May 29, 2022 • Viduthalai
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உருவச் சிலையினை நேற்று (28.05.2022) தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசுச் செயலாளர் மகேசன் காசிராஜன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக