சென்னை, மே 29 அரசு பேருந்துகளில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லா பயணத்தை செயல்படுத்த அனைத்து மேலாளர்களுக்கும் முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:போக்கு வரத்து துறையின் மானியக்கோரிக்கை மீது சட்டமன்ற பேரவையில் கடந்த மே 5ஆம் தேதி நடந்த விவாதத்திற்கு பின் போக்குவரத்து துறை அமைச்சர் கீழ்க்கண்ட அறிவிப் பினை வெளியிட்டார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். (தற்போது 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது) மேற்கண்ட அறிவிப்பினை உடனடியாக நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக