சனி, 24 ஆகஸ்ட், 2024

பெரியார் பெருந்தொண்டர் த.க.நடராசன் மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை | சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு உடற்கொடை வழங்கப்பட்டது

 

விடுதலை நாளேடு

சென்னை, ஆக. 23- சென்னை பெரியார் திடல் பெரியார் புத்தக நிலைய மேலாளரும், திராவிடன் நிதி மேனாள் தலைவரும், இயக்குநரும், பெரியார் மணியம்மை அறக்கட்டளை உறுப்பினருமான பெரியார் பெருந்தொண்டர் த.க.நடராசன் (வயது 87) நேற்று (22.8.2024) இரவு மறைவுற்றார். தகவல் அறிந்த தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்கள் இன்று (23.8.2024) காலை அவரது இல்லத்துக்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, அவரது உடல் சென்னை பெரியார் திடலில் இன்று (23.8.2024) வைக்கப்பட்டு, கழகப்பொறுப்பாளர்கள், பெரியார் திடல் பணியாளர்கள் மரியாதை செலுத்தினர்.

பெரியார் பெருந்தொண்டர் த.க.நடராசன் விழிகள் கொடையாக கண் மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது. அவரது உடல் கொடையாக சென்னை அரசு மருத்துவக்கல்லூரி ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.அவர் மகன் கண்ணுதுரை மற்றும் குடும்பத்தின ருக்கு கழகப்பொறுப்பாளர்கள் ஆறுதல் கூறி னார்கள்.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மோகனா வீரமணி, பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன், ஆடிட்டர் இராமச்சந்திரன், மருத்துவர் மீனாம்பாள், கழகப்பொருளாளர் வீ.குமரேசன், வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி, துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, சுதா அன்புராஜ், சி.வெற்றிச்செல்வி, தங்க.தனலட்சுமி, பசும்பொன், மெர்சி, மஞ்சை வசந்தன், ச.இராஜசேகரன், பழனி ராஜன், காரைக்குடி சாமி. சமதர்மம், மேனாள் மாவட்ட நீதிபதி பரஞ்சோதி, பொறியாளர் வேல்.சோ. நெடுமாறன், அமுதா சவுண்டு சர்வீஸ் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள், தலைமைக்கழக அமைப்பாளர் தே.செ.கோபால், கழக மாவட்டத் தலைவர்கள் தாம் பரம் ப.முத்தையன், தென்சென்னை இரா.வில்வநாதன், வடசென்னை வழக்குரைஞர் தளபதிபாண்டியன், சோழிங்கநல்லூர் வே.பாண்டு மற்றும் பொறுப்பாளர்கள் கோ.நாத்திகன், செ.ர.பார்த்தசாரதி, புரசை சு.அன்புச்செல்வன், அரும்பாக்கம் சா.தாமோதரன், மயிலை சேதுராமன், தி.செ.கணேசன், பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், பெரியார் திடல் பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் இறுதி நிகழ்வில் பங்கேற்றனர்.

இரங்கல்
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் இரங்கலுரையில், பெரியார் பெருந்தொண்டர் த.க.நடராசன் ஆற்றிய தொண்டறப்பணிகளை எடுத்துக்காட்டி, விழிக்கொடை அளித்து, மருத்துவக்கல்லலூரி மாணவர்களுக்கு பயன்படும் வகையில், உடற்கொடை அளித்துள்ளதன்மூலம் பெரியார் வழிகாட்டிய நெறிகளின்படி இறுதிவரை வாழ்ந் துள்ளார் என்பதை நெகிழ்வுடன் குறிப்பிட்டார். 2.9.2024 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நினைவேந்தல் நிகழ்வில் பெரியார் பெருந்தொண்டர் த.க.நடராசன் படத்தைத் திறந்துவைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இரங்கலுரை ஆற்றுகிறார். த.க.நடராசன் உடல் மறைந்தாலும், உணர்வாக நம்முடன் இருப்பார் என்று குறிப்பிட்டார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையை கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி வாசித்தளித்தார்.
அதன்பின்னர், கழகத்துணைத்தலைவர் ’வீரவணக்கம்‘ முழக்கமிட அனைவரும் தொடர்ந்து முழக்கமிட்டனர். தனி வாகனத்தில் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அரசு பொதுமருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.

---------------------------------------------------------------------------------------------------------------------------




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக