற்றும் பணியை நவீன இயந்திரங்கள் மூலமாக மேற் கொண்டு, உயிரிழப்புகளை முற்றிலும் தவிர்க்க திட்டமிட் டுள்ளோம்.தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்க ளது குடும்பத்தினரை தொழில் முனைவோராக ஒருங்கி ணைத்து செயல்படுத்துவதற்கான முன்னோடி திட்டம் சென்னை பெருநகர பகுதியில் செயல்படுத்தப் படும். தூய்மைத் தொழிலாளர் களை தொழில் முனைவோராக மாற்றுவதற்காக, தலித் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்புடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் தூய்மைப் பணியாளர் குடும்பத்தினருக்கு, நவீன கருவிகள், வாகனங்கள் வழங்கப்படுவதோடு, திறன் மேம் பாட்டு பயிற்சிகளும் அளிக்கப் படும். முதலில் சென்னையிலும், தொடர்ந்து மற்ற பகுதிகளுக்கும் இத்திட்டம் படிப்படியாக விரிவு படுத்தப்படும்.

அடுத்தது, சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் அருமை யான திட்டம். 3ஆவதாக, மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க உள்ளோம். அடுத்து, திருநங்கைகளுக்கு மாத உதவித் தொகை ரூ.1,000இல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. 5ஆவதாக பல் வேறு துறைகளில் உள்ள பணியிடங்களில் இளைஞர்களுக்கு பணி ஆணை வழங்கப்படுகிறது.அடுத்தது, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். இதன் அடுத்த கட்டமாக, தற்போது செயல்படுத் தப்பட்டு வரும் 36 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 433 பள்ளிகளுக்கு நாளை முதல்விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன் மூலம் 56,098 மாணவர்கள் கூடுதலாக பயனடைவார்கள். 7ஆவது திட்டமாக,ரூ.1,136.32 கோடியில் 44 இடங்களில் புதிய மருத்துவமனை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட் டப்படுகிறது. வளமான, வலிமையான, வறுமை ஒழிந்த, சமத்துவ, சுயமரியாதை தமிழ்நாடு எனது லட்சியம். ‘எனது ஏற்றம் மிகு தமிழ்நாடு’ என்று ஒவ்வொருவரும் பெருமையுடன் அழைக்கும் நிலையை உருவாக்க அனைவரும் உழைப்போம். இவ்வாறு முதல மைச்சர் பேசினார்.

இதில், அமைச்சர்கள் கே.என். நேரு, ரகுபதி, மு.பெ.சாமிநாதன், கீதாஜீவன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அன்பில் மகேஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை, நகராட்சி நிர்வாக செயலர் சிவ்தாஸ்மீனா, செய்தித் துறை செயலர் செல்வராஜ், செய்தித் துறை இயக்குநர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னை அரசு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள், ‘‘ஹேப்பி பர்த்டே டூ யூ'' என்று பாடி, பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க, முதலமைச்சரும் அவர்களை வணங்கி வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டார்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 11:22 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: 7 திட்டங்கள், முதல்வர்

ஆண்டு 70 காணும் சமூகநீதி சரித்திர நாயகராம் மாண்புமிகு மானமிகு முதலமைச்சரை தாய்க்கழகம் உச்சிமோந்து வாழ்த்தி மகிழ்கிறது!


       March 01, 2023 • Viduthalai

* உழைப்பால் உயர்நிலையை அடைந்த உன்னதத் தலைவர் 

* அடுத்த தலைமுறை - 2024 மக்களவைத் தேர்தல் அவரின் இலக்கு!

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்களின் 70ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி   தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் முதலமைச்சர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முதலமைச்சருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து, புத்தகங்களை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: கழகத் துணைத் தலைவர் 

கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் 

வீ. அன்புராஜ், வழக்குரைஞர் த.வீரசேகரன், பொருளாளர் வீ. குமரேசன் மற்றும் தி.மு.க. முன்னணி தலைவர்கள்  உள்ளனர். 

(சென்னை பெரியார் திடல், 1.3.2023)


இடுகையிட்டது parthasarathy r நேரம் 11:14 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: பிறந்த நாள், மு.க. ஸ்டாலின்

செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

பலே! இப்படியும் ஒரு நாடு நியூயார்க்கில் இறந்து போன மனிதர்களின் உடல்களை உரமாக்க அனுமதி

 

     January 05, 2023 • Viduthalai

மனித உடல்களை உரமாக்குவதற்கு அனுமதி வழங்கியுள்ள அமெரிக்க மாகாணங்களின் பட்டியலில் சமீபத்திய மாகாணமாக நியூயார்க் இணைந்துள்ளது.

இதன் மூலம் ஒரு நபர் இறந்த பின்பு தனது உடலை மண்ணாக மாற்றிக் கொள் ளலாம். உடலை சிதைமூட்டுவது அல்லது அடக்கம் செய்வது ஆகியவற்றுக்கு மாற்றான சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

இந்த முறையில் மனித சடலம் ஒரு கண் டெய்னரில் அடைக்கப்படும். பல வாரங்கள் கழித்து அந்த உடல் மக்கிப்போகும்.

கடந்த 2019ஆம் ஆண்டு இந்த முறையை முதல்முதலாக சட்டப்பூர்வமாக் கிய அமெரிக்க மாநிலமாக வாசிங்டன் உள்ளது. அதை தொடர்ந்து, கொலராடோ, ஓரிகான், வெர்மான்ட் மற்றும் கலிபோர்னியா ஆகியவை இதைப் பின்பற்றின. கடந்த 31.12.2022 அன்று மாகாண ஆளுநர் கேத்தி ஹோச்சுல் அனுமதி வழங்கியதை தொடர்ந்து இந்த பட்டியலில் 6ஆவது அமெரிக்க மாகாணமாக நியூயார்க் இணைந்துள்ளது.

மனித உடலை உரமாக்கும் நடவடிக்கை சிறப்பு முறைகளை பின்பற்றி மேற்கொள் ளப்படுகிறது.

மரக்கட்டைகள், குதிரை மசால், வைக் கோல் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுடன் ஒரு மூடிய பாத்திரத்தில் மனித உடல் வைக்கப்பட்டு, பின்னர் நுண்ணுயிர் செயல்பாடுகள் நிகழ்கின்றன. ஒரு மாத காலம் மற்றும் தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான வெப்பமூட்டல் செயல் முறை ஆகியவற்றுக்கு பின்னர், நமது அன்புக்குரியவர்களின் உடல் மண்ணாக மாறியிருக்கும். மலர்கள், காய்கறிகள், மரங்கள் போன்றவற்றை பயிரிட இவை பயன்படுத்தப் படுகின்றன.

எரியூட்டியது அல்லது பாரம்பரிய முறை யில் அடக்கம் செய்வது ஆகியவை மூலம் ஏற்படும் டன் கணக்கிலான கார்பன் வெளி யேற்றத்தை இது கட்டுப்படுத்தும் என 'ரிகம் போஸ்' என்ற அமெரிக்க நிறுவனம் கூறு கிறது. கார்பன் டை ஆக்ஸைட் உமிழ்வுகள் காலநிலை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக் கின்றன. ஏனெனில் அவை பசுமைக் குடில் விளைவு எனப்படும் ஒரு நிகழ்வில் பூமியின் வெப்பத்தை சிக்க வைக்கின்றன.

பாரம்பரிய முறையில் அடக்கம் செய்ய வதற்கு கூட மர கட்டைகளால் செய்யப்பட்ட சவப்பெட்டி, நிலம் மற்றும் பிற இயற்கை வளங்கள் தேவைப்படுகின்றன.

மனித உடலை உரமாக்குவதை ஆதரிப் பவர்கள் இது குறித்து கூறுகையில், இந்த முறை சுற்றுச்சூழலுக்கு உகந்தது மட்டுமல்ல, கல்லறைகளுக்கான நிலம் குறைவாக உள்ள நகரங்களில் பழக்கத்தில் உள்ள ஒரு நட வடிக்கையும் ஆகும் என்கின்றனர்.

ஆனால், உரமாக்குவது மூலம் கிடைக்கும் மண்ணுக்கு என்ன ஆகிறது என்ற நெறிமுறை சார்ந்த கேள்விகளை சிலர் எழுப்புகின்றனர்.

இதேபோல், மனித உடல்களை வீட்டு குப்பைகளை போல் கையாளக்கூடாது என்று இந்த சட்டத்திற்கு நியூயார்க்கில் உள்ள கத்தோலிக்க மத பாதிரியார்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படு கிறது.

மேலும், மனித உடலை உரமாக்கும் செயல்முறைக்கு வசூலிக்கப்படும் கட்டண மும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தாங்கள் வசூலிக்கும் 7000 டாலர்(ரூ.5,77,962) கட்டணம் போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடத்தக்கதுதான் என்று ரிகம்போஸ் நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்காவின் தேசிய இறுதிச் சடங்கு இயக்குநர்கள் சங்கத்தின் (என்.எஃப்.டி.ஏ.) கூற்றுப்படி அமெரிக்காவில் கடந்த 2021ஆம் ஆண்டில் புதைப்பதற்கான சராசரி கட்டணம் என்பது 7,848 டாலராகவும் (ரூ.6,47,977) சிதையூட்டு வதற்கான கட்டணம் என்பது 6,971 டால ராகவும் (ரூ.5,75,567) உள்ளது.

மனித உடலை உரமாக்கும் முறை ஏற் கெனவே சுவீடன் முழுவதும் சட்டப்பூர்வ மாக உள்ளது. சவப்பெட்டி இல்லாமல் அல்லது மக்கும் சவப்பெட்டியுடன் உடல் அடக்கம் செய்யப்படும் இயற்கையான புதைகுழிகள் - இங்கிலாந்தில் அனுமதிக்கப் படுகிறது

- பிபிசி இணையம், 2.1.2023

இடுகையிட்டது parthasarathy r நேரம் 11:44 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: உடல், உரம்

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

100 நாள் வேலைத் திட்டத்திற்கும் ஆபத்து! ஒன்றிய அரசுக்குத் தமிழர் தலைவர் எச்சரிக்கை!


ஒன்றிய அரசுக்குத் தமிழர் தலைவர் எச்சரிக்கை!
February 18, 2023 • Viduthalai

 100 நாள் வேலைத் திட்டத்திற்கும் ஆபத்து!

ஆண்டுதோறும் நிதியைக் குறைக்கும் ஒன்றிய அரசே!

ஏழைகள் வயிற்றில் அடிக்காதே! அடிக்காதே!!

மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் நிதியைக் குறைத்து வருகிறது ஒன்றிய பி.ஜே.பி. அரசு. இது கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் கொடுமை என்று குறிப்பிட்டு, கொடுங்கோல் ஆட்சி காரணமாக துன்புற்றுத் துடிக்கும் ஏழை மக்களின் கண்ணீர் என்பது கொடுங்கோல் ஆட்சியாளனின் செல்வத்தை அழிக்கும் படை என்று திருவள்ளுவர் கூறியதை எடுத்துக் காட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அறிக்கை வருமாறு:

2023-2024 நிதியாண்டின் ஒன்றிய அரசால், மகாத்மா காந்தி  100 நாள் வேலை திட்டத்துக்கு ரூ. 60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, ரூ.73,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது 21.6% குறைவாக ஒதுக்கப் பட்டுள்ளது.

பொருளாதார ஆய்வறிக்கை

100 நாள் வேலைத் திட்டம் என்பது, கிராமப்புறங்களில் உள்ள குடும்பம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 100 நாள்கள் கூலி வேலைக் கான உத்தரவாதத்தை வழங்குகிறது. மேலும், இந்தத் திட்டம் என்பது தேவைக்கேற்ற திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ்,  ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால் அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை இந்தத் திட்டம் அளிக்கிறது. 100 நாள்கள் வேலை தர அரசு (பஞ்சாயத்து அமைப்புகள்) தவறினால், பாதிக்கப்பட்டவருக்கு முதல் 30 நாள்களுக்கு ஊதியத்தில் கால் பங்கும், மேலும் தவறினால் பாதி ஊதியத்தை அபராதமாக அரசு தர வேண்டும்.

100 நாள் வேலைத் திட்டத்தின்கீழ், 2022-2023 நிதியாண்டில் வேலை கேட்போரின் எண்ணிக்கை கரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய நிலைக்கு மீண்டும் செல்லத் தொடங்கியுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

நிதியைக் குறைக்கும் கொடூரம்!

100 நாள் வேலைத் திட்டத்தின்கீழ், பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியின வகுப்பினர், அனைத்துப் பிரிவுகளையும் சார்ந்த    பெண்களே அதிகளவு பயனடைந்து வருகின்றனர். எடுத்துக் காட்டாக, தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகளில், கிட்டத்தட்ட 85-90% பேர் பெண்களாக உள்ளனர். அதே போன்று, தேசிய அளவில், உருவாக்கப்பட்ட வேலை நாள்களில், சுமார் 57.19% வேலைகள் பெண்களுக்குத் தரப்பட்டுள்ளன. எனவே, இந்த நிதியாண்டில்  100 நாள் வேலைத் திட்டத்தை  முறையாக செயல்படுத்த, ஊதியம் மற்றும் பொருள்கள் வழங்குவதற்கான நிதியை அதிகப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில்,  100 நாள் வேலை திட்டத்துக்கு 21.6% குறைவாக நிதி  ஒதுக்கப்பட்டுள்ளது. 

கழுதை தேய்ந்து கட்டெறும்பா?

2021 - 2022 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அந்தத் திட்டத்திற்கு 98,467.85 கோடி ஒதுக்கப்பட்டது, 2022-2023 ஆம் ஆண்டு   ரூ.73 ஆயிரம் கோடியாகக் குறைக்கப்பட்டது. சமீபத்திய நிதிநிலை அறிக்கையில், அதற்கான நிதியை ரூ.60 ஆயிரம் கோடி யாகக் குறைத்திருக்கிறார்கள். இதில் இன்னும் கொடுமை என்ன வென்றால், மாநில அரசும் குறிப்பிட்ட அளவு நிதி அளிக்கவேண்டும் என்று ஒன்றிய அரசு கூறியிருப்பதுதான். கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை!

காங்கிரஸ் தலைவர் கருத்து

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர்  மல்லிகார்ஜுன கார்கே ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், 

‘ஒன்றிய பட்ஜெட்டில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு நிதி 33 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. ‘‘இந்தத் திட்டம் வேலைவாய்ப்பு வழங்குவதற்கானது அல்ல'' என்று ஒன்றிய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.  

இந்தத் திட்டத்தின் கீழ், 100 சதவிகிதம் ஒன்றிய அரசால் மேற்கொள்ளப்படும் பணிக்கு 40 சதவிகித நிதியை மாநிலங்கள் வழங்க வேண்டுமாம். இந்தத் திட்டத்தின் மீது ஒன்றிய அரசு கோடரியை பயன்படுத்துகிறது’ என்று கடுமையாக விமர்சிர்த் துள்ளார் காங்கிரஸ் தலைவர் கார்கே.

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம், ஒருதேவை- உந்துதல் திட்டம் மற்றும் குறிப்பாக ஏழை மாநிலங்களில் முக்கியமானது மற்றும் தனிப்பட்ட மாநிலங்கள் மீது பொறுப்பை சுமத்துவதற்கு பதிலாக அதன் வலுவான நிதியை உறுதி செய்வது  ஒன்றிய அரசின் கடமையாகும். ஏழைகளின் வேலை செய்யும் உரிமையை வழங்குவதில் அதன் திறனை உணர்ந்து, 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் மீதான அணுகுமுறையை அரசாங்கம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிறது ஹிந்து தலையங்க செய்தி!

100 நாள் வேலை திட்டம் என்று அது அழைக்கப்பட்டாலும் மிகக் குறைவாக நிதி ஒதுக்கப்படுவதால் இதில் பதிவு செய்துகொண்டு வேலை செய்யும் குடும்பம் ஒன்றுக்கு சராசரியாக ஆண்டுக்கு 20 நாள்கள் தான் வேலை கிடைக்கிறது. மேலும் நிதி குறைக்கப்பட்டு இருப்பதால் 10 நாள்களுக்குக் கூட வேலை கொடுக்க முடியாது.

கிராமப்புற ஏழை மக்களின் வறுமையை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தை மோடி அரசு  அழித்துக்  கொண்டிருக்கிறது இந்த அரசு. கிராமப்புற ஏழைகளின் வயிற்றில் அடிப்பதாகும்.

பலதரப்பிலும் கண்டனக் குரல்!

இது குறித்து கேரளாவின் நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் கூறுகையில், "நாடு மிக மோசமான வேலைவாய்ப்புத் திண்டாட் டத்தை சந்திக்கும் இவ்வேளையில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த ஆண்டைப்போலவே வஞ்சித்துள்ளது. இந்தப் பற்றாக்குறை நிதியை வைத்துக் கொண்டு ஏற்கெனவே தொடங்கிய பணிகளைக் கூட முடிக்க இயலாது" என்று கூறினார்.

திருவள்ளுவரின் எச்சரிக்கை!

100 நாள் வேலைத்திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்காததால் ஏழைகள் வஞ்சிக்கப்படுவதாக தற்போது பரவலாக பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனக் குரல் எழுந்து வருகிறது.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை (குறள் 555)

கொடுங்கோல் ஆட்சியால் துன்புற்று வடிக்கும் மக்களின் கண்ணீர், ஆட்சியாளனின் செல்வத்தை அழிக்கும் படையாகும் என்கிறார் திருவள்ளுவர் - எச்சரிக்கை!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

18.2.2023

இடுகையிட்டது parthasarathy r நேரம் 4:55 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: 100நாள்வேலை, அறிக்கை
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

செங்காந்த மலர்

செங்காந்த மலர்
தமிழ் நாட்டு மலர்
Powered By Blogger

2026 பெரியார் விருது பெற்றோர்களுக்கு பாராட்டு

2026 பெரியார் விருது பெற்றோர்களுக்கு பாராட்டு
பெரியார் மய்யம், சென்னை, 17.01.2026

தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு அளிக்கவேண்டிய நிதியை அளிக்க மறுப்பது தி.மு.க. ஆட்சிக்கு நிதி நெருக்கடியை உண்டாக்கும் நோக்கம்தானே! ஒன்றிய அரசின் போக்கைக் கண்டித்து வரும் 3 ஆம் தேதி கழக மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

எனக்கு பிடித்தவை

  • 2.வாழ்வியல் சிந்தனைகள்
  • 1.தமிழர் தலைவர்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

பின்பற்றுபவர்கள்

Translate மொழிபெயர்

Wikipedia

தேடல் முடிவுகள்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • இந்தியாவில் இரண்டே அணிகள்தான்; ஒன்று, சமூகநீதி அணி; மற்றொன்று சமூகநீதிக்கு (இட ஒதுக்கீட்டுக்கு) எதிரான அணி!
      ‘‘ஊன்றிப் படியுங்கள், உண்மையைப் பரப்புங்கள்!’’ உயர்ஜாதிக் கூட்டம் இடஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும் என்று கூப்பாடு போடத் தொடங்கியிருக்கிறது! இந...
  • அமெரிக்கா மாநாட்டில் பங்கேற்ற தோழர்கள் தமிழகம் திரும்பினர்
    அமெரிக்கத் தலைநகர் வாசிங்டனில்  செப்டம்பர் 21, 22 ஆகிய நாள்களில் அமெரிக்க மனித நேயர் அமைப்பும், பெரியார் பன்னாட்டு அமைப்பும் ஒருங்கிணைந்த...
  • கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பால் சிவந்தது சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
    சென்னை, பிப்.7  உலகளவில் சமூக மற்றும் பொருளாதாரச் சிந்தனைக்குப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய மாமேதை கார்ல் மார்க்ஸ்சின் பொருளாதாரச் சி...
  • தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ‘‘செம்மொழி இலக்கிய விருதுடன்’’ தலா ரூ.5 லட்சம் பரிசுத் தொகை!
      ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சரின் அறிவிப்பு –‘பரந்த, விரிந்த மனப்பான்மையாளர்’ அவர் என்பதை உலகறியச் செய்யும் எடுத்துக்காட்டு துணைவேந்தர்...
  • ஜாதியப் பாகுபாட்டைத் தடுக்கும் யுஜிசி விதிமுறைகளை எதிர்த்து வடமாநிலங்களில் பார்ப்பன மாணவர்கள் போராட்டம்!
      பார்ப்பனர்களைப் புரிந்துகொள்வீர்! புதுடில்லி, ஜன. 28  பல்கலைக்கழக மானியக் குழு ஜனவரி 13, 2026 அன்று வெளியிட்ட ‘‘உயர்கல்வி நிறு வனங்களில் ...
  • பெரியார் என்றால் பார்ப்பனர்கள் பதறுகிறார்கள் – பெரியார் இன்னும் இவர்களைப் பதறடித்துக் கொண்டே இருப்பார்!
    * நாடாளுமன்றத்தில் கலைஞானி கமல்ஹாசன் பேசியதில் என்ன குற்றம்?  தந்தை பெரியார் கூறிய கருத்தைத் திரித்துப் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தார...
  • சபரிமலை தங்கத் திருட்டு வழக்கு: 21 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
    நகைகள் மீண்டும் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டபோது நான்கு கிலோவுக்கும் அதிகமான தங்கம் மாயமானது அம்பலமானது. - திருவனந்தபுரம்: சபரிமலை ...
  • கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஞானபீட விருது
    கால் நூற்றாண்டுக்குப் பிறகு ‘ஞானபீட விருது’ பெற்றார் கவிப்பேரரசு வைரமுத்து ஏற்புரையில் இலக்கியத்திற்கு தனிப் பல்கலைக் கழகம் தேவை என்று வேண்ட...
  • இன்று புரட்சியாளர் லெனின் மறைவு நாள் (21.01.1924)
      இன்று புரட்சியாளர் லெனின் மறைவு நாள் (21.01.1924) சோவியத் யூனியனின் தந்தை என்று அழைக்கப்படும் புரட்சியாளர் விளாடிமிர் லெனின் அவருடைய 102-ஆ...
  • டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஏட்டுக்குத் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அளித்த பேட்டி
      இன்றைய நிலையில், பெரியாரின் பொருத்தப்பாடு என்ன? பார்ப்பனீய எதிர்ப்பு ஏன் என்பது உள்பட ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேட்டுக்கு விடையளித்தார் தி...

லேபிள்கள்

  • 10% ஒதுக்கீடு
  • 100 நாள் வேலை
  • 100நாள்வேலை
  • 2020
  • 2021
  • 2024
  • 27%
  • 60 ஆண்டு
  • 7 திட்டங்கள்
  • 91
  • அக்னிபாதை
  • அகவிலைப்படி
  • அஞ்சலகம்
  • அண்ணா
  • அண்ணா பல்கலை
  • அண்ணா பல்கலைக்கழகம்
  • அண்ணாமலை
  • அணி
  • அதிபர்
  • அதிரடி அன்பழகன்
  • அநீதி
  • அபராதம்
  • அபாயம்
  • அம்பத்தூர்
  • அம்பேத்கர்
  • அமிர்தலிங்கம்
  • அமிர்ஷா
  • அமெரிக்கா
  • அமைச்சர்
  • அய்.அய்.டி
  • அய்.அய்.டி.
  • அய்.ஏ.எஸ்.
  • அய்.நா.
  • அய்.பி.எஸ்
  • அய்தராபாத்
  • அய்யப்பன் கோயில்
  • அயோத்தி
  • அயோத்திதாசர்
  • அயோத்திதாசர் மணி மண்டபம்
  • அர்ச்சகர்
  • அர்ச்சகர் உரிமை
  • அர்ச்சகர் பார்ப்பனர்
  • அரக்கோணம்
  • அரசமைப்பு சட்டம்
  • அரசாணை
  • அரசு
  • அரசு அலுவலகங்கள்
  • அரசு அறிவிப்பு
  • அரசுப் பணி
  • அரபு மொழி
  • அரும்பாக்கம்
  • அவதூறு
  • அவமதிப்பு
  • அளிப்பு
  • அறநிலையத் துறை
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிவிப்பு
  • அறைஞாண்
  • அன்பழகனார்
  • அனுமதி மறுப்பு
  • அனுமான்
  • அனைத்து கட்சி கூட்டம்
  • அனைத்து சாதியினர்
  • அனைத்து ஜாதி
  • அனைத்து ஜாதியினர்
  • அனைத்துக் கட்சிக் கூட்டம்
  • அனைத்துக்கட்சி
  • அனைத்துக்கட்சி கூட்டம்
  • அஷ்டமி நவமி
  • ஆ.ராசா
  • ஆகமம்
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் கி.வீரமணி
  • ஆசிரியர் கி.வீரமணி பேட்டி
  • ஆசிரியர் பேட்டி
  • ஆசிரியர்அறிக்கை
  • ஆட்சி
  • ஆணவக் கொலை
  • ஆணவக் கொலை தடுப்பு சட்டம்
  • ஆணவப் படுகொலை
  • ஆணை
  • ஆந்திரா
  • ஆபத்து
  • ஆபாச நடனம்
  • ஆய்வரங்கம்
  • ஆய்வுக்குழு
  • ஆயுத பூஜை
  • ஆயுர்வேதம்
  • ஆர்.எஸ்.எஸ்
  • ஆர்ப்பாட்ட அறிவிப்பு
  • ஆர்ப்பாட்டம்
  • ஆர்பாட்டம்
  • ஆரப்பா
  • ஆரியம்
  • ஆரியர்
  • ஆவணம்
  • ஆளுநர்
  • ஆளுநர் விருந்து
  • ஆன்மிக சொற்பொழிவு
  • ஆன்மீகம்
  • ஆனந்த விகடன்
  • ஆனைமுத்து
  • இ.டபில்யூ.எசு
  • இச்சை
  • இசை
  • இட ஒதிக்கீடு
  • இட ஒதுக்கீடு
  • இடிப்பு
  • இணையதளம்
  • இந்தி
  • இந்தி அழிப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்திய இராணுவம்
  • இந்து சட்டம்
  • இந்து தமிழ் திசை
  • இந்து தமிழ்திசை நாளேடு
  • இந்து திருமணம்
  • இந்து நாளேடு
  • இந்து மாநாடு
  • இந்துத்துவா
  • இந்துமதப் பண்டிகைகள்
  • இந்துமதம்
  • இமாம் பசந்த்
  • இரங்கல்
  • இரங்கல் அறிக்கை
  • இரயில் எரிப்பு
  • இரயில்வே
  • இராசு
  • இராமராஜ்யம்
  • இராமன்
  • இராமன் பாலம்
  • இராமன்கோயில்
  • இராமாயணம்
  • இராஜஸ்தான்
  • இல்லத்திறப்பு
  • இலங்கை
  • இலவசம்
  • இளங்கோவன்
  • இளைஞர் அணி
  • இன்பக்கனி
  • உ.பி.
  • உ.வே.ச
  • உச்ச நீதிமன்ற தீர்ப்பு
  • உச்சநீதிமன்றம்
  • உடல்
  • உடைப்பு
  • உத்திரமேரூர்
  • உதயநிதி
  • உயர் நீதிமன்ற தீர்ப்பு
  • உயிரிழப்பு
  • உரம்
  • உரிமை
  • உரிமைத்தொகை
  • உரை
  • உலகத் தமிழ் மாநாடு
  • உள்ஒதுக்கீடு
  • உறுதிமொழி
  • ஊத்துக்கோட்டை
  • ஊதியம்
  • ஊரக வளர்ச்சி
  • ஊழல்
  • எச்சரிக்கை
  • எடைக்கு எடை
  • எதிர்ப்பு
  • எழுத்தியல்
  • எழும்பூர்
  • எழும்பூர் ரயில் நிலையம்
  • என்எல்சி
  • ஒப்பீடு
  • ஒப்புதல்
  • ஒரே மொழி
  • ஒற்றை பத்தி
  • ஒற்றைப் பத்தி
  • ஒற்றைப்பத்தி
  • ஒன்றிய அரசு
  • ஓசூர்
  • ஓதுவார்
  • ஓபிசி
  • ஓய்வூதியம்
  • ஓவர் சீஸ் வங்கி
  • க்யூஆர் கோட்
  • கச்சத்தீவு
  • கட்டுமானத் தொழிலாளர்
  • கடவுள்
  • கடவுள் மறுப்பு
  • கடன்
  • கடிதம்
  • கடைசி
  • கண்டணம்
  • கண்டன ஆர்ப்பாட்டம்
  • கண்டனம்
  • கண்ணதாசன்
  • கண்மதியன்
  • கம்யூனிஸ்ட்
  • கமலஹாசன்
  • கர்நாடகம்
  • கர்நாடகா
  • கர்ப்பூரி தாகூர்
  • கரப்பான் பூச்சி
  • கருணை வேலை
  • கருத்தரங்கம்
  • கருத்தியல் பயிற்சி
  • கருத்து
  • கருத்துப்படம்
  • கருத்துரை
  • கருநாடக மாநிலம்
  • கரோனா
  • கல்
  • கல்வி
  • கல்வி அமைச்சர்
  • கல்வி நிலையம்
  • கல்வி வளாகம்
  • கல்வெட்டு
  • கலந்துரையாடல்
  • கலாச்சாரம்
  • கலி பூங்குன்றன்
  • கலிபூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைஞர் சிலை
  • கலைஞர் நூற்றாண்டு நூலகம்
  • கலைஞருடன் – ஒரு நேர்காணல்
  • கவிஞர்
  • கவிஞர் கலி
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கவிஞர் கலிபூங்குன்றன்
  • கவிதை
  • கவியரங்கம்
  • கவுதமன்
  • கழக நூல்கள்
  • கழகம்
  • கழுதை
  • கன்னிமேரா
  • கனடா
  • கனிம நிலங்கள்
  • கனிமொழி
  • காணொலி
  • காந்தி
  • காப்பீடு
  • காமராஜர்
  • காரணம்
  • காரல் மார்க்ஸ்
  • காலை உணவு
  • காலை சிற்றுண்டி
  • காவி உடை
  • கி.வீரமணி
  • கி.வீரமணி அறிக்கை
  • கி.வீரமணி அறிக்கை
  • கியூட்
  • கிரிமிலேயர்
  • கிருஷ்ணகிரி
  • கீழ்ப்பாக்கம்
  • கீழடி
  • குடந்தை
  • குடியரசுத் தலைவர்
  • குடியிருப்பு
  • குடியுரிமை
  • குடியுரிமை சட்டம்
  • குடியுரிமை திருத்தச் சட்டம்
  • குடியுரிமைச் சட்டம்
  • குமரி முதல்
  • குமுதம்
  • குலக்கல்வி
  • குவைத்
  • குழந்தை
  • குழந்தை திருமணம்
  • குழந்தை தொழிலாளர்
  • குழந்தையின்மை
  • குற்றச்சாட்டு
  • குற்றம்
  • குறள்
  • குன்றக்குடி அடிகளார்
  • குஜராத்
  • கூட்டம்
  • கூட்டமைப்பு
  • கூடுவாஞ்சேரி
  • கேதார்நாத்
  • கேந்திர வித்யாலயா
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளா
  • கேள்வி
  • கைது
  • கைபேசி
  • கொடும்பாவி எரிப்பு
  • கொடுமை
  • கொரோணா
  • கொலை
  • கொலை முயற்சி
  • கொலைக்கருவி
  • கொள்கை பரவல்
  • கோ.தங்கராசு
  • கோகுல்ராஜ்
  • கோத்ரா
  • கோத்ரேஜ்
  • கோயில்
  • கோரிக்கை
  • கோவிட்- 19
  • கோவில்
  • கோவை
  • ச்டாலின்
  • சகுனம்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சாரி
  • சங்கரையா
  • சங்கொலி
  • சட்ட எரிப்பு
  • சட்ட மன்றம்
  • சட்ட வரைவு
  • சட்ட விழிப்புணர்வு
  • சட்டசபை
  • சட்டத்திருத்தம்
  • சட்டம்
  • சட்டமன்ற தீர்மானம்
  • சத்திரியர்
  • சதி
  • சந்தா
  • சந்திப்பு
  • சந்துரு பரிந்துரை
  • சபரிமலை
  • சம்புகன்
  • சமசுக்கிருதம்
  • சமசுகிருதம்
  • சமஸ்கிருதம்
  • சமூக நீதி
  • சமூக நீதி நாள்
  • சமூகநீதி
  • சமூகநீதி அணி
  • சமூகநீதி நாள்
  • சரஸ்வதி
  • சனாதனம்
  • சாக்கோட்டை
  • சாகித்ய அகாடமி
  • சாதனை
  • சாதி
  • சாதி சான்றிதழ்
  • சாமி
  • சாமியார்
  • சாய்பாபா
  • சாலை
  • சான்றிதழ்
  • சிஏஏ
  • சிங்கப்பூர்
  • சிங்கப்பெருமாள் கோவில்
  • சிங்காரவேலர்
  • சித்தராமய்யா
  • சித்தராமையா
  • சித்திரபுத்திரன்
  • சிந்துவெளி
  • சிபிஎஸ்இ
  • சிபிஎஸ்சி
  • சிலம்பம்
  • சிலை
  • சிலை திறப்பு
  • சிறப்பு
  • சிறப்பு கூட்டம்
  • சிறை
  • சீட்
  • சீனா
  • சுகாதாரத்துறை
  • சுடுகாடு இடுகாடு
  • சுதந்திரப் போராட்ட வீரர்
  • சுந்தரம்
  • சுற்றறிக்கை
  • சூத்திரன்
  • சூரிய கிரகணம்
  • சூளுரை
  • செக்கடி குப்பம்
  • செங்கல்பட்டு
  • செம்மொழி
  • செம்மொழி இலக்கிய விருது
  • செம்மொழி நூலகம்
  • செய்தி
  • செய்யாறு
  • செயலி
  • செயற்குழு
  • செல் எண்கள்
  • சென்னை
  • சேது
  • சேது கால்வாய்
  • சேது பாலம்
  • சேலம்
  • சேலம் மாநாடு
  • சொர்க்கவாசல்
  • சோசலிசம்
  • சோனியா
  • ஞானபீட விருது
  • டாக்டர்
  • டி ஆர் பாலு
  • டி.ஆர்.பாலு
  • டில்லி
  • டெல்லி
  • டைம்ஸ்
  • டைம்ஸ் ஆஃப் இந்தியா
  • தகவல் தொழில் நுட்பக்குழு
  • தகைசால் தமிழர்
  • தகைசால் தமிழர் விருது
  • தங்கம் திருட்டு
  • தஞ்சை
  • தடுக்க சட்டம்
  • தடுப்பு
  • தடுப்பு சட்டம்
  • தடுப்பூசி
  • தடை மறுப்பு
  • தண்டனை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியாரின் பெயர்
  • தமிழ்
  • தமிழ் அர்ச்சனை
  • தமிழ் இணையம்
  • தமிழ் கட்டாயம்
  • தமிழ் சங்கம்
  • தமிழ் தாய் வாழ்த்து
  • தமிழ் பண்பாட்டு மாதம்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் மாநாடு
  • தமிழ் மொழி
  • தமிழ் வீரர்கள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு முதல்வர்
  • தமிழ்மொழி வாழ்த்து
  • தமிழர்
  • தமிழர் தலைவர்
  • தமிழில் குடமுழுக்கு
  • தர்மபுர ஆதீனம்
  • தர்மபுரி
  • தர்மம்
  • தலைப்பு உரை
  • தலைமை
  • தலைமை நீதி
  • தலையங்கம்
  • தலைவர்கள்
  • தள்ளுபடி
  • தனியார் நிறுவனங்கள்
  • தனியார்மயம்
  • தனுஷ்கோடி
  • தாய்லாந்து
  • தாழ்த்தப்பட்டோர்
  • தி.மு.க. அரசு
  • தி.மு.க. மாணவரணி
  • திடல்
  • திமுக
  • தியாகராயர் நகர்
  • திராவிட இயல்
  • திராவிட தேசியம்
  • திராவிட மாடல்
  • திராவிடப் பாரம்பரியம்
  • திராவிடம்
  • திராவிடம் வென்றது!
  • திராவிடர்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் திருநாள்
  • திரிபு வேலை
  • திருக்குறள்
  • திருச்சி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருமணம்
  • திருமா
  • திருமாவளவன்
  • திருமாவேலன்
  • திருமுருகன் காந்தி
  • திருவள்ளுவர்
  • திருவள்ளூர்
  • திருவாடுதுறை
  • தில்லி
  • தில்லி போராட்டம்
  • திவாகரன்
  • திறப்பு
  • தினகரன்
  • தினசெய்தி
  • தினத்தந்தி
  • தினமணி
  • தினமணி கதிர்
  • தினமலர்
  • தீக்கதிர்
  • தீண்டாமை
  • தீபாவளி
  • தீர்ப்பு
  • தீர்மானம்
  • துக்லக்
  • துக்ளக்
  • துக்ளக் பதிலடி
  • துணை முதலமைச்சர்
  • துயர் துடைப்பு
  • துயர்துடைப்பு
  • துரை.சந்திரசேகரன்
  • துரைமுருகன்
  • துளக்
  • தெலுங்கானா
  • தென் சென்னை
  • தேசிய கல்வி
  • தேசிய சட்டக் கல்லூரி
  • தேசியநூல்
  • தேர்தல்
  • தேர்தல் அறிக்கை
  • தேர்தல் பத்திரம்
  • தேர்வாணையம்
  • தேர்வு
  • தேவதாசி
  • தேவாரம்
  • தொடக்கம்
  • தொண்டு
  • தொப
  • தொல்.திருமாவளவன்
  • தொழில்படிப்பு
  • தொழிலாளர்
  • தொழிலாளர் கொள்கை
  • தொழிலாளர் போராட்டம்
  • தொழிற்சாலை
  • தோள்சீலை
  • நகை
  • நடராசன்
  • நடுவன் அரசு துறை
  • நடைபாதைக் கோயில்கள்
  • நம்பிக்கை
  • நரபலி
  • நரிக்குறவர்
  • நரேந்திரர்
  • நல வாரியம்
  • நவராத்திரி
  • நன்கொடை
  • நன்றி
  • நாகநாதன்
  • நாகை
  • நாங்குநேரி
  • நாத்திகம்
  • நால்வர்
  • நிகழ்வுகள்
  • நிதி
  • நியமனம்
  • நிர்மலா
  • நிறைவு
  • நினைவிடம்
  • நினைவு
  • நினைவு நாள்
  • நினைவுநாள்
  • நீக்கம்
  • நீட்
  • நீட் எதிர்ப்பு
  • நீதிக்கட்சி
  • நீதித்துறை
  • நீதிபதி
  • நீதிபதி நியமனம்
  • நீதிபதி மோகன்
  • நீதிபதிகள்
  • நீதிமன்றம்
  • நீரிழிவு
  • நீலச் சட்டை பேரணி
  • நுங்கம்பாக்கம்
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூலகம்
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு விழா
  • நெய்வேலி
  • நெல்லை
  • நேர்காணல்
  • நோபல் பரிசு
  • பக்தி
  • பகவத் கதை பாராயணம்
  • பகவத்கீதை
  • பகுத்தறிவாளர் கழக மாநாடு
  • பசு
  • பஞ்சாப்
  • படத்திறப்பு
  • படம் திறப்பு
  • பண்பாட்டுப் படையெடுப்பு
  • பணி
  • பணிஓய்வு
  • பணிநிறைவு
  • பணிபுரியும் பெண்கள்
  • பணியாளர்
  • பணியிடை நீக்கம்
  • பதக்கம்
  • பதவி உயர்வு
  • பதவி ஏற்பு
  • பதவியேற்பு
  • பதில்
  • பதிலடி
  • பதிவு
  • பயணம்
  • பயிலரங்கம்
  • பரதம்
  • பரப்புரை
  • பரப்புரை திட்டம்
  • பரிசுத் தொகை
  • பல்கலைக்கழகம்
  • பல்லக்கு
  • பல்லாவரம்
  • பலகை
  • பவழ விழா
  • பழங்குடியினர்
  • பள்ளி
  • பள்ளிக்கல்வித்துறை
  • பஜனை
  • பா.இயேசுராஜா
  • பா.ஜ.க
  • பா.ஜ.க.
  • பாட திட்டம்
  • பாடம்
  • பாண்டே
  • பார்ப்பன ஆதிக்கம்
  • பார்ப்பன பக்தி!
  • பார்ப்பன வெறி
  • பார்ப்பனத் திமிர்
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர் எதிர்ப்பு
  • பாரத ரத்னா
  • பாரதிதாசன் விருது
  • பாரம்பரிய சின்னம்
  • பாராட்டு
  • பாராட்டு விழா
  • பாலபிரஜாபதி
  • பாலம்
  • பாலியல் லீலை
  • பாலியல் வன்கொடுமை
  • பாவாணர்
  • பாஜக
  • பி.எப்.
  • பிச்சை
  • பிணை
  • பிபிசி
  • பிரதமர்
  • பிராமண – சூத்திரப் போராட்டம்
  • பில்கிஸ் பானு
  • பிள்ளையார் ஊர்வலம்
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பு
  • பிற்படுத்தப்பட்டோர்
  • பிற இதழ்
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பிறந்தநாள் அறிக்கை
  • பிறமொழி கற்றோர்
  • பின்னணி
  • பிஜேபி அரசு
  • பீகார்
  • புகழாரம்
  • புகார்
  • புத்தக வெளியீடு
  • புத்தகக் காட்சி
  • புத்தாண்டு
  • புதிய கல்வி
  • புதிய கல்வி கொள்கை
  • புதிய சட்டம்
  • புதிரை வண்ணார்
  • புதுச்சேரி
  • புதுடில்லி
  • புரட்சிக்கவி
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்டு இமாலயப்புரட்டு
  • புலம்பெயர் தமிழர்
  • புலவர்
  • புலவர் வீரமணி
  • புலால் உணவு
  • புழல்
  • புறக்கணிப்பு
  • பூணூல்
  • பூமி பூஜை
  • பெங்களூரு
  • பெட்ரண்ட் ரஸல்
  • பெண்
  • பெண் ஏன் அடிமையானாள்?
  • பெண்கள்
  • பெண்கள் ஆணையம்
  • பெண்களுக்கான இடஒதுக்கீடு
  • பெண்களுக்கு இட ஒதுக்கீடு
  • பெண்ணுரிமை
  • பெரம்பூர் பி.சபாபதி
  • பெரியார்
  • பெரியார் 1000
  • பெரியார் உலகத்திற்கு நன்கொடை
  • பெரியார் உலகம்
  • பெரியார் களம்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் நினைவிடம்
  • பெரியார் நூல்கள்
  • பெரியார் பணி
  • பெரியார் பல்கலைக்கழகம்
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் மண்
  • பெரியார் லைஃப்
  • பெரியார் விருது
  • பெருமை
  • பெல்
  • பேட்டி
  • பேரடை
  • பேரணி
  • பேரறிஞர் அண்ணா
  • பேராசிரியர்
  • பேரிடர்
  • பேருந்து
  • பொங்கல்
  • பொதுக்குழு
  • பொதுத்தேர்வு
  • பொருளாதாரம்
  • பொறுப்பாளர்
  • பொறுப்பு
  • போட்டித் தேர்வு
  • போதைப் பொருள்
  • போராட்டம்
  • மக்களவை உறுப்பினர்
  • மக்களவைத் தேர்தல்
  • மகப்பேறு விடுப்பு
  • மகளிர்
  • மகளிர் உரிமைத் தொகை
  • மகளிர் நாள்
  • மகாராணி
  • மகாவீரர்
  • மஞ்சை வசந்தன்
  • மடையர்
  • மணல் திட்டு
  • மணவழகர் மன்றம்
  • மணவிழா
  • மணிப்பூர்
  • மணிமண்டபம்
  • மணியம்மையார்
  • மணியரசன்
  • மத்திய அரசு
  • மதச்சார்பின்மை
  • மதசார்பின்மை
  • மதம்
  • மதவாதம்
  • மதவெறி
  • மது குடி
  • மராட்டியம்
  • மருத்துவ படிப்பு
  • மருத்துவக் கல்லூரி
  • மருத்துவக் கல்வி
  • மருத்துவம்
  • மருத்துவமனை
  • மருத்துவர்
  • மலம்
  • மலர்
  • மலன்
  • மலேசியா
  • மலையாளம்
  • மழை
  • மழை வெள்ளம்
  • மறியல்
  • மறுப்பு
  • மறைவு
  • மறைவு நாள்
  • மனித உரிமை
  • மனித சங்கிலி
  • மனுதர்ம யோஜனா
  • மனுதர்மம்
  • மனுஷ்யபுத்திரன்
  • மனைவி சம்பளம்
  • மாணவர்
  • மாணவர் கழகம்
  • மாணவர்கள்
  • மாநாடு
  • மாநில அரசு
  • மாநில அரசுப் பணி
  • மாநிலங்களவை
  • மாம்பழம்
  • மார்கழி
  • மாலனுக்கு பதிலடி
  • மாற்றம்
  • மாற்றுத்திறனாளி
  • மாற்றுவோம்
  • மிரட்டல்
  • மின்சாரம்
  • மீட்பு
  • மீனவர்
  • மு க ஸ்டாலின்
  • மு.க. ஸ்டாலின்
  • மு.க.ஸ்டாலின்
  • முத்துக்கூத்தன் நூற்றாண்டு
  • முத்தையன்
  • முதல்வர்
  • முதல்வர் விஜய்
  • முதலமைச்சர்
  • முரசொலி
  • முருகன்
  • முற்பட்டோர்
  • முஸ்லிம்
  • முஸ்லிம்கள்
  • மூட நம்பிக்கை
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை ஒழிப்பு
  • மூடநம்பிக்கைப் பிரச்சாரம்
  • மூடப் பண்டிகை
  • மூதறிஞர் குழு
  • மே நாள்
  • மொழி
  • மொழிகள்
  • மொழிப்போர்
  • மோசடி
  • யாகம்
  • யாழ்ப்பாணம்
  • யுனெசுகொ
  • யுஜிசி விதிமுறை
  • ரங்கராஜ்
  • ரசல்
  • ரமணர்
  • ரயில்வே
  • ரஜினி
  • ராகுல் காந்தி
  • ராணுவம்
  • ராமதாஸ்
  • ராமர் கோயில்
  • ராஜஸ்தான்
  • ரிசர்வ் வங்கி
  • லெனின்
  • வ.உ.சி.
  • வங்கதேசம்
  • வங்கி
  • வட்டாட்சியர்
  • வட இந்தியா
  • வட மாநிலம்
  • வடநாடு
  • வடமாநிலங்கள்
  • வரவு செலவு
  • வரவேற்பு
  • வரி
  • வருகை
  • வழக்கு
  • வழக்கு விசாரணை
  • வழிபாடு
  • வள்ளலார்
  • வன் கொடுமை
  • வன்கொடுமை
  • வன்புணர்வு
  • வன்முறை
  • வன உயிரியல் பூங்கா
  • வா உ சி
  • வாரியம்
  • வாரியார்
  • வாழ்த்து
  • வி.பி.சிங்
  • விசாரணை
  • விடுதலை
  • விடுதலை சந்தா
  • விடுதலை90
  • விடுதலைப் போர்
  • விடுமுறை
  • விபத்து காப்பீட்டுத் திட்டம்
  • விமானநிலையம்
  • வியப்பு
  • விருது
  • விருதுநகர்
  • விலக்கு
  • விவசாயி
  • விவேகானந்தர்
  • விழா
  • விளக்கம்
  • விளையாட்டு
  • விஜயபாரதம்
  • விஸ்வகர்மா திட்டம்
  • வீட்டு நிகழ்ச்சிகள்
  • வீட்டுமனை
  • வெள்ளம்
  • வெள்ளை அறிக்கை
  • வெளியேற்றம்
  • வெற்றி
  • வேங்கை வயல்
  • வேதகிரி சண்முகசுந்தரம்
  • வேதம்
  • வேர்ல்ட் ரெக்கார்ட்
  • வேலை நேரம்
  • வேலைவாய்ப்பு
  • வைக்கம்
  • வைக்கம் நூற்றாண்டு
  • வைகோ
  • வைரசு
  • வைரமுத்து
  • ஜப்பான்
  • ஜாதி
  • ஜாதி உணர்வு
  • ஜாதி கொடுமை
  • ஜாதி நீக்கம்
  • ஜாதி பெயர்
  • ஜாதி பேதம்
  • ஜாதி முறை
  • ஜாதி வாரி கணக்கெடுப்பு
  • ஜாதி வெறி
  • ஜாதியப் பாகுபாடு
  • ஜாதிவாரி கணக்கெடுப்பு
  • ஜூனியர் விகடன்
  • ஜெர்மன்
  • ஸ்டாலின்
  • ஹிந்தி
  • ஹிந்தி எதிர்ப்பு
  • ஹிந்தி எழுத்து அழிப்பு
  • ஹிந்துத்துவா
  • CAB&NRC

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2026 (22)
    • ▼  அக்டோபர் (1)
      • மெய்யா? பொய்யா? (தில்லி போராட்டம் குறித்து அவதூறு)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (5)
  • ►  2025 (23)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (6)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (3)
  • ►  2024 (69)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (10)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (5)
  • ►  2023 (104)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (10)
  • ►  2022 (106)
    • ►  டிசம்பர் (19)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (15)
  • ►  2021 (266)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (31)
    • ►  ஆகஸ்ட் (46)
    • ►  ஜூலை (26)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (17)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (24)
  • ►  2020 (155)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (33)
    • ►  பிப்ரவரி (31)
    • ►  ஜனவரி (42)
  • ►  2019 (149)
    • ►  டிசம்பர் (35)
    • ►  நவம்பர் (37)
    • ►  அக்டோபர் (58)
    • ►  செப்டம்பர் (19)

சிறப்புடைய இடுகை

அமெரிக்கா - வாஷிங்டன் நகரில் பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாடு கோலாகலமாகத் தொடங்கியது

வரவேற்புரை என்னும் தலைப்பில் உரையாற்றிய அமெரிக்க மேரிலாண்ட் மாகாணத்தின் 8-ஆம் மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி ஜாமி ரஸ்கின் அவர்களுக்கு தமி...

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2026 (22)
    • ▼  அக்டோபர் (1)
      • மெய்யா? பொய்யா? (தில்லி போராட்டம் குறித்து அவதூறு)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (5)
  • ►  2025 (23)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (6)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (3)
  • ►  2024 (69)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (10)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (5)
  • ►  2023 (104)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (10)
  • ►  2022 (106)
    • ►  டிசம்பர் (19)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (15)
  • ►  2021 (266)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (31)
    • ►  ஆகஸ்ட் (46)
    • ►  ஜூலை (26)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (17)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (24)
  • ►  2020 (155)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (33)
    • ►  பிப்ரவரி (31)
    • ►  ஜனவரி (42)
  • ►  2019 (149)
    • ►  டிசம்பர் (35)
    • ►  நவம்பர் (37)
    • ►  அக்டோபர் (58)
    • ►  செப்டம்பர் (19)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.