ஞாயிறு, 5 மார்ச், 2023

கீழ்ப்பாக்கம், அரசு மருத்துவமனையில் கோவிலா?

 தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறை அமைச்சரின் கவனத்திற்கு...!

கீழ்ப்பாக்கம், அரசு மருத்துவமனையில் கோவிலா?

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி (தீயணைப்பு நிலையம் அருகில்) வளாகத்தில் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதைக் கண்டித்து "அறிவுவழி காணொலி இயக்கம்" சார்பில் 24.01.2023 அன்று  மதியம் காணொலி இயக்குநர் பழ.சேரலாதன் தலைமையில் சா.தாமோதரன், துரைராஜ், மாணிக்கம், தமிழ்ச்செல்வன் ஆகியோர் மருத்துவ கல்லூரி இயக்குநர் திருமதி.சாந்திமலர் அவர்களைச் சந்தித்து கோயில் கட்டுமானப் பணிகளை நிறுத்தக்கோரி மனு அளித்தனர். உடன் அரசு ஆணையையும், நீதிமன்றத் தீர்ப்பு நகலையும் அளித்தனர். மனு குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மருத்துவ கல்லூரி இயக்குநர் தெரிவித்தார்.

இந்தக் கோயில் சட்டத்திற்குப் புறமான வகையில் அரசு நிலத்தில் கட்டப்படும் கோயிலாகும். இதற்காக யாரிடமும் யாரும் அனுமதி பெறவில்லை.  இவ்வாறான செயலைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொதுப் பணித்துறை கைகட்டி, வாய் மூடி சும்மா இருப்பதிலிருந்தே, இந்த கோயில் கட்டும் பணியைச் செய்பவர்கள் வழக்கமான திரை மறைவுச் சதிச்செயல்கள் மூலம் தங்கள் வேலைகளைச் செய்பவர்கள்என்பதைத் தெளிவுபடுத்தும்.

இந்தக் கோயில் கட்டும் செயலானது, தமிழ்நாடு அரசின் ஆணை 426 நாள்: 13.12.1993 க்கும், சென்னை உயர்நீதிமன்ற ஆணை 07.06.2022 ல் W.P.  27748 of 2022  என்ற வழக்கில் கூறப்பட்ட தீர்ப்புக்கும் எதிரானதாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக