தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் இன்று (15.7.2023) மாலை கலைஞர் நூற்றாண்டினையொட்டி, மிகப்பொருத்தமாக கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை, ‘திராவிட மாடல்' ஆட்சியின் நாயகரான ‘திராவிட மாடல்' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்கிறார்!
2.13 லட்சம் சதுர அடி பரப்பில் ரூ.114 கோடி மதிப்பீட்டில், அடித்தளம், தரைத் தளத்தோடு, 6 தளங்களுடன் பிரமாண்டமான நூலகமாக அது திகழ்கிறது என்பது போற்றத்தகுந்த, வியக்கவேண்டிய அரிய சாதனையாகும்!
அன்று, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நமது முத்தமிழறிஞர் கலைஞர் சிறப்பாக சென்னையில் அமைத்து, அண்ணாவுக்கு அவர் பெருமை சேர்த்து, அறிவு நீரோடை பாயச் செய்தார்.
இன்று, அவரது மகன், ஆற்றலாளரான ஆட்சியாளர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இப்படி ஓர் அறிவின் ஊற்றை, கல்வியின் தேவையை உணர்ந்து பொது மக்களுக்குப் பயனுறும் வகையில் இந்நூலகம்மூலம் தொண்டறமாகச் செய்துள்ளது மிகவும் பாராட்டி வரவேற்கத்தகுந்தது.
சென்னையில், பல்நோக்கு மருத்துவமனை திறக்கப்பட்டது சில வாரங்களுக்குமுன் - அது உடலை வளப்படுத்த! மதுரையில் இந்த கலைஞர் நூற்றாண்டு நூலகம் மக்களின் அறிவு வளத்தைப் பலப்படுத்த!
திருவாரூரில் திருமதி தயாளு அம்மாள் அறக்கட்டளையின் சார்பாக அமைக்கப் பட்ட ‘‘கலைஞர் கோட்டம்'' ஒரு சிறந்த வரலாற்றுக் கருத்தோவிய காட்சியகம்!
இப்படி நடமாடும் நூலகமான, உழைப்பிற்கு ஈடு எதுவுமில்லை என்ற அந்த ‘மானமிகு சுயமரியாதைக்காரருக்கு' எத்தனை சிறப்புகள் - ‘பேனா சின்னம்' உள்பட ஏற்படுத்தினாலும் அவை திராவிட இயக்கத்தின் சாதனைச் சரித்திரம்தான்!
சாதனைகள் பெருகட்டும்! மக்கள் மகிழட்டும்!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
15.7.2023
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக